Loading...
Paul Dhinakaran

அளவற்ற மகிழ்ச்சி

Dr. Paul Dhinakaran
13 Sep
அன்பு நண்பரே, கர்த்தருக்குள் மகிழ்ச்சியாய் இருப்பதே உங்கள் பெலன்  என்பதை தேவன் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறார். ஆம், இன்றைய தேவனுடைய வார்த்தை நெகேமியா 8:10, நெகேமியா கூறுகிறான், "நீங்கள் போய்க் கொழுமையானதைப் புசித்து, மதுரமானதைக் குடித்து, ஒன்றுமில்லாதவர்களுக்குப் பங்குகளை அனுப்புங்கள்; இந்த நாள் நம்முடைய ஆண்டவருக்குப் பரிசுத்தமான நாள், விசாரப்படவேண்டாம்; கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன் என்றான்." இந்த வசனம் எப்போது எழுதப்பட்டது தெரியுமா? ஜனங்கள்  தங்கள் தீய வழிகளை விட்டு தேவனிடத்தில் மனம்  திரும்பியபோது நெகேமியாவால் குறிப்பிடப்பட்டது.

"நீங்கள் உங்கள் பாவங்களுக்காக தேவனிடத்தில் மனந்திரும்பி அழுதீர்கள். தேவன் உங்கள் கண்ணீரைக் கண்டார். அவர் உங்கள் மனந்திரும்புதலைக் கண்டார். ஆகவே , நீங்கள் இனி அழக்கூடாது. "என் தேவன் உங்கள் பாவங்களை மன்னித்துவிட்டார்" என்று மகிழ்ச்சியடைய வேண்டிய நேரம் இது. நீங்கள் இனி குற்றவாளியாக இருக்க வேண்டியதில்லை." நீங்கள் உண்மையாய் மனந்திரும்பி, உங்கள் தீய வழிகளில் இருந்து மனம் திரும்பும்போது, கர்த்தர் உங்களை மன்னிக்க உண்மையுள்ளவராயிருக்கிறார். இயேசு கிறிஸ்துவின் இரத்தம் நம்மை சகல பாவங்களிலிருந்தும் சுத்திகரிக்கும். ஆகவே, நீங்கள் மனந்திரும்பும்போது, இயேசு கிறிஸ்துவின் இரத்தம் உங்களை சகல பாவங்களிலிருந்தும் கழுவி சுத்திகரிக்கும் என்று நம்புங்கள். மகிழ்ச்சியாய் இருங்கள். ஆம், சந்தோஷமாய் ஆர்ப்பரியுங்கள்
நாடக நடிகர் ஒருவர்.  தேவன் இல்லை என்ற முடிவுக்கு வந்தார். அதனால் அவரே தனது நாடகங்களுக்கு கதை எழுதத் தொடங்கினார். அவர் தனது நாடகங்களை நடத்திய கருப்பொருள் உங்களுக்குத் தெரியுமா? அது "கடவுள் இல்லை" என்பது தான். ஆனால் பிற்காலத்தில்  அவர் ஒரு பரிதாபமான சூழ்நிலையில் இருந்தார். சமாதானத்தை இழந்தார். மன நிம்மதியை தேடிக்கொண்டிருந்தார். ஒரு நாள் அவர் ஒரு தேவாலயத்தைச் சுற்றி ஒரு பெரிய கூட்டத்தைக் கண்டார். தேவாலயத்திற்குள் யாரோ பிரசங்கம் செய்வதைக் கண்டார். தேவாலயம் ஜனங்களால் நிரம்பி வழிந்தது. அதனால் அவர் கூட்டத்தை நெரித்து, போதகர்  என்ன பிரசங்கிக்கிறார் என்பதை ஜன்னல் வழியாகப் பார்த்தார். அவர் இயேசுவைபற்றி அறிவிப்பதை கேட்டு மகிழ்ச்சியடைந்தார், "இந்த மனிதனின் பேச்சிலிருந்து அடுத்த ஸ்கிரிப்டை நான் பெறப் போகிறேன், நான் இயேசுவை அதிகமாய்  குறை சொல்ல  முடியும்" என நினைத்தார்.  ஆயினும் அந்த சரியான தருணத்தில், போதகர் அவர் இருக்கும் திசையை சுட்டிக்காட்டி, "இளைஞனே, இயேசு உன்னை நேசிக்கிறார்" என்றார். தேவனுடைய மகிழ்ச்சி அவரது இருதயத்தை நிரப்பிற்று என்று அவர் உணர்ந்த தருணம்,  அவரது கோபங்கள் அனைத்தும் அவரை விட்டு விலகியது. அவர் ஒரு புதிய நபராக மாறினார். இயேசு, "ஜீவானந்தம், நான் உன்னை புதியவனாக்கினேன்" என்று பேசினார்.  நீங்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளும்போது, ​​அவர் தனது விலையேறப்பெற்ற இரத்தத்தால் உங்களைப் புதியவராக்கி, தமது மகிழ்ச்சியால் உங்களை நிரப்புவார்.
Prayer:
அன்பின் தகப்பனே,
 
ஆண்டவரே,  என் இருதயத்தை உம்மிடத்தில்  தருகிறேன். என் இதயத்திற்குள் வாரும். உமது  மகிழ்ச்சியால் என்னை நிரப்பும். உம்முடைய விலையேறப்பெற்ற இரத்தத்தால் என்னை கழுவி, என்னை பனி போல வெண்மையாக்கும். என்னை ஒரு புதிய நபராக மாற்றி, உமது  மகிமைக்காக என்னைப் பயன்படுத்தும்.
 
இயேசுவின் விலையேறப்பெற்ற நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,
 
ஆமென்.

For Prayer Help (24x7) - 044 45 999 000