Loading...

முற்றிலும் ஜெயம்

Stella Ramola
23 Jul
அன்பு நண்பரே, இன்று ரோமர் 8: 37-ல் உள்ள வசனத்தை தியானிப்போம், "இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூறுகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே."  ஆம், இயேசு உங்களை நேசிப்பதால், அவர் உங்களை இந்த உலகில் ஜெயங்கொள்ளுகிறவர்களாக மாற்றுகிறார். இன்றும், உங்கள் வாழ்க்கையில் பல குழப்பங்களுடன் நீங்கள் இந்த செய்தியைப் வாசித்துக் கொண்டிருக்கலாம், உங்கள் வாழ்க்கை எங்கு செல்கிறது என்பது உங்களுக்குத் தெரியாது, அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று உங்களுக்குத் தெரியாமலிருக்கலாம், எதிர்காலம் என்னவென்று தெரியாமல் தடுமாறலாம்.  நீண்ட காலமாக கஷ்டத்தை அனுபவிப்பதால் இறந்து விடலாம் என நினைக்கலாம். நோய், கடன், வேலையில்லாமை  அல்லது படிப்பில் தோல்விகள் காணப்படலாம், ஆனால் பிரியமான நண்பரே, இந்த உலகில் உங்களை ஒரு வெற்றியாளராக மாற்றுவதாக தேவன் வாக்குறுதி அளிக்கிறார்.
 
பிலிப்பியர் 4: 13-ன் படி இயேசு உங்களை நேசிப்பதால், உங்களை பலப்படுத்துகிற கிறிஸ்துவினால் எல்லாவற்றையும் செய்ய உங்களுக்கு பெலனுண்டு. நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும், தேவன் உங்களை பலப்படுத்துவார். என்ன செய்வது, எப்படி செய்வது என்று அவர் உங்களுக்குக் கற்பிப்பார். என்ன பேச வேண்டும் என்று அவர் உங்களுக்குச் சொல்லுவார். அவர் உங்களுக்கு சிகிச்சை அளிப்பார். அவர் உங்களுக்கு ஞானத்தைத் தருவார். அவர் உங்களிடம் அன்பு காண்பிப்பதால் அவர் உங்களுக்கு சமாதானம் தருவார்.
 
ஆகவே என் நண்பரே, உற்சாகமாயிருங்கள்! நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் நீங்கள் ஜெயம்  பெறுவீர்கள். முற்றிலும் ஜெயங்கொள்ளவீர்கள். கோலியாத்துக்கு எதிராக தாவீது எவ்வாறு வெற்றி பெற்றான்  என்பதை வேதத்தில் வாசிக்கிறோம். அவர் ஈட்டிகள், வாள்கள் அல்லது கேடயங்களை  அல்ல. கர்த்தருடைய நாமத்தை நம்பியிருந்தார். அதுபோல, நீங்களும் தேவபலத்தை நம்புங்கள். அப்பொழுது வெற்றி பெறுவீர்கள். குதிரை யுத்த நாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும். அவரைப் பற்றிய அறிவின் வாசனையை  எல்லா இடங்களிலும் வீச நம்மை பயன்படுத்துவார்.”
Prayer:
அன்பின் தகப்பனே,
 
நீரே என் நம்பிக்கை. நீர் என்னை நேசிப்பதால் என்னை வெற்றியின் வழியில் நடத்துவீர்கள் என்ற உமது வாக்குறுதிக்கு நன்றி. ஆண்டவரே, நான் உமது பலத்தையும் வெற்றிக்காக உமது  நாமத்தையும்  நம்புகிறேன். நான் செய்யும் அனைத்தையும் ஆசீர்வதித்து, ஒரு வெற்றியாளராக  என்னை வழிநடத்தும்.
 
இயேசுவின் விலையேறப்பெற்ற நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்லபிதாவே,
 
 ஆமென்.

For Prayer Help (24x7) - 044 45 999 000