Loading...
DGS Dhinakaran

நல்ல பரிசு!

Bro. D.G.S Dhinakaran
22 Jan
இந்தியாவின் ஐந்தாவது முகலாய பேரரசர் ஷாஜகான் மிகவும் பணக்கார மன்னர். அவர் நிறைய வைரங்களை வைத்திருந்தார், அதில் சில வைரங்களை எப்போதும் தனது சட்டைப்பையில் வைத்திருப்பார். ஒருமுறை, அவர் மெக்காவுக்குச் சென்றார். அங்கு அவர் முல்லா என்பவருடன் மிகவும் நட்பு பாராட்டினார். அவருடைய நினைவாக முல்லாவுக்கு ஒரு வைரத்தை பரிசாக வழங்கினார். அன்பின் வெகுமதியாக வைரத்தை பெற்றுக்கொண்ட முல்லா ஒரு வைர வியாபாரியிடம் சென்று அதை விற்க முயன்றார். அந்த வியாபாரி மிகவும் ஆச்சரியப்பட்டார். “இது ஒரு மதிப்புமிக்க வைரமாகும். இது பலகோடி இந்திய ரூபாயின் மதிப்பாகும்” என்று கூறினார். 

ஒரு பூமிக்குரிய ராஜா தனது நண்பருக்கு இதுபோன்ற விலையுயர்ந்த வைரங்களை பரிசாக கொடுத்து ஆசீர்வதிக்க முடியுமென்றால், உங்கள் பரலோகத் தகப்பன் உங்களுக்காக அநேக மேன்மையான பரிசுகளை கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா! வேதம் கூறுகிறது, “பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள்பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?” (மத்தேயு 7:11). ஆண்டவர் மிகவும் நல்லவர், உங்கள் இருதயத்தின் ஆசைகளை நிறைவேற்றுவதன் மூலம் உங்களை மகிழ்விப்பதில் அவர் சந்தோஷமாயிருக்கிறார்.  “தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?” (ரோமர் 8:32)
ஆம், பூமி முழுவதையும் சொந்தமாகக் கொண்ட தேவன் தனது பிள்ளைகளுக்கு எந்தவொரு நல்ல பரிசும் கிடைக்க கூடாதபடிக்கு தடை செய்கிறவரல்ல. “நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது. அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை” (யாக்கோபு 1:17) என்று வேதவார்த்தை உங்களை உற்சாகப்படுத்துகிறது. ஆகவே, அவரிடத்தில் சிறந்ததையே கேளுங்கள், கேட்பதை பெற்றுக்கொள்வோமென்ற  நிச்சயத்தோடிருங்கள். தேவ ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள். உன் வாயை விரிவாய்த் திற , அப்பொழுது நான் அதை நிரப்புவேன் என்ற வார்த்தையின்படியே உங்கள் வாழ்வின் குறைவுகளை மாற்றி தேவன் உங்களை நிறைவாய் ஆசீர்வதிப்பார். 
Prayer:
அன்புள்ள பரம பிதாவே,

இயேசுவின் நாமத்தில் உம்மிடத்தில் வருகிறேன். நீர் நல்ல ஈவுகளை கொடுக்கிறவர் என்பதை நான் அறிவேன். உம்மிடத்தில் எந்தவொரு வேற்றுமையின் நிழலுமில்லை. எனது தேவைகள், ஆசைகள் மற்றும் விருப்பங்களை உமது பாதபடியில் அர்ப்பணிக்கிறேன். நீரே என் மனவாஞ்சையை நிறைவேற்றியருளும். உமக்கு பிரியமில்லாத ஒவ்வொரு விஷயத்தையும் என் வாழ்விலிருந்து அகற்றியருளும். உமது ஞானம், செல்வம் மற்றும் நல் உறவுகளால் என்னை ஆசீர்வதியும். உமது தெய்வீக ஆரோக்கியத்தை நான் அனுபவிக்க எனக்கு உதவும். உமது வார்த்தைகள் மூலமாக என் வாழ்வின் ஒவ்வொரு தேவைகளையும் சந்தித்தருளும்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000