Loading...
Evangeline Paul Dhinakaran

அதிசயமும் அற்புதமும்

Sis. Evangeline Paul Dhinakaran
25 Sep
அன்பு நண்பரே, சங்கீதம் 40: 5 -ன் படி இன்று தேவன் உங்களை ஆசீர்வதிப்பார். இந்த வசனம் கூறுகிறது, “என் தேவனாகிய கர்த்தாவே, நீர் எங்கள் நிமித்தஞ்செய்த உம்முடைய அதிசயங்களும் உம்முடைய யோசனைகளும் அநேகமாயிருக்கிறது; ஒருவரும் அவைகளை உமக்கு விவரித்துச் சொல்லிமுடியாது; நான் அவைகளைச் சொல்லி அறிவிக்கவேண்டுமானால் அவைகள் எண்ணிக்கைக்கு மேலானவைகள்.”  இந்த வசனம் எனக்கு மிகவும் பிடிக்கும். கர்த்தர் என் வாழ்க்கையில் பல அற்புதங்களைச் செய்தார், என் வாழ்க்கையில் தேவனுடைய செயல்கள் அனைத்தையும் விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. நான் அதை கர்த்தருக்கு  விளக்க முடியாது. உங்கள் வாழ்விலும் இதே போன்ற அற்புதங்களை தேவன் செய்யும்படி  பிரார்த்தனை செய்கிறேன்.

இப்படித்தான் கர்த்தர் தாவீதை ஆசீர்வதித்தார். சங்கீதம் 40:17 ல் தாவீது கூறுகிறார் “நான் சிறுமையும் எளிமையுமானவன், கர்த்தரோ என்மேல் நினைவாயிருக்கிறார்." என் திருமண நாளில், என் அம்மாவும் இதே வார்த்தைகளைச் சொன்னார்கள். என் வாழ்க்கையின் ஆசீர்வாதங்களைப் பார்த்து, அவர்கள் கண்ணீரோடு, 'ஆண்டவரே, நான் சிறுமையும் எளிமையுமானவள். ஆனால் நீர் என்னை எப்பொழுதும் நினைத்துக் கொண்டிருக்கிறீர். நீர் என் மகளை எவ்வளவு  ஆசீர்வதித்திருக்கிறீர்  என்பதை என்னால் பார்க்க முடிகிறது என்றார்கள்.’
நண்பரே, உங்கள் வாழ்க்கையில் தேவன் செய்யும் அற்புதங்களை நீங்களும் அறிவிக்கப் போகிறீர்கள். உங்கள் வாழ்க்கையில் இன்னும் சிறந்த விஷயங்கள் வரவில்லை என்று இந்த நாட்களில் நீங்கள் அழுது ஜெபித்திருக்கலாம். ஆனால், தேவன் உங்களை நினைத்துக்கொண்டிருக்கிறார், நீங்கள் சேமித்து வைக்க இடங்கொள்ளாமல் போகுமளவு உங்களை ஆசீர்வதிப்பார்.
Prayer:
என் அன்பின் தகப்பனே,
 
 இன்றைய வாக்குறுதிக்கு நன்றி. ஆண்டவரே, நீர் என்னை நினைத்து என் வாழ்க்கையில் பல அற்புதங்களைச் செய்வதற்காக  நன்றி. ஆண்டவரே, நான் இழந்த அனைத்தையும் மீட்டுக்கொள்ள கிருபை செய்தருளும்.
 
இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,
 
ஆமென்.

For Prayer Help (24x7) - 044 45 999 000