தேவனின் குரல் தீர்க்கதரிசனமானது
Samuel Dhinakaran
29 Apr
என் நண்பரே, இன்று தேவன் உங்களுக்கு அளித்த வாக்குறுதி யோபு 37:5-லிருந்து அற்புதமான வாக்குத்தத்தத்தை தந்துள்ளார். “தேவன் தம்முடைய சத்தத்தை ஆச்சரியமானவிதமாய்க் குமுறப்பண்ணுகிறார்; நான் கிரகிக்கக்கூடாத பெரியகாரியங்களை அவர் செய்கிறார்.” இன்றும் கூட, தேவன் உங்கள் வாழ்க்கையில் பெரிய காரியங்களை செய்ய திட்டமிட்டுள்ளார் என்ற தேவசத்தம் உங்கள் இருதயத்தில் தொனிக்கும் என்று நான் நம்புகிறேன். உங்களுக்காக அவர் பெரிய காரியங்களைச் வைத்திருக்கிறார் என்ற தீர்க்கதரிசன வார்த்தையை நீங்கள் தேவனிடமிருந்து பெற்றிருக்கலாம் அல்லது தேவனிடமிருந்து ஒரு தீர்க்கதரிசன வழிகாட்டுதலைப் பெறுவதற்கு காத்திருக்கலாம். இன்றும் கர்த்தர் நீங்கள் நினைப்பதற்கும் எதிர்பார்ப்பதற்கும் அப்பாற்பட்ட அற்புதங்களை உங்களுக்கு செய்வேன் என்று உங்களுக்குச் சொல்லுகிறார்.
அந்த வார்த்தையை பெற்று அதிலே அடியெடுத்து வைத்திடுங்கள். என் தாத்தாவின் இறுதி ஊர்வலத்தின்போது, எனக்காக என் அப்பா, “ என் தாத்தா டாக்டர் டி.ஜி.எஸ்.தினகரனுக்கு இருந்த அதே அபிஷேகம் சாமுவேலையும் நிரப்பட்டும்” என்று பிரார்த்தனை செய்தார். “இந்தப் பெரியவர் செய்ததைப் போல நான் எவ்வாறு செய்யப் போகிறேன்?” என்று யோசித்தேன். ஆனால், அதிசயமாக தேவன் என்னைப் படிப்படியாகப் பயன்படுத்தி வருகிறார். இன்று ஜனங்கள் வந்து சொல்கிறார்கள், “சாம் நீ பாடும்போதும், பேசும்போதும் அது உங்கள் தாத்தாவை நினைவுபடுத்துகிறது. அதே தேவ பிரசன்னத்தை நாங்கள் உணர்கிறோம் என்று சொல்கிறார்கள்.

எவ்வளவு பெரிய ஆறுதல்! என்னுடைய புரிதலுக்கு இது அப்பாற்பட்டது. வேதத்தில் சாமுவேல், தேவனுடைய மெல்லிய குரலை எப்படி கேட்டார் என்பதை வாசிக்கிறோம். மேலும் அவர், "சொல்லும் அடியேன் கேட்கிறேன்" என்று பதிலளித்தார். பின்னர் தேவன் இஸ்ரவேலில் செய்யவிருந்த பெரிய காரியங்களை அவருக்குக் காண்பித்தார். தேசத்தில் அதிசயங்களைச் செய்ய சாமுவேலைப் பயன்படுத்தினார். ஆம், அதே தீர்க்கதரிசன வழிகாட்டுதல் இன்று உங்கள் வாழ்விலும் வருவது உறுதி. இந்த வாக்குறுதியை பெற்று உங்கள் இருதயத்தில் பொக்கிஷமாக வைத்துக்கொள்ளுங்கள். அதற்காக தேவனுக்கு நன்றி செலுத்திடுங்கள். அப்போது இந்த வரம் உங்களுக்குள்ளும் செயல்படும். உங்கள் முயற்சியை விட தேவ கிருபை உங்களை தீர்க்கதரிசனமாய் வழிநடத்தும்.
Prayer:
அன்பின் தகப்பனே,
இந்த பெரிய வாக்குறுதிக்கு நன்றி. உமது தீர்க்கதரிசன வார்த்தைக்கு நன்றி. என் இருதயத்தில் உமது சத்தம் இடிமுழக்கத்தைப்போல இறங்கட்டும். உமது அற்புதமான வழிகளில் என்னை நடத்தும்.
இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,
ஆமென்.