Loading...
DGS Dhinakaran

உங்களை சபிக்கிறவர்களை நேசியுங்கள்!

Bro. D.G.S Dhinakaran
20 May
ஒவ்வொரு விசுவாசியும் நீதியுள்ளவர்களாக நிலைநிறுத்தப்படுகிறார்கள். ஏனென்றால் கிறிஸ்துவின் இரட்சிப்பை பெற்று அவருக்குள் நாம் வாழ்கிறோம். ஆனால், ஒவ்வொரு நாளும் நீதியுள்ள வாழ்க்கையை வாழ்வதும், தேவனுடைய அன்பை மற்றவர்களிடம் பிரதிபலிப்பதும் சற்று கடினமான காரியமே. உங்கள் நண்பர் உங்களுடைய குறைபாடுகளை எப்போதாவது சுட்டிக்காட்டினாரா? ஒரு நல்ல நண்பர் உங்கள் பலவீனங்களை ஒருபோதும் வெளியே சொல்லமாட்டார். ஆனால் நம்முடைய எதிரிகள் அப்படியில்லை. எதிரிகள் எப்போதும் நம் செயல்களை கவனித்துக் கொண்டேயிருக்கிறார்கள்.  தேவனுடைய வழிகளிலிருந்து நம்மை விழச்செய்யும்படியாக சத்துரு சவால் விடுகிறான். ஆனால் தேவனுடைய அன்போ நம்மை எப்போதும் பாதுகாக்கிறது.  

பல ஆண்டுகளுக்கு முன்பு,  இளம் போதகர் ஒருவர்,  எப்போதும் தேவனுடைய ஊழியர்களை விமர்சித்துக்கொண்டே இருப்பார். எந்தக் காரணமுமின்றி அவர் என்னையும் ஊழியத்தையும் அவதூறாகப் பேசுவார். ஒருநாள் இரவு, என் தொலைபேசி ஒலித்தது, தொலைப்பேசியின் மறுபுறம் அந்த நபர் இருந்தார். “பிரதர், என் ஒரே மகள் தலையில் கட்டி இருப்பதால் மரணப்படுக்கையில் இருக்கிறாள்.  என்னால் அவளை இழக்க முடியாது. தயவுசெய்து எனக்கு உதவுங்கள்.” என்று மிகவும் பரிதாபமாக அழுதார். என்னை அவதூறு செய்தவர் பரிதாபமாக அழுவதை என்னால் நம்ப முடியவில்லை. என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை. ரோமர் 5:5-ன் படி, பரிசுத்த ஆவியானவர் தமது அன்பை என்மீது ஊற்றினார். ஒருபுறம் அவரது குரலைக் கேட்க எனக்கு மிகவும் கோபம் வந்தது. ஆனால் மறுபுறம் தேவனுடைய அன்பு என்னிடமிருந்து வெளிப்பட்டது. என்னையுமறியாமல், “நாளை காலை உங்கள் மகள் நலமாக இருப்பார்” என்றேன்.  “பிரதர், நாளை காலை மருத்துவர்கள் அவள் மண்டை ஓட்டை திறந்து அறுவை சிகிச்சை செய்யப்போகிறார்கள் என்றார். மீண்டுமாக நான், நாளை காலை, கட்டி இருக்காது என்று மருத்துவர் சொல்லுவார்கள். கவலைப்படாதிருங்கள்  என்றேன்.”  நீங்கள் மீண்டும் என்னை தொடர்பு கொள்வீர்கள் என்று கூறி ரிசீவரை கீழே வைத்தேன்.  என் மாம்சத்திலிருந்து நான் அப்படிச் சொன்னேன் என்று உணர்ந்ததிலிருந்து ஒரு பெரிய பயம் என்னைப்பற்றிக் கொண்டது. இரவு முழுவதும் நான் ஆண்டவரிடம் அழுதேன், ‘பிதாவே என்னை மன்னியும்,’ நான் இந்த மனிதன்மீது மிகவும் கோபமாக இருக்கிறேன். ஆனால், இந்த சிறுமியின் நிலையை கண்டு மிகவும் வருந்துகிறேன். அந்த பெண்ணின்மீது கிருபை கூர்ந்து சுகமாக்கும் என்று ஜெபித்தேன். மறுநாள் காலையில் மருத்துவர்கள் அறுவை சிகிச்சைக்கு முன்னர் அவளை பரிசோதித்துவிட்டு, அவள் தலையில் கட்டி இருந்ததற்கான எவ்வித தடயமும் இல்லை என்று கூறி, அந்த பெண்ணை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். கர்த்தர் அந்த பெண்ணை காப்பாற்றி உயிரோடெ வைத்தார். 
பிரியமானவர்களே,  இந்த கிறிஸ்தவ பயணத்தில் நாம் தொடர்ந்து வெற்றிகரமாக பயணிக்க தேவனுடைய தெய்வீக அன்பு வேண்டும். தேவனுடைய நிபந்தனையற்ற அன்பு கிறிஸ்துவின் தெய்வீக வாழ்க்கையிலிருந்து வெளிப்பட்டு, ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் வெளிப்படுகிறது. பரிசுத்த ஆவியானவர் நம் உள்ளங்களில் ஊற்றப்படும்போது, கிறிஸ்துவைப்போலவே நாமும் பிறரை நேசிக்க முடியும். நம்மை  சபிப்பவர்களை ஆசீர்வதிப்பதும், நம்மை நிந்திப்பவர்களுக்காக ஜெபிப்பதும் (லூக்கா 6:28) தேவ அன்பை நாம் பெற்றுக்கொண்டால் மட்டுமே சாத்தியமாகும். ஆகவே இன்றைக்கு பரிசுத்த ஆவியானவரை பெற்றுக்கொண்டு, மற்றவரை நேசியுங்கள்.
Prayer:
பரலோகத் தகப்பனே,

என் அன்பு சில நேரங்களில் கடினமாகவும், சில சமயங்களில் மென்மையாகவும் இருக்கிறது. உம்முடைய  நிபந்தனையற்ற அன்பை மற்றவர்களிடம் காண்பிக்க எனக்கு உதவும். இயேசுவை சிலுவையில் அறைந்தவர்களை பார்த்து, “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், இவர்கள் தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள்”  என்று கூறி அவர்களை  நேசித்ததைப்போல, நானும் என்னை நிந்திக்கிறவர்களை நேசிக்கும் இருதயத்தை தாரும். பரிசுத்த ஆவியினால் என்னை நிரப்பியருளும்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென்.  

For Prayer Help (24x7) - 044 45 999 000