Loading...

கர்த்தருடைய வார்த்தைக்கு செவிகொடு

Shilpa Dhinakaran
30 Sep
அன்பு நண்பர்களே, அனுதினமும் தேவசமூகத்தில் அமர்ந்து, வேதத்தை வாசித்து, அவர் நம்முடனே பேசும்படி காத்திருப்பது மிகவும் முக்கியமான ஒன்று. ஒவ்வொரு நாள் காலையிலும் அவருக்காக நாம் காத்திருக்கும்போது, அவர் தமது ஆசீர்வாதத்தை நம்மீது ஊற்றுகிறார். நீதிமொழிகள் 8:34ன் படி, அவருடைய வார்த்தைக்கு செவிகொடுக்கிற மனுஷன் பாக்கியவான். கர்த்தர் தம்மிடத்தில் வருகிற யாவரையும் நிச்சயமாக ஆசீர்வதிப்பார். ஆகவே, நீங்கள் அதிகாலையில் எழுந்து தேவனுடைய சத்தத்தை கேட்கவேண்டுமென்பது உங்கள் அன்றாட வாழ்க்கையின் நடைமுறையாக இருக்க வேண்டும்.

சிறு வயதிலிருந்தே தரிசனங்களைப் பார்க்கின்ற ஒரு பெண்ணைக் குறித்து நான் அறிவேன். ஒருநாள் அவளுடைய தரிசனத்தில் வேத புத்தகம், இயேசு கிறிஸ்துவாக மாறியது என்று அவள் கூறினாள். தேவனுடைய வார்த்தை எவ்வளவு முக்கியமானது என்பதை நான் உணர்ந்துகொண்டேன். சங்கீதம் 119:105ல் “உம்முடைய வார்த்தை என் கால்களுக்கு தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது” என்று வாசிக்கிறோம். நாம் வேதவசனங்களை தியானிக்கும்போது நம்மோடு பேசும்படி அவரிடம் கேட்கும்போது, அவர் நமக்கு வழிகாட்டுவார். அவர் நமக்கு வெளிச்சமாயிருப்பதினால் நாம் நடக்க வேண்டிய பாதையை நமக்குக் காண்பிப்பார். உங்கள் வாழ்வின் ஒவ்வொரு அடியிலும், நீங்கள் செய்ய வேண்டிய காரியங்களை அவரே உங்களுக்கு போதிப்பார். ஒருவேளை இந்த காரியத்தில் நான் என்ன செய்ய வேண்டும்? எந்த பாதையில் செல்ல வேண்டுமென்பதை நினைத்து நீங்கள் குழப்பமடையலாம். ஆனால் ஆண்டவரிடம் நீங்கள் கேட்கும்போது, நீங்கள் செல்ல வேண்டிய சரியான பாதையை அவர் உங்களுக்கு தெளிவாய் காண்பிப்பார். 
இயேசுவின் போதனைகளை கேட்கும்படி அவருடைய பாதத்தில் காத்திருந்த மரியாளை தேவன் எவ்வாறு பாராட்டுகிறார் என்பதை வேதத்தில் வாசிக்கிறோம். மார்த்தாளும், மரியாளும் சகோதரிகள். ஒரு நாள் இயேசு அவர்களுடைய வீட்டிற்குச் சென்றபோது, மரியாள் ஓடிவந்து கர்த்தருடைய பாதத்தில் அமர்ந்து அவருடைய வார்த்தைகளை கவனித்தாள். மார்த்தாளோ பற்பல வேளைகளில் பிஸியாக இருந்தால், மார்த்தாள் சரியானதைச் செய்ததாக நாம் நினைக்கலாம். ஆனால், இயேசு அதைக்குறித்து தெளிவாக கூறுகிறார், “மார்த்தாளே, மார்த்தாளே, நீ பல காரியங்களைக் குறித்து கவலைப்பட்டு கலங்குகிறாய். ஆனால், தேவையான ஒன்றே. மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கை தெரிந்துகொண்டாள் என்றார். நீங்கள் என் பாதத்தில் காத்திருக்கும்போது உங்கள் கவலைகள் அனைத்தும் நீங்கும் என்று இயேசு கூறுகிறார். அவருடனான உறவில் நாம் பலப்பட வேண்டுமே தவிர வேறு எதிலும் நம் கவனம் சிதறக்கூடாது என்று இயேசு விரும்புகிறார். மேலும் கர்த்தருக்காக நாம் என்ன செய்கிறோம் என்பது மட்டுமே அவரை பிரியப்படுத்துகிறது. எனவே, வாஞ்சையோடு வேதத்தை வாசிக்க நீங்கள் ஆயத்தமாயிருக்கிறீர்களா? அப்பொழுது நிச்சயமாக நீங்கள் ஆசீர்வதிக்கப்படுவீர்கள். 
Prayer:
அன்பின் இயேசுவே,

உமது வாக்குறுதிகளுக்காக நன்றி. ஒவ்வொரு நாளும் உமது காலடியில் அமர்ந்து உமது வார்த்தையை கேட்க எனக்கு உதவும். என் கவலைகள் யாவற்றையும் நீக்கியருளும். உமது வார்த்தைகள் என் இருதயத்தை வலுப்படுத்தட்டும். நான் செல்ல வேண்டிய பாதையை எனக்கு காண்பித்தருளும். உமது சித்தத்தின்படி என்னை வழிநடத்தும். சரியான திசையை எனக்கு காண்பித்தருளும். 

இயேசுவின் இனிய நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000