Loading...

வல்லமை நிறைந்த தேவகரம்!

Shilpa Dhinakaran
13 Jun
உடற்பயிற்சி செய்பவர்களை பார்த்திருக்கிறீர்களா? அவர்களுடைய தசை வலிமைப்பெற அவர்கள் உடற்பயிற்சி மேற்கொள்கிறார்கள். அவர்கள் எவ்வளவு வலிமையை பெற்றிருக்கிறார்கள் என்பதை காண்பிக்கும்படியாக, தங்கள் கைகளை மடக்கி தங்கள் வலிமையை வெளிப்படுத்துகிறார்கள். ஆம், கரம் நம்முடைய வலிமையைக் குறிக்கிறது. உங்கள் கரத்தில் வலிமை இருந்தால் மட்டுமே நீங்கள் பளுவான எடைகளை தூக்க முடியும். நமது அன்றாட வேலைகளை எளிதாக செய்ய முடியும். பளு தூக்குபவர்கள், தங்கள் கைகள் மற்றும் தோளின் வலிமையின் மூலம் பெரிய எடையை உயரே தூக்குகிறார்கள். சாதாரண மனிதர்களின் கரத்திற்கு இவ்வளவு வலிமை இருந்தால், தேவகரத்தின் வலிமையை உங்களால் கற்பனை செய்ய முடியுமா? “கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார். நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்ன செய்வான்?” (சங்கீதம் 118:6) என்று வேதத்தில் வாசிக்கிறோம். தேவகரம் எப்போதும் நமக்கு வெற்றியைக் கொண்டுவருகிறது. வெற்றியின் அடையாளமாயிருக்கிறது. பயத்தை நீக்குகிறது. இந்த கரம் நல்ல விஷயங்களை மட்டுமே செய்கிறது. 

என் பாட்டிக்கு 85 வயதாகிறது. அவர்களால் தனியாக நடக்க முடியும். ஆனால், எப்போதும் யாரோ ஒருவர் அவர்களை பிடித்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு பிடித்துக்கொள்ளும்போது அவர்கள் மிகவும் பாதுகாப்பாகவும், நம்பிக்கையாகவும் உணர்கிறார்கள். ஒருவnளை அவர்கள் தடுமாறி கீழே விழுந்துவிட்டால், உடனிருப்பவர் அவர்களை தாங்கிப்பிடிப்பார் என்ற தைரியம் அவர்களுடைய பயத்தை அகற்றி நம்பிக்கையை கொடுக்கிறது. நமது கரம் மற்றவர்களை எவ்வளவாய் பெலப்படுத்துகிறது பாருங்கள். பிள்ளைகளும் தங்கள் பெற்றோரின் கரத்தை பிடித்திருக்கும்போது மிகவும் பாதுகாப்பாக உணருகின்றனர். முகம் தெரியாத நபர்களிடம் ஒரு நிமிடம் சென்றாலும்கூட குழந்தைகள் அழத்தொடங்கி விடுகின்றனர். ஏனெனில் தொடுதலை அவர்கள் எளிதாக கண்டுபிடிக்கின்றனர். பெற்றோர் தங்கள் தோள்களில் பிள்ளைகளை சுமக்கும்போது, அவர்கள் பாதுகாப்பாகவும், சௌகரியமாகவும், சந்தோஷமாகவும் இருக்கின்றனர். பெற்றோர் பிள்ளைகளை தங்கள் தோளில் சுமக்கும்போது அவர்கள் தங்களை மறந்து செல்கின்ற இடங்களை ரசிக்கின்றனர். நம்முடைய பரலோகத் தகப்பனும் நம் ஒவ்வொருவரையும் பாதுகாப்பாக தமது தோளில் சுமந்து செல்கிறார்.  
ஆம், தேவகரம் உங்கள்மீது உறுதியாயிருக்கும் எனவும், அவருடைய புயம் உங்களை பலப்படுத்தும் என்றும் தேவன் இன்று உங்களுக்கு வாக்களிக்கிறார். இதைப்பார்க்கிலும் வேறொரு பெலன் உங்களுக்கு வேண்டுமா? நீங்கள் தேவ வல்லமையை பெற்றிருக்கிறீர்கள். “என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்கு பெலனுண்டு” (பிலிப்பியர் 4:13) என்று நீங்கள் தைரியமாக கூறமுடியும். உங்கள் பெலவீனத்தில், தேவபெலன் பூரணமாய் விளங்கும். தேவபெலன் உங்களை கருவியாக பயன்படுத்தி, நீங்கள் கஷ்டமாக உணருகிற எந்த காரியத்தையும் செய்து முடிக்கச்செய்யும். ஏசாயா 49:16ல் “இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்;” என்று தேவன் கூறுகிறார். அவருடைய கரம் எப்பொழுதும் உங்களோடுகூடவே இருக்கிறது. “நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்” (ஏசாயா 41:10) என்று கூறுகிறார். அவருடைய கரம் நமக்கு சேவை செய்ய எப்பொழுதும் ஆயத்தமாயிருக்கிறது. தேவபெலனை பெற்று அவருக்கு சேவை செய்ய உங்க கரம் ஆயத்தமாயிருக்கிறதா? நிச்சயமாக நீங்கள் தேவனுக்காக பெரிய காரியங்களை செய்வீர்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
Prayer:
அன்பின் ஆண்டவரே,

உமது கரம் என்னை தாங்கி பிடிப்பதற்காக நன்றி. உமது உள்ளங்கைகளில் என்னை வரைந்திருக்கிறபடியினால் உமக்கு நன்றி. நீர் எப்பொழுதும் என்னை பார்த்துக்கொண்டிருக்கிறீர் என்பதை அறிந்திருக்கிறேன். என்னை பெலப்படுத்துகிற உமது வாக்குத்தத்தங்களுக்காக உம்மை ஸ்தோத்தரிக்கிறேன். தேவசித்தத்தை முழுமையாக நிறைவேற்றும்படி என்மீது இரக்கம் காண்பித்தருளும். உமக்காக பெரிய காரியங்களை செய்வதற்கு உமது கிருபையினால் என்னை நிரப்பும். உமக்கென்று எப்பொழுதும் உற்சாகமாய் உழைக்கும்படி எனது கரத்தை வலுப்படுத்தும்.

இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென்.

For Prayer Help (24x7) - 044 45 999 000