பெலமுள்ள இருதயம்!
Samuel Dhinakaran
21 Oct
மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது. சங்கீதம் 42:1
“பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்கு சாட்சிகளாயிருப்பீர்கள்” (அப்போஸ்தலர் 1:8) என்ற வேத வசனத்தின்படி, பரிசுத்த ஆவியானவர் நம்மிடத்தில் வரும்போது, நாம் ஆண்டவருடைய வல்லமையைப் பெற்றுக்கொள்வோம். பூமியின் கடைசிபரியந்தமும் சென்று ஆண்டவருக்கு நாம் சாட்சிகளாக விளங்கும்படி ஆவியானவர் நம்மை பெலப்படுத்துவார். எனினும், ஆண்டவருக்கு சாட்சியாக விளங்குவதற்கு, சில அனுபவங்களை நாம் பெற வேண்டியது அவசியமாயிருக்கிறது.
நாம் அவரை மாத்திரம் விரும்பத்தக்கதாக, நம் இருதயத்தை முழுவதுமாக தமக்குச் சொந்தமாக்கி பெலப்படுத்துகிறார். “மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா, ஜீவனுள்ள தேவன்மேலேயே தாகமாயிருக்கிறது; நான் எப்பொழுதும் தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்பேன்?” (சங்கீதம் 42:1,2). சங்கீதக்காரனான தாவீது, “தேவனே, நாள் முழுவதும் என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது. நான் எப்போது உம்மை சந்திப்பேன்? தேவனே, உம் மேலான தாகத்தை, பசியை என்னால் தீர்க்க இயலவில்லை” என்று சொல்கிறான். ஆண்டவர் மீதான தாகம் அவனுக்குள் நாள் முழுவதும் பொங்கிக் கொண்டேயிருந்தது. ஆகவேதான், தாவீது, ஆண்டவரின் இருதயத்திற்கு ஏற்றவன் என்று அழைக்கப்பட்டான். அவனுடைய இருதயம் தேவனையே எப்போதும் தேடிக்கொண்டிருந்தது. ஆண்டவர் ஒருவேளை, “தாவீதே, ஒரே ஒரு நிமிடம் பொறுத்துக்கொள். இதோ, நான் போய்விட்டு வந்துவிடுகிறேன்” என்று கூறியிருந்தால், “ஆண்டவரே, நான் உம்மைப் போகவிடமாட்டேன். சிங்கம் வரும்போது, இரட்சதன் வரும்போது, நீர் என்னுடன் இருக்கவேண்டும். ராஜாவே எனக்கெதிராக வந்தாலும், நீர் எனக்கு வேண்டும். எந்த நேரத்தில் என் இருதயத்தை எது தாக்கும் என்று எனக்குத் தெரியாது” என்று கூறியிருப்பான்.

நண்பனே, பரிசுத்த ஆவியானவரை உங்கள் இருதயத்தில் கொழுந்துவிட்டு எரியச் செய்யுங்கள். அதற்காகவே நான் முக்கியமாக ஜெபித்து வருகிறேன். நான் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தாலும் அல்லது ஒரு புத்தகத்தை படித்துக்கொண்டிருந்தாலும், எந்த வேலையை செய்து கொண்டிருந்தாலும், எனக்குள் பரிசுத்த ஆவியானவர் கொழுந்துவிட்டெரிந்து கொண்டிருக்க வேண்டுமென்றே விரும்புகிறேன். அப்போது, ஆண்டவரின் சித்தம் நம் இருதயத்திற்குள் வரும். ஆண்டவர் விரும்புவதையே நாமும் விரும்புவோம். அவர் உங்கள் மீது அளவற்ற அன்புகூர்ந்து, உங்கள் வாழ்க்கைக்கான திட்டங்களை வகுத்திருக்கிறார். ஆகவே, வாழ்க்கையைக்குறித்த உங்கள் கனவுகளை, குடும்பத்தை குறித்த விருப்பங்களை ஆண்டவரிடம் ஒப்படையுங்கள். ஏனென்றால், அவர் எல்லாவற்றையும் ஏற்கனவே நேர்த்தியாக திட்டமிட்டு வைத்துள்ளார். உங்கள் கனவுகளை நனவாக்குவதற்கு தேவையான எல்லாவற்றையும், ஆண்டவரே உங்களுக்கு அருளிச்செய்வார்.
Prayer:
அன்புள்ள பரலோக பிதாவே,
"கர்த்தர் ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு", ஆகையால் உம்மைத் துதிக்கிறேன். இன்றும் பரிசுத்த ஆவியின் நிறைவை எனக்குத் தந்து நான் சந்திக்கும் ஒவ்வொருவருக்கும் என்னை ஆசீர்வாதமாக வைத்தருளும். என்னை மகிழ்ச்சியாக்கும். நான் பிறரை உற்சாகப்படுத்த உதவி செய்யும். என்னுடனும் எனக்கு அன்பானவர்களுடனும் தங்கித்தாபரித்து உம்முடைய சித்தத்திற்கு ஏற்றவர்களாய் எங்களை மாற்றும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், பிதாவே.
ஆமென்.