கனமும் உயர்வும்
Sis. Evangeline Paul Dhinakaran
24 Feb
அன்பு நண்பரே, இன்று தேவன் உங்களுக்காக ஒரு அற்புதமான வாக்குறுதியைக் கொடுத்துள்ளார். “இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளைக் கைக்கொள்ளவும் அவைகளின்படி நடக்கவும் அவைகளுக்குச் செவிகொடுத்துவந்தால், கர்த்தர் உன்னை வாலாக்காமல் தலையாக்குவார், நீ கீழாகாமல் மேலாவாய்” (உபாகமம் 28:13). இஸ்ரவேலர் எகிப்து தேசத்தில் மிகுந்த உபத்திரவங்களை சந்தித்தபோது, கர்த்தர் அவர்களை விடுவித்து அவர்களை அடிமைத்தனத்திலிருந்து வெளியே கொண்டு வந்தார். கர்த்தர் அவர்கள் தலையை உயர்த்தி வெளியேறும்படி கிருபை செய்தார்.
லேவியராகமம் 26:13ல் நாம் இவ்வாறு வாசிக்கிறோம். “நீங்கள் எகிப்தியருக்கு அடிமைகளாயிராதபடிக்கு, நான் அவர்கள் தேசத்திலிருந்து உங்களைப் புறப்படப்பண்ணி, உங்கள் நுகத்தடிகளை முறித்து, உங்களை நிமிர்ந்து நடக்கப்பண்ணின உங்கள் தேவனாகிய கர்த்தர்.” நாம் இந்த பொல்லாத உலகில் இருப்பதால், நாமும் இதே பாதையில் செல்லலாம். “நான் பொல்லாதவனின் கட்டுப்பாட்டில் இருக்கிறேன். நான் பாவத்திற்கு அடிமை. நான் எனது சொந்த குடும்ப உறுப்பினருக்கு அடிமை போன்றவன். நான் என் பணியிடத்தில் ஒரு அடிமை போல இருக்கிறேன்” என்று சொல்லுகிறீர்களா? இன்று கர்த்தர் உங்களுக்கு சொல்லுகிறார், “நான் உன்னை வாலாக்காமல், தலையாக்குவேன். நீங்கள் எப்போதும் கீழாகாமல் மேலாவீர்கள்.

பிரியமானவர்களே, இன்று இறைவன் உங்களுக்குக் கொடுக்கும் ஆவி இது. ரோமர் 8:15ல் “அந்தப்படி திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திரசுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்.” தேவன் தமது அன்பினால் நம்மை அவருடைய பிள்ளைகளாக்கியிருக்கிறார். அவருடைய விலையேறப்பெற்ற இரத்தத்தால் அவர் நம்மை அவருடைய ராஜரீக குடும்பத்தில் ஏற்றுக்கொள்கிறார். எபேசியர் 2:19ல் பவுல் கூறுகிறார், “ஆகையால், நீங்கள் இனி அந்நியரும் பரதேசிகளுமாயிராமல், பரிசுத்தவான்களோடே ஒரே நகரத்தாரும் தேவனுடைய வீட்டாருமாயிருக்கிறீர்கள்.” ஆகையால், நான் என் குடும்பத்தில் மிகவும் குறைவானவன். நான் எனது பணியிடத்தில் அந்நியரைப்போல இருக்கிறேன் என்று சொல்லாதிருங்கள். இன்று கர்த்தர் தம்முடைய அபிஷேகத்தால் உங்களை நிரப்புவார். உங்கள் எதிர்காலத்iப் பற்றிய பயத்தை நீக்குவார். அது மட்டுமல்லாமல், தேவன் உங்களை தலையாக்கி, இந்த உலகில் உங்களை மேன்மையான இடத்தில் வைப்பார்.
Prayer:
கர்த்தராகிய இயேசுவை,
எனது பணியிடத்தில் நான் ஒரு அடிமையைப்போல நடத்தப்படுகிறேன். நான் என் சொந்த குடும்பத்தில் ஒரு அந்நியனைப் போல் உணர்கிறேன். ஆண்டவரே, என் நிலைமையை தலைகீழாக மாற்றவும், உமது வாக்குறுதியை நிறைவேற்றி, என்னை வாலாக்காமல் தலையாக்கும். என் வாழ்க்கையிலிருந்து பயத்தை நீக்கியருளும். நான் செய்கிற எல்லாவற்றிலும் சிறந்து விளங்க எனக்கு உதவும். உமது அபிஷேகத்தால் என்னை நிரப்பும். உமது மகிமையால் என்னை நிரப்பும்.
இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,
ஆமென்.