Loading...
Evangeline Paul Dhinakaran

நான் என் மகிமையை வெளிப்படுத்துவேன்

Sis. Evangeline Paul Dhinakaran
07 Aug
அன்பானவர்களே, இன்று "நீ என் தாசன்; இஸ்ரவேலே, நான் உன்னில் மகிமைப்படுவேன்" (ஏசாயா 49:3) என்ற வேத வசனத்தின்படி உங்களை ஆசீர்வதிப்பார். இவை எவ்வளவு அன்பு நிறைந்த வார்த்தைகள்! உங்களை இந்த உலகத்திற்குக் கொண்டு வந்த ஆண்டவர் அவரே. இந்த உலகம் உருவாக்கப்படுவதற்கு முன்னரே ஆண்டவர் உங்களை அறிந்திருக்கிறார். "ஆண்டவர் என்னை கைவிட்டுவிட்டார்," என்று நீ சொல்லுகிறீர்களா? உங்களை ஆசீர்வதிக்க ஆண்டவர் மறந்துபோனார் என்று நினைக்கிறீர்களா? அன்பானவர்களே, மனம் கலங்காதிருங்கள்! உங்களைப் பார்த்து, "நானே உன் தாய். நான் ஒருபோதும் உன்னை மறந்துபோகமாட்டேன்," என்று ஆண்டவர் கூறுகிறார் (ஏசாயா 49:15).

உலகில் ஜனங்கள் உங்களை கீழே தள்ளலாம். ஒருவேளை, பெண்ணாக இருப்பதினால் எல்லா காரியங்களிலும் உங்களைக் கீழாகவே வைக்கலாம். சமுதாயம் உங்களைத் தாழ்வாக பார்க்கலாம். வீட்டிலும், அலுவலகத்திலும் தாழ்வாக நடத்தப்படலாம். "ஆண்டவர் என்னை கைவிட்டுவிட்டார்; எல்லோரும் என்னை கைவிட்டுவிட்டார்கள்," என்று நீங்கள் புலம்புகிறீர்களா? அன்பானவர்களே, மகிழ்ந்து களிகூருங்கள். இன்று ஆண்டவர் உங்களைப் பார்த்து, "என் பிள்ளையே, நீ என்னுடையவன்(ள்). நான் உன் மூலம் மகிமைப்படுவேன்," என்று கூறுகிறார். ஆம், ஆண்டவர் உங்கள் பக்கத்தில் நிற்கிறார். வேதம், "தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?" (ரோமர் 8:31) என்று கூறுகிறது. இந்த உலகில் உங்களைக் கொண்டு வந்த ஆண்டவர், நிச்சயமாகவே உங்களை மகிமைப்படுத்துவார்.
நான் பிறந்ததிலிருந்து இப்போது வரையிலான வாழ்க்கையை "கண்மணிபோல் சுமக்கும் நேசம்" என்ற புத்தகமாக நான் எழுதியபோது, ஆண்டவர் என்பேரில் கரிசனையாக இருக்கிறார்; என் வாழ்க்கையை எவ்வளவு கவனத்துடன் கையாண்டுள்ளார் என்பதை உணர்ந்தேன். ஆண்டவரால்தான் நான் இன்று இந்த நிலையில் இருக்கிறேன். அதுபோன்றே, ஆண்டவர் தமது நித்திய கிருபையினால் உங்களை தாங்கி, உங்களிலும் உங்கள் மூலமாகவும் தமது நாமத்தை மகிமைப்படுத்திக் கொள்ளுவார்
Prayer:
ஆண்டவராகிய இயேசுவே, மனமுடைந்த நிலையில் இன்று உம் சமுகத்தில் வருகிறேன். ஆண்டவரே, என் வாழ்வில் எல்லாவற்றிலும் தோற்றுப்போனேன். எவையும் சரியாகும், செழிக்கும் என்று எந்த நம்பிக்கையுமில்லை. ஆனாலும் உம் வாக்குத்தத்தத்தின்மீது நான் நம்பிக்கை வைத்து, என் வாழ்வை நீர் ஆசீர்வதிக்கவேண்டுமென ஜெபிக்கிறேன். நான் செய்வதெல்லாம் இயேசுவின் நாமத்தில் வாய்க்கட்டும். என் இல்லற வாழ்வு மீண்டும் தளிர்க்கட்டும். என் வீட்டில் சமாதானம் நிலவட்டும். ஆண்டவரே, என்னில் நற்கிரியையை தொடங்கின நீர், அதை முடிவுபரியந்தம் நடத்துவீர் என்று விசுவாசிக்கிறேன். என்னை தாங்கி, எனக்கு உதவும். நீர் ஒருபோதும் என்னை கைவிடமாட்டீர்; என்னைவிட்டு விலகமாட்டீர். உம்முடைய பிரசன்னத்தினால் என்னை நிரப்புவதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன், இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

For Prayer Help (24x7) - 044 45 999 000