Loading...
Paul Dhinakaran

தேவன் உங்களை உயர்த்துவார்

Dr. Paul Dhinakaran
01 Jun
அன்பு நண்பரே, இந்த மாதம் உங்களுக்கு மிகவும் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு மாதமாக இருக்கட்டும். இந்த மாதத்தின் வாக்குறுதி ஏசாயா 52:13, “இதோ, என் தாசன் ஞானமாய் நடப்பார், அவர் உயர்த்தப்பட்டு, மேன்மையும் மகா உன்னதமுமாயிருப்பார்.” இந்த வாக்குறுதி இயேசு கிறிஸ்து பூமிக்கு வருவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு கூறப்பட்ட காரியம். முதலாவதாக, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து எல்லா ஜனங்களுக்கும் ஊழியராக இருப்பார் என்று வேதம் கூறுகிறது. ஆம், கர்த்தர் எல்லா ஜனங்களுக்கும் சேவை செய்ய ஒரு வேலைக்காரனாக தன்னைத் தாழ்த்தி, சிலுவையில் அவர் எல்லா அதிகாரங்களையும், இந்த பூமியை ஆண்டுகொண்டிருந்த வல்லமைகளையும் வென்றார், இதன்மூலம் நாம் அவருடைய பிள்ளைகளாகி இந்த உலகத்தை வெல்ல முடியும்.
 
இரண்டாவதாக, கர்த்தர் சிலுவையில் எழுப்பப்பட்டு உயர்த்தப்பட்டார். யோவான் 12:32-ல், "நான் பூமியிலிருந்து உயர்த்தப்பட்டிருக்கும்போது, எல்லாரையும் என்னிடத்தில் இழுத்துக்கொள்ளுவேன்" என்று அவர் கூறுகிறார். ஆம், அவர் தியாகத்தின் மூலம் உயர்த்தப்பட்டு, எல்லா ஜனங்களையும் தம்மிடத்தில்  இழுத்துக்கொண்டார். அவருடைய தியாகமே  ஜனங்கள் தங்கள் வாழ்க்கையை அவருக்கு அர்ப்பணிக்கும்போது அவர்களை உயர்த்துகிறது. ஆண்டவருக்கு  உங்களை ஒப்புக்கொடுத்தீர்களா? இல்லையென்றால், இன்றே ஒப்புக்கொடுங்கள். கர்த்தர் உங்களை இந்த உலகில் எல்லா ஜனங்களுக்கும்  முன்பாக உயர்த்துவார்.
மூன்றாவதாக, "தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்" (பிலிப்பியர் 2:9-11). மேலும், யோவான் 1:12-ல் உள்ளதுபோல,  "அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்."அன்பு நண்பரே, இன்று உங்கள் இரட்சிப்பின் நாள். நீங்கள் இயேசுவின் நாமத்தை விசுவாசித்து, அதை உங்கள் நாவினால் அறிக்கை செய்வீர்களா? அப்படியானால், நீங்கள் கர்த்தரைப் போல ஞானமாக செயல்படவும், அவர் உங்களை உயர்த்தி, மேன்மையும் உன்னதமுமான  நிலைக்கு உங்களை  உயர்த்தவும் உங்களுக்கு உதவுவாரென்பதில் உறுதியாயிருங்கள். இந்த வாக்குறுதி உங்கள் வாழ்வில் நூறு மடங்கு பலனளிக்கட்டும். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.
Prayer:
அன்பின் தகப்பனே,
 
என் வாழ்க்கையை உமது கரங்களில் அர்ப்பணிக்கிறேன். இயேசு கிறிஸ்துவே  என் தேவனும் இரட்சகருமானவர் என்று நான் நம்புகிறேன். கர்த்தருடைய ஆசீர்வாதங்கள் என் வாழ்வில் நிரம்பவும். இந்த பூமியில் உம்முடைய நாம மகிமைக்காக நான் ஞானத்தோடு செயல்படவும், உயர்த்தப்பட்டு, மேன்மையும் கனமும் அடையவும் எனக்கு உதவும். என் மூலம் நீர் வெளிப்படுவீராக.
 
இயேசுவின்  நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,
 
 ஆமென்.

For Prayer Help (24x7) - 044 45 999 000