தேவன் உங்களை கனம்பண்ணுவார்
Dr. Paul Dhinakaran
29 Jul
என் விலையேறப்பெற்ற நண்பரே, இன்றைய வாக்குறுதி வசனம் ஏசாயா 43:4. “நீ என் பார்வைக்கு அருமையானபடியினால் கனம்பெற்றாய்" என்று கர்த்தர் கூறுகிறார்: "என் பிள்ளையே நீ என் பார்வையில் விலையேறபெற்றவன், அதனால் உனக்கு மரியாதை கிடைக்கும்." ஆம், சங்கீதம் 139: 14-ல் கூறப்பட்டுள்ளபடி, நீங்கள் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், கர்த்தரை துதியுங்கள். அவருடைய கிரியைகள் அதிசயமானவைகள். அநேகர் அழைக்கப்படுகிறார்கள், ஆனால் சிலர் மட்டுமே தெரிந்துகொள்ளப்படுகிறார்கள். நீங்கள் கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்டீர்கள், நீங்கள் அவருக்கு மிகவும் விலையேறப்பெற்றவர்கள். ஆகவே, அவர் உங்களை கனம்பண்ணுகிறார்.
அந்நாட்களில் மொர்தெகாய் ராஜாவின் அரமனை வாசலில் உட்கார்ந்திருக்கிறபோது, வாசல்காக்கிற ராஜாவின் இரண்டு பிரதானிகளாகிய பிக்தானும் தேரேசும் வர்மம் வைத்து, ராஜாவாகிய அகாஸ்வேருவின்மேல் கைபோட வகைதேடினார்கள். மொர்தெகாய் நன்மையானவைகளை செய்து வந்தபடியால், மொர்தெகாயை ராஜாவாகிய அகாஸ்வேரு குதிரையில் ஏற்றி, தலைநகரம் முழுவதும் பிரபுக்களுடன் அழைத்துச் செல்ல வேண்டும் என்று ஒரு அரசாணை வழங்கினார், 'ராஜா தனக்கு விலையேறப்பெற்ற ஒரு மனிதனை இவ்வாறு கனம் பண்ணுகிறார்' அதனால் தேவனுக்கு கிடைத்த அதே கனம் அவருடைய பிள்ளைகளுக்கும் வழங்கப்படும். உங்களுக்கு முன் பிசாசின் கிரியைகள் ஒன்றும் செய்ய முடியாது. இயேசுவின் நாமத்தில் நீங்கள் என்ன சொன்னாலும் அது நிறைவேறும். சங்கீதம் 37: 34 வசனம் கூறுகிறது, "நீ கர்த்தருக்குக் காத்திருந்து, அவருடைய வழியைக் கைக்கொள்; அப்பொழுது நீ பூமியைச் சுதந்தரித்துக் கொள்வதற்கு அவர் உன்னை உயர்த்துவார்."

எஸ்தர் ராஜாத்தி தேவனுக்கு முன்பாக மூன்று நாள் இரவும் பகலும் உபவாசத்துடன் காத்திருந்தாள். பின்னர் அவள் தன் ஜீவனையும் நினையாமல் தேசத்திலுள்ள அனைத்து யூதர்களுக்காகவும் பேசுவதற்கு ராஜாவிடம் சென்றாள். யூதர்கள் கொல்லப்பட வேண்டும் என்று அரசாணை பிறப்பித்த ராஜா, அவளுக்கு இரக்கம் செய்தார். யூத குலம் காக்கப்படும்படி உத்தரவு பிறப்பித்தார். மாறாக, இந்த உத்தரவை எழுதியவர் கொல்லப்பட்டார். கர்த்தருக்காகக் காத்திருங்கள், அவர் உங்களை தேசத்தில் உயர்த்துவார். சங்கீதம் 91:15 கூறுகிறது, ஆபத்தில் நீங்கள் கர்த்தரை அழைக்கும்போது அவர் உங்களை விடுவித்து உங்களை கனம் பண்ணுகிறார். கஷ்ட நேரத்தில் கர்த்தருடைய நாமத்தை அழைக்கும் ஒவ்வொருவரும் கர்த்தருக்கு விலையேறப்பெற்றவர். மனிதர்களையோ அல்லது உங்கள் சொந்த பெலனையோ நம்பாமல், கர்த்தரை நோக்கி கூப்பிடுங்கள். நீங்கள் தேவனுக்கு விலையேறப்பெற்றவர்களாகி விடுவீர்கள். உங்களை விடுவிப்பதன் மூலம் தேவன் உங்களை கனம்பண்ணுகிறார். சங்கீதம் 112: 9-ல் வேதம் கூறுகிறது, வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்; அவன்கொம்பு மகிமையாய் உயர்த்தப்படும். இந்த உலகில் தேவனுடைய கனத்தை பெரும்படியான அருளை தேவன் உங்களுக்குக் கொடுப்பார்!
Prayer:
அன்பின் பரலோகத் தகப்பனே,
இன்றைய வாக்குறுதி வார்த்தைக்கு நன்றி. உமது பார்வையில் நான் விலையேறப்பெற்றவனாக இருக்கவும், உம்முடைய கனத்தை பெறற்றுக்கொள்ளவும் உதவும். கஷ்ட நேரங்களில் நான் உம்மை நோக்கி கூப்பிடுகிறேன். மனிதர்களையோ அல்லது என்னையோ நம்பாமல் , ஏழைகளுக்கு தாராளமாய் கொடுக்கிறேன். என் வாழ்க்கையில் இந்த வாக்குறுதியை நீர் நிறைவேற்றியதற்கு நன்றி .
இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே .
ஆமென்.