Loading...
Paul Dhinakaran

காருணியம் உங்களை பெரியவர்களாக்கும்!

Dr. Paul Dhinakaran
30 Apr
என் அருமை நண்பரே, இன்று ‘நான் உனக்கு உதவி செய்து உன்னைப் பெரியவனாக்கப் போகிறேன்’  என்று கர்த்தர் கூறுகிறார்.  சங்கீதம் 18:35 கூறுகிறது, “ உம்முடைய இரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர்; உம்முடைய வலதுகரம் என்னைத் தாங்குகிறது; உம்முடைய காருணியம் என்னைப் பெரியவனாக்கும்."  பிரச்சனைகளின் மத்தியில் கர்த்தர்  உங்களை பெரியவராக்கப் போகிறார். நீதிமொழிகள் 21:31 கூறுகிறது, “குதிரை யுத்த நாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும்.”
 
2 கொரிந்தியர் 2:14-ல், தேவன் உங்களை எல்லா இடங்களிலும் எப்போதும் வெற்றி சிறக்கப்பண்ணுவார் என்று வேதம் கூறுகிறது. எவ்வளவு பெரிய ஆசீர்வாதம்! 1 கொரிந்தியர் 15:55-57 வசனங்களில், இயேசு கிறிஸ்துவின்  மூலம் உங்களுக்கு ஜெயம் உண்டாகும். நீங்கள் கர்த்தருடைய நாமத்தை கொண்டு முன் செல்லும்போது, மரணத்தின் கூர் அழிந்துவிடும். ஆம், உங்களை வெல்லும் பாவத்தின் வல்லமை  அழிக்கப்படும். பாவம் மற்றும் பாவத்தினால் ஏற்படும் மரணத்தின் மீது உங்களுக்கு அதிகாரம் உள்ளது. பாவம் இனி உங்களைத் தொடாது.
ஏசாயா 58:14 கூறுகிறது, "அப்பொழுது கர்த்தரில் மனமகிழ்ச்சியாயிருப்பாய்; பூமியின் உயர்ந்த இடங்களில் உன்னை ஏறியிருக்கும்படி பண்ணி, உன் தகப்பனாகிய யாக்கோபுடைய சுதந்தரத்தால் உன்னைப் போஷிப்பேன்" கர்த்தருடைய வாய் இதைச் சொல்லிற்று. ஆம் நண்பரே, நீங்கள் வெற்றியின் மீது சவாரி செய்வீர்கள். ஏசாயா 60:22-ல் "சின்னவன் ஆயிரமும், சிறியவன் பலத்த ஜாதியுமாவான்; கர்த்தராகிய நான் ஏற்றகாலத்தில் இதைத் தீவிரமாய் நடப்பிப்பேன்" என்று கூறுகிறார். அவர் இதை தீவிரமாய் நடப்பிப்பார். இந்த கிருபையால் தேவன்   உங்களை ஆசீர்வதிக்கப் போகிறார்.
Prayer:
அன்பின் பரலோகத் தகப்பனே,
 
இன்றைய வாக்குத்தத்தத்திற்கு நன்றி. அப்பா, என் வாழ்வை உமது கரங்களில் அர்ப்பணிக்கிறேன். என்னை போதித்து தாழ்ந்த நிலையிலிருந்து என்னை உயர்த்தும். என்னை வெற்றியின் பாதையில் செல்லும்படி வழிநடத்தும். ஆண்டவரே, என் வாழ்க்கையில் உம்மை மகிமைப்படுத்த எனக்கு உதவும்.
 
இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,
 
ஆமென்.

For Prayer Help (24x7) - 044 45 999 000