Loading...
DGS Dhinakaran

தெய்வீக வார்த்தைகள்!

Bro. D.G.S Dhinakaran
11 Dec
மோசேயின் மாமனாகிய எத்திரோ, ஏராளமான இஸ்ரவேலரை எவ்வாறு நியாயம் விசாரிப்பது என்று மோசேக்கு அறிவுரை வழங்கினார் (யாத்திராகமம் 18:21,22). இந்த அறிவுரை தேவனுடைய அழைப்பை நிறைவேற்றும்படிக்கு, மோசேக்கு மிகவும் உதவியாயிருந்தது. அதேபோல், வாழ்க்கையின் ஒவ்வொரு படியிலும், நீங்கள் சரியான திசையில் முன்னேற  உங்களுக்கும் தெய்வீக ஆலோசனை அல்லது வழிகாட்டுதல் தேவை.

ஒரு சமயம் நடுக்கடலில் போய்க்கொண்டிருந்த ஒரு கப்பலில் குடிதண்ணீர் முற்றிலும் தீர்ந்துவிட்டது. அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் கப்பலே தடுமாறி நின்றது. காரணம், கப்பலைச் சுற்றியிருந்தது உப்புத்தண்ணீர் நிறைந்த ஆழ்கடல் தான். எனவே, கப்பல் தலைவன் திகிலினால் நிறைந்து, தங்களுக்கு உதவுமாறு, அருகிலிருந்த எல்லாக் கப்பல்களுக்கும் அவசர செய்தி அனுப்பினான். அப்பொழுது ஒரு குறிப்பிட்ட கப்பலிலிருந்து கீழ்க்கண்ட மறுசெய்தி வந்தது: (உங்கள் கப்பல் நிற்கும் இடத்திலேயே வாளிகளை தண்ணீருக்குள் இறக்கி மொண்டு கொள்ளுங்கள்). இந்த அறிவுரை கப்பல் தலைவனுக்கு ஆச்சரியமாக இருந்தபொழுதிலும், வாளிகளை அந்த இடத்திலுள்ள கடல் தண்ணீருக்குள் இறக்கி தண்ணீரை சேகரிக்குமாறு கட்டளையிட்டான். அந்த தண்ணீரை சற்று நாவில் எடுத்துவைத்து ருசிபாhத்தபொழுதோ அவன் பிரமிப்படைந்தான். காரணம், அது அத்தனை ருசியான தண்ணீராக இருந்தது. அந்த ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் ஒரு நல்ல நீரோடை ஓடிக்கொண்டிருந்ததினால் அங்கு மட்டும் நல்ல குடிதண்ணீர் கிடைக்கும் என்ற அடுத்த கப்பலின் மாலுமி அறிந்திருந்தார்; அந்த “நல்வார்த்தையை” அனுப்பினார். அந்த கப்பலிலுள்ள மக்களுடைய கவலை மறைந்தது! முகங்கள் மலர்ந்தன!
“ஒரு நல்ல மனிதன் அவரிடத்தில் சேமித்து வைக்கப்பட்ட நன்மைகளிலிருந்து நல்லவற்றை வெளியே கொண்டு வருகிறான்” (மத்தேயு 12:35) என்று வேதம் கூறுகிறது. பிரியமானவர்களே, உங்களை கண்காணிக்க தேவன் உங்களைச் சுற்றி ஞானமுள்ள, தெய்வபக்தியுள்ளவர்களை வைத்திருக்கிறார். சரியான ஆலோசனையை ஏற்றுக்கொள்வதற்கும், தவறான வார்த்தைகளைத் தவிர்ப்பதற்கும் கர்த்தரை சார்ந்து கொள்ளுங்கள். அவர் உங்களுக்கு அற்புதமான வழியை காட்டுவார். ஏற்ற நேரத்தில் சரியான வார்த்தைகளை கொடுப்பார். “இளைப்படைந்தவனுக்கு சமயத்திற்கேற்ற வார்த்தை சொல்ல நான் அறியும்படிக்கு, கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் கல்விமானின் நாவைத் தந்தருளினார்....” (ஏசாயா 50:4) என்று வேதம் கூறுகிறது. ஞானமுள்ள வார்த்தைகளுக்கு செவிகொடுத்து அந்த வார்த்தைகளுக்கு கீழ்ப்படியுங்கள். அத்தகைய மனத்தாழ்மையுள்ள இருதயம் எப்பொழுதும் எல்லா சூழ்நிலையிலும் ஆசீர்வதிக்கப்படும். 
Prayer:
அன்புள்ள ஆண்டவரே,

என் வாழ்க்கையில் மற்றவர்கள் பேசும் நல்ல வார்த்தைகளைக் கேட்க எனக்கு ஒரு தாழ்மையான இருதயத்தைத் தந்தருளும். நல்ல எண்ணம் கொண்டவர்களின் வார்த்தைகளை நான் அவமதிக்காதபடி காத்தருளும். நான் என் வாயை உமது கட்டுப்பாட்டில் கொடுக்கிறேன். சரியான நேரத்தில், சரியான வார்த்தைகளை பேசும்படி என்னை வழிநடத்துடம்.  மக்களை உற்சாகப்படுத்துகிற, ஊக்குவிக்கிற வார்த்தைகளை சொல்லி அவர்களை  சரியான திசையில் வழிநடத்துகிற ஞானமுள்ள சிந்தையை எனக்குத் தந்தருளும்.  

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென்.

044 - 45 999 000 / 044 - 33 999 000