Loading...
Paul Dhinakaran

பரலோக தரிசனம்!

Dr. Paul Dhinakaran
19 Jan
தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷருடைய இருதயத்தில் தோன்றவுமில்லை; நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும் ஆராய்ந்திருக்கிறார்” (1 கொரிந்தியர் 2:9,10) என்று வேதம் கூறுகிறது. பிரியமானவர்களே, நீங்கள் எல்லாவற்றிலும் செழித்திருக்கும்படிக்கே தேவன் விரும்புகிறார். உங்களுக்கு கிடைக்க வேண்டிய எந்த நன்மையையும் அவர் தடுக்கிற தேவனல்ல. எல்லாவித நன்மையான ஈவுகளையும் அருளுகிற பரமபிதாவினிடத்தில் கேட்டு பெற்றுக்கொள்ளுங்கள். ஞானம், விவேகம், ஆரோக்கியம் மற்றும் மனதை குணப்படுத்துதல், புரிந்துகொள்ளுதல், முடிவெடுக்கும் திறன், ஒற்றுமை, ஆன்மீக ஆசீர்வாதம் போன்ற நல்ல பரிசுகளுக்கு ஆதாரமான பரம பிதாவிடமிருந்து ஒவ்வொரு நல்ல விஷயத்தையும் கேட்டு பெற்றுக்கொள்ளுங்கள். 

தேவபக்தி நிறைந்த என் நண்பர் ஒருவர், தேவனை அறியாத ஒருவரது தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். ஒருமுறை அந்த தொழிலதிபதிர், மில்லியன் டாலர்கள் செலவழிக்க ஆயத்தமாயிருந்த ஒரு மேல்நாட்டு நிறுவனத்தின் விளம்பரத்தைப் பார்த்து, அது தனக்கு கிடைத்தால் மிகவும் லாபகரமாயிருக்குமே என்று எண்ணினார்.  அப்பொழுது என் நண்பர் அவரிடம், “நாம் உபவாசித்து ஜெபித்தால், தேவன் நமக்கு அந்த பிராஜக்ட் பற்றிய முழு விபரங்களையும் தெரிவிப்பார்” என்றார். அந்த தொழிலதிபரும் “சரி செய்யுங்கள்” என்று அவரை ஊக்கப்படுத்தினார். எனது நண்பர், இரண்டு நபர்களுடன் சேர்ந்து, அலுவலகத்தில் முழங்கால்படியிட்டு இரவு முழுவதும் உபவாசித்து ஜெபித்தார். தேவன் அவர்கள் ஜெபத்தைக் கேட்டு, ஒரு தரிசனத்தின் மூலம், எப்படி அதை செயல்படுத்துவது என்பதைத் தெரிவித்தார். அவர்களும் அதன்படியே செய்தபோது, மகத்தான வெற்றியும், லாபமும் அடைந்தனர். அந்த மூன்று பேரும், பதவி உயர்வு பெற்று கனப்படுத்தப்பட்டனர். 
தேவன் எப்படி உங்கள் வாழ்க்கையில் வெற்றியை கட்டளையிடுகிறார் என்பதை பாருங்கள். எந்த காரியத்திலாகிலும் நீங்கள் தேவனுடைய ஆலோசனையை நாடினால் அவர் நிச்சயமாக உங்களுக்கும் வழிகாட்டுவார். மற்றவர்கள் மூலமாக உங்களை உயர்த்தி கனப்படுத்துவார். வேதத்தில் தானியேலும், அவன் நண்பர்களும் கடவுளைத் தேடினபடியால், அவர்கள் அரண்மனையில்  உயர்ந்த அதிகாரிகளானார்கள் என்று வாசிக்கிறோம் அல்லவா. “மறைபொருள்களை வெளிப்படுத்துகிற பரலோகத்திலிருக்கிற தேவன்....” (தானியேல் 2:28) ஒவ்வொரு சூழ்நிலையையும் ஞானத்துடன் கையாளும்படி அவர்களை வழிநடத்தினார். ஆகவே, எந்த காரியமானாலும், தேவ ஆலோசனையையும் வழிநடத்துதலையும் தேடுங்கள். அப்பொழுது நீங்கள் எல்லாவற்றிலும் வெற்றியை சுதந்தரிப்பீர்கள்.
Prayer:
பரம தகப்பனே,

உம்மைத் தேடின தானியேலையும், அவனது நண்பர்களையும் உமது பிரசன்னத்தால் நிரப்பினீரே, அதேவிதமாக என்னையும் உமது ஆவியால் நிரப்பும். என்னை உமது ஞானத்தினாலும், அறிவினாலும் நிரப்பி, உமது சித்தப்படியே செய்ய உதவி செய்வீராக. எல்லாவற்றையும் எனக்கு ஆசீர்வாதமாக மாற்றி கொடுப்பதற்காக உமக்கு நன்றி.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000