விலையேறப்பெற்ற பரிசு
Dr. Paul Dhinakaran
01 Dec
அன்பு நண்பரே, இந்த மாத தொடக்கத்திலும் உங்களை வாழ்த்துவதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இந்த நாளின் வாக்குறுதி ஏசாயா 9:6லிருந்து எடுக்கப்பட்டுள்ளது. “நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்.” வேதம் கூறுகிறது, “இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன். வாலவயதின் குமாரர் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்” (சங்கீதம் 127:3). தேவன் உங்களுக்கு கொடுக்கின்ற ஆசீர்வாதம் இது. தேவன் தமது தெய்வீக இரக்கத்தினால் உங்களை ஆசீர்வதிப்பார்.
இந்த வேத வார்த்தையில் ‘நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்’ என்று எழுதப்பட்டுள்ளது. வேதத்தில் நீங்கள் மனந்திரும்பி சிறு குழந்தைகளைப்போல மாறாவிட்டால், நீங்கள் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டீர்கள் (மத்தேயு 18:3) என்று இயேசு கூறுகிறார். ஆகவே, நமக்காக ஒரு குமாரன் பிறக்க வேண்டுமென்றால், நாம் சிறு குழந்தைகளைப்போல ஆக வேண்டும். ஆம், உங்கள் இருதயம் பரிசுத்த ஆவியானவரின் ஆலயமாயிருக்கிறது என்றும், உங்கள் சரீரம் தேவனுடைய ஆலயமாயிருக்கிறது (1 கொரிந்தியர் 6:19) என்றும் வேதம் கூறுகிறது. யோவான் 1:12ல், அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்” என்று வேதம் கூறுகிறது.

இன்று நீங்கள் எவ்வாறு தேவனுடைய பிள்ளையாக முடியும்? இயேசு உங்கள் இருதயத்தில் பிறக்கும்போதுதான் நீங்கள் இயேசுவின் பிள்ளையாக மாற முடியும். அதற்காகவே குழந்தை இயேசு பாலகனாக கொடுக்கப்பட்டுள்ளார். அவர் உங்கள் இருதயத்தில் ஒரு குழந்தையாக பிறக்கிறார் என்று வேதம் கூறுகிறது. நீங்கள் பாவமற சுத்திகரிக்கப்படும்போது, நீங்கள் ஒரு குழநதையாகி விடுகிறீர்கள். ஆகையால், நீங்கள் ஒரு சிறு குழந்தையாகவும், கறையற்ற பரிசுத்த குழந்தையான இயேசுவும் ஒன்றாக கூடும்போது, நீங்கள் பரிசுத்தமடைகிறீர்கள். “அப்படியே கர்த்தரோடிசைந்திருக்கிறவனும், அவருடனே ஒரே ஆவியாயிருக்கிறான்” (1 கொரிந்தியர் 6:17). ஆகவே, இன்று நீங்கள் ஒரு சிறு குழந்தையாக கர்த்தருக்கு முன்பாக உங்களைத் தாழ்த்திக் கொண்டால், அவரும் ஒரு சிறு குழந்தையாக உங்களிடத்தில் வருகிறார். நீங்களும் அவரும் ஒன்றாக இருப்பீர்கள். நீங்கள் தேவனிடத்தில் எதைக்கேட்டாலும் அதை பெறுவீர்கள். நீங்கள் இயேசுவோடு ஒன்றாகிவிடுவீர்கள். நீங்கள் அவரை உங்கள் இருதயத்தில் ஏற்றுக்கொண்டதுபோல, அவரும் உங்கள் உள்ளத்தில் பாலகனாய் பிறப்பார். அவரே உங்களுக்கான வெகுமதி. இந்த உலகத்தில் எந்தவொரு தீங்கும் உங்களை ஒருபோதும் தொடமுடியாது.
Prayer:
அன்பின் தகப்பனே,
என்னை நீர் தெரிந்து கொண்டதற்காக நன்றி. உமக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்க கிருபை செய்தருளும். ஆண்டவரே உமது பாதத்தில் என்னை அர்ப்பணிக்கிறேன். இப்போதும்கூட நான் உம்மிடத்தில் பிரார்த்தனை ஏறெடுக்கிறேன். உம்மைப்போல என்னை மாற்றும். இந்த நாளுக்கான வாக்குறுதியின்படி என்னை ஆசீர்வதியும்.
இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,
ஆமென்.