Loading...
DGS Dhinakaran

மேலான சமாதானம்!

Bro. D.G.S Dhinakaran
27 Feb
தேவனுடைய கட்டளையை நேசிப்பது, வேதத்தை வாசிப்பது அல்லது தியானிப்பதை விட மிகச்சிறந்ததாகும். அதன் பொருள் நாம் இயேசுவை அதிகமாய் நேசிப்பதாகும். நீங்கள் அவரை நம்புவதால்  அவர் உங்கள் மனதில் முழுமையாய் தங்கியிருப்பார் (ஏசாயா 26:3).

ஒருமுறை நான் இயேசுவை அறியாத ஒரு இளவரசியை சந்தித்தேன். அவர்களுக்காக ஜெபிக்கும்படி என்னைக் கேட்டுக்கொண்டார்கள். நான் அவர்களைச் சந்தித்தபோது, “நான் உங்களுக்காக ஜெபிக்க விரும்புகிறேன். உங்கள் ஜெபவிண்ணப்பத்தை கூறுங்கள்” என்று கேட்டேன். அவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா? “ஐயா, இந்த உலகில் எனக்கு எல்லாவித வசதிகளும் இருக்கிறது; ஒரு நல்ல கணவரும், மகனும் இருக்கிறார்கள். எனக்கு எவ்வித குறைபாடுகளும் இல்லை. ஆனால் என் இருதயத்தில் எனக்கு சமாதானமே இல்லை. எனக்கு சமாதானம் கிடைக்கும்படி ஜெபியுங்கள் என்றார்கள். 

மனிதகுலத்திற்கு “சமாதானம்” என்ற பிதான தேவையை அறிந்த ஆண்டவராகிய இயேசு, இந்த பூமியை விட்டு செல்லும்போது, “சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன் என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிற பிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக” (யோவான் 14:27). இந்த உலகம் தருகிற சமாதானம் போலியானது. அது சில மணி நேரங்கள் மாத்திரமே நீடிக்கும். அதன்பிறகு மறைந்துபோகும். ஆனால், இயேசு கிறிஸ்து அளிக்கும் அமைதி உண்மையானது, நித்தியமானது. பூரணமான அமைதியை அவர் நமக்குத் தருகிறார். அதனால்தான், “உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்கு கொடுக்கவில்லை” என்று இயேசு தமது வார்த்தைகளில் சேர்த்தார். ஜனங்கள் தங்கள் அமைதிக்காக ஹெல்டர்-ஸ்கெல்டரை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.  ஆனால், “இயேசுவே சமாதான காரணர் என்று வேத வார்த்தை கூறுகிறது.  நாம் சுகமாய் இருக்கும்போது சமாதானமாக இருப்பது பெரிதான காரியமல்ல. ஆனால், பிரச்சினைகளின் மத்தியில் நாம் இருக்கும்போது இந்த அற்புதமான சமாதானத்தை எவ்வாறு பெறுவது?
“உமது நியாயப்பிரமாணத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானம் உண்டு, அவர்களுக்கு இடறலில்லை” (சங்கீதம் 119:165) என்று வேதம் கூறுகிறது. பிரியமானவர்களே, இயேசுவை உங்கள் நடுவே வைத்திருக்கும்போது, நீங்கள் ஒருபோதும் தடுமாற மாட்டீர்கள். அப்பொழுது எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும், சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக காத்துக்கொள்ளும்” (பிலிப்பியர் 4:7). நம்முடைய பிரச்சனைகளின் மத்தில் அவரை விசுவாசிக்கும்படி இயேசு நம்மை அழைக்கிறார். வியாதி, மனச்சோர்வு மற்றும் உறவுகளின் விரிசல்களிலிருந்து நீங்கள் பாதுகாக்கப்பட தேவனுடைய வார்த்தையை நேசியுங்கள். சமாதானத்தால் நிரம்புங்கள்.  
Prayer:
அன்புள்ள பிதாவே,

என் பிரச்சினைகளை நினைத்து கண்ணீர் வடிப்பதிலேயே என் எண்ணங்கள், ஆற்றல்கள் அனைத்து செலவழிகிறது. என்னை கஷ்டப்படுத்துகிற எனது கவலைகள் யாவற்றையும் உம்மிடத்தில் அர்ப்பணிக்கிறேன். உம்மீது நம்பிக்கை வைக்கவும், உம்மையே சார்ந்துகொள்ளவும் எனக்கு உதவும். உமது வாக்குத்தத்தங்களை விசுவாசித்து அற்புதங்களை பெற உதவிச்செய்தருளும். உம்முடைய கட்டளைகளை நேசிக்கும் இருதயத்தை எனக்கு தந்தருளும். உமது தெய்வீக சமாதானத்தினால் என் ஆவி ஆத்துமா சரீரத்தை நிரப்பும். 

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000