Loading...
Dr. Paul Dhinakaran

உங்களில் இருக்கும் தேவ ஆவியானவர்

Dr. Paul Dhinakaran
22 Nov
என் விலையேறப்பெற்ற நண்பரே, இன்று உங்களுக்காக தேவன் அளித்த வாக்குறுதி அப்போஸ்தலர் 1:8லிருந்து வந்தது. “பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும் பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீhகள் என்றார்.” நாம் பெலனற்றவர்களாக இருப்பதை தேவன் விரும்பவில்லை. அவருடைய முழு பெலனையும் நாம் பெற்றிருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். அதனால் தான் அவர் நம்மை பரிசுத்த ஆவியினால் நிரப்புகிறார். இயேசுவுக்குள்ளிருந்த ஆவியானவர் உங்களுக்குள்ளும் வாசம்பண்ணுவார். இது தேவனிடத்திலிருந்து நீங்கள் பெறக்கூடிய மிகப்பெரிய பரிசு. சிலுவையில் மரித்த இயேசு தமது ஆவியை பிதாவிடம் ஒப்புக்கொடுத்தார். எந்தவொரு பிசாசும் அவருடைய ஆவியை கைப்பற்ற முடியாது. அவர் ஏன் அப்படி செய்தார்? தேவன் தேற்றரவாளனாகிய ஆவியானவரை நமக்கு அனுப்பபுவதற்காகவே அவ்வாறு செய்தார்.

இயேசு சிலுவையில் துன்பப்பட்டதின் மூலம் பரிசுத்த ஆவியின் பெலனை உருவாக்கினார். இயேசு இந்த பூமியில் இருந்தபோது, பரிசுத்த ஆவியானவர் நமக்கு அருளப்படவில்லை. யோவான் 7:39ல் வாசிக்கிறபடி, “தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப்போகிற ஆவியைக்குறித்து இப்படிச்சொன்னாh. இயேசு இன்னும் மகிமைப்படாதிருந்தபடியினால் பரிசுத்த ஆவி இன்னும் அருளப்படவில்லை” (யோவான் 7:39). இயேசு சிலுவையில் துன்பங்களை சகித்து, தமது இரத்தத்தின் மூலம் விலைக்கிரயம் செலுத்தியபடியால், நீங்களும் நானும் பெலனடையும்படி பரிசுத்த ஆவியானவர் அவரிலிருந்து வெளிப்பட்டார். அப்போஸ்தலர் 10:38ல் வாசிக்கிறோம், “நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்தஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷகம்பணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார்” தேவன் உங்களுடனே இருக்கும்படி அதே வல்லமை உங்களுக்கும் வழங்கப்படுகிறது. 
இயேசுவுக்குள் இருந்த அதே பரிசுத்த ஆவியானவரை இன்று நீங்களும் பெற்றுக்கொள்ளலாம். “கேளுங்கள் அப்பொழுது நீங்களும் பெற்றுக்கொள்வீர்கள்” என்று கர்த்தர் சொல்லுகிறார். ஏசாயா 28:11ல் கூறியுள்ளதைப்போல அவர் அந்நிய பாஷையினாலும், பரியாச உதடுகளினாலும் உங்களுடனே பேசுவார். பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குள் வரும்போது, நீங்கள் இளைப்பாறுதலை பெற்றுக்கொள்வீர்கள். எல்லாவித வலிகளும், பயங்களும், கவலைகளும் உங்களைவிட்டு நீங்கும். பயம் இல்லாதபோது, உங்களுக்குள் எல்லாவிதமான பெலனும் வந்துவிடும். ரோமர் 8:26ல் “அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார்” ஆம், பரிசுத்த ஆவியானவர் அந்நிய பாஷையினால் நம்மூலம் பரிந்துபேசி, நம் பயத்தை நீக்கி தேவசித்தத்தை வெளிப்படுத்துகிறார். “ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல் செய்கிறபடியால், இருதயங்களை ஆராய்ந்து பார்க்கிறவர் ஆவியின் சிந்தை இன்னதென்று அறிவார்.” மேலும், இயேசு வனாந்தரத்தில் சாத்தானுடைய சோதனையை வென்றதுபோலவே, நீங்களும் அவருடைய வல்லமையினாலும், மகிமையினாலும் எல்லா சோதனைகளையும் வெல்ல முடியும்.
Prayer:
அன்பின் இயேசுவே,
 
சிலுவையில் நீர் எனக்காக சம்பாதித்த உமது ஆவியினால் என்னை நிரப்பும். ஆவியானவரே நீர் எனக்குள் வந்து தங்கி வாசம்பண்ணும். சோதனைகளை கடந்து வரவும், பரிசுத்த ஆவியை பெற்று பெலனடைந்து உமக்கு சாட்சியாய் வாழ அருள்புரியும். உமது பெலத்தினால் என்னை இடைக்கட்டும். நான் வேண்டிக்கொள்ள அறியாதிருக்கிறபடியினால், ஆவியானவர் எனக்காக பரிந்துபேச வழிநடத்தும்.
 
இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,
 
ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000