Loading...
Paul Dhinakaran

தேவ தலைமை ஜெயம்பெறும்

Dr. Paul Dhinakaran
18 May
அன்பு நண்பரே, இன்றைய வாக்குறுதி உபாகமம் 1:30லிருந்து எடுக்கப்பட்டது. “உங்களுக்கு முன் செல்லும் உங்கள் தேவனாகிய கர்த்தர் தாமே.....உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்” என்று வேதம் கூறுகிறது. சர்வவல்லமையுள்ள தேவன் உங்களுக்கு முன்னால் செல்ல விரும்புகிறார். அவருடைய அன்பு குழந்தைகளான உங்களை அவர் ஒருபோதும் கைவிடமாட்டார். ஏசாயா 45:2 ல் உள்ளதைப்போலவே, “நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன். வெண்கலக் கதவுகளை உடைத்து, இருப்புத்தாழ்ப்பாள்களை முறித்து, அந்தகாரத்தில் இருக்கிற பொக்கிஷங்களையும், ஒளிப்பிடத்தில் இருக்கிற புதையல்களையும் உனக்குக் கொடுப்பேன்” என்று கூறுகிறார்.

ஆம் நண்பரே, உங்களுக்கு முன்பாக செல்லும் ஒரு தேவன் இருக்கிறார். இஸ்ரவேல் ஜனங்களை திட்டமிட்டபடி வழிநடத்த அவர் ஒரு மேக ஸ்தம்பமாக முன்சென்றதைப்போல, உங்களுக்கு முன்பாகவும் சென்று, நீங்கள் நடக்க வேண்டிய வழியிலே  உங்களை நடத்துவார். அவர் உங்களுக்கு முன் செல்லும்போது உங்களுக்கு மிகுந்த சமாதானம் உண்டாகும். மோசே இஸ்ரவேலரை வனாந்தரத்தில் வழிநடத்தும்போது, “ஆண்டவரே, இந்த ஜனங்களை எல்லாம் நான் எப்படி வழிநடத்த முடியும்? என்னுடன் யார் வருவார்கள் என்று சொல்லும்” என்றான்.  ஒருவேளை நீங்கள் “என் குடும்பத்தை எவ்வாறு வழிநடத்த முடியும் அல்லது உங்கள் அலுவலகத்தை எவ்வாறு நிர்வகிப்பது என்று நினைத்து கலங்குகிறீர்கள் அல்லவா. உங்கள் சபையை எவ்வாறு வழிநடத்துவது அல்லது தேசத்தை எவ்வாறு ஆட்சி செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கலாம். 
கர்த்தர் உங்களுக்கு முன் செல்வார் என்று கூறுகிறார். யாத்திராகமம் 33:14-ல் தேவன் மோசேயிடம் கூறியதைப்போல, “என் சமூகம் உனக்கு முன்பாக செல்லும்” என்று அவர் உங்களுக்கு வாக்குறுதி அளிக்கிறார். ஆம், தேவன் உங்களுக்காக எல்லாவற்றையும் செய்வார். நீங்கள் சுமக்க வேண்டிய எல்லா சுமைகளையும் தேவன் சுமப்பார். அவர் உங்களுக்கு சமாதானத்தை அருளுவார். தேவன்மீது நம்பிக்கை வைப்பதன் மூலம் வருகிற சமாதானம் தான் உங்களுக்கு வெற்றியைத் தரும்.  யாத்திராகமம் 14:14ல், “கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள்” என்று வாசிக்கிறோம். தேவன் தனது வாக்குறுதிகளை எவ்வாறு நிறைவேற்றினார் என்பதை யோசுவா 23:10 விவரிக்கிறது: “உங்களில் ஒருவன் ஆயிரம்பேரைத் துரத்துவான். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொன்னபடி, அவர்தாமே உங்களுக்காக யுத்தம்பண்ணுகிறார்.” என் அன்பான நண்பரே, உற்சாகமாயிருங்கள்! கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார். நீங்கள் சமாதானமாயிருப்பீர்கள்.
Prayer:
என் அன்பின் பரலோகத் தகப்பனே,

இன்று நீர் எனக்கு கொடுத்த அற்புதமான வாக்குறுதி வசனத்திற்கு நன்றி. எனது கவலைகள் அனைத்தையும் உமது பாதபடியில் அர்ப்பணிக்கிறேன். என்னை வழிநடத்தும், கோணலான பாதைகளை செவ்வைப்படுத்தும். நீர் எனக்கு முன்பாக செல்லும். என்னை முன்னேற்ற பாதையில் நடத்தும். எனது யுத்தங்கள் எல்லாவற்றிலும் நான் ஜெயம்பெற கிருபை செய்தருளும்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000