Loading...
Samuel Paul Dhinakaran

உங்களை காண்கிற தேவன்

Samuel Dhinakaran
08 Mar
அன்பு நண்பரே, இயேசுவை குறித்து நீங்கள் அறிந்துகொள்வது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இன்றைய தியான வசனம், “நீர் என்னைக் காண்கிற தேவன்” (ஆதியாகமம் 16:13). தேவன் உங்களை காண்கிறார் என்பதை அறிவது ஆச்சரியமாக இருக்கிறதல்லவா! அவருடைய கண்கள் எப்பொழுதும் உங்களை நோக்கிக்கொண்டிருக்கிறது. நீங்கள் எப்போதும் அவருடைய கண்பார்வையின்கீழ் இருக்கிறீர்கள் என்று அவர் உங்களுக்கு வாக்குறுதி அளிக்கிறார். விசேஷமாக நீங்கள் கஷ்டப்படுகிற வேளையில், தள்ளப்பட்ட நிலைமையில் இருக்கும்போது அவர் உங்களை கண்ணோக்குகிறார். தேவனுடைய அன்பு மிகப்பெரியது. நாம் மிகவும் தாழ்ந்த நிலையில் தனிமையில் வேதனைப்படும்போது நம்மோடு ஒருவருமிருக்க மாட்டார்கள். நம்மை ஆறுதல்படுத்தினாலும் அது ஒரு தற்காலிக ஆறுதலாக மட்டுமே இருக்கும். ஆனால் தேவன் மட்டுமே நம்மை ஆறுதல்படுத்தி நம்முடைய தாழ்ந்த நிலையிலிருந்து நம்மை உயர்த்த முடியும்.
 
இயேசு நத்தான்வேலை கண்டார் என்று வேதத்தில் வாசிக்கிறோம். அவர் கூறுகிறார், “பிலிப்பு, நாத்தான்வேலை அழைத்து வருவதற்கு முன்பதாகவே இயேசு அவரை அறிந்திருந்தார். அவரை அத்தி மரத்தினடியில் கண்டார். “ இயேசு, நாத்தான்வேலைப் பார்த்து, “இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன்” என்று சாட்சி கொடுக்கிறார். ஆகவே, தேவன் நம்மை வெளிப்புறமாய் மாத்திரமல்ல உட்புறமாகவும் பார்த்து, நாம் உண்மையில் யார் என்பதை அவர் அறிந்திருக்கிறார். தேவன் இன்று உங்களைப்பார்த்தும், “உன்னை இரக்கமுள்ள பிள்ளையாக பார்க்கிறேன்.” “நீ என்னுடைய உண்மையுள்ள மகன்.” “நீ பலமுள்ள பெண்” என்று கூறுகிறார். நீங்கள யார் என்பதை அவர் உங்களுக்கு சொல்லுவார். வல்லமையான காரியங்களை செய்யும்படி அவர் உங்களை உயர்த்துவார்.
வேதத்தில் கிதியோனைக் குறித்து நீங்கள் அறிந்திருக்கலாம். அவர் தனது கோத்திரத்தில் தன்னை மிகவும் பலவீனமானவராக கண்டார். ஆனால், தேவன் அவரை வீரம் மிக்க மனிதர் என்று அழைத்தார். ஏனென்றால் நம் மூலமாக தேவன் பிரதிபலிக்கிறார். நாம் அவரது சாயலில் இருப்பதை அவர் அறிந்திருக்கிறார். ஏதேன் தோட்டத்தில் நாம் இழந்ததை, அவர் சிலுவையில் நமக்கு மீட்டுக்கொடுத்தார். ஆகவே, நாம் அவரைப்போலவே இருக்கின்ற அவரது பிள்ளைகள். அவரும் நம்மை காண்கிற தேவன். அவர் நம்மை வெற்றியாளராக அழைக்கிறார். “இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூறுகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே” (ரோமர் 8:37). உங்கள் பலவீனங்களை அடிப்படையாகக் கொண்டு நீங்கள் யார் என்பதை தீர்மானிக்காதீர்கள். தேவன் உங்களை வல்லமையுள்ள நபராக காண்கிறார். நீங்கள் பந்தயத்தில் ஓடி பரிசை வெல்வதற்கு உங்களை உற்சாகப்படுத்தும்படி அவர் உங்களுக்கு பின்னாக இருப்பார். உற்சாகமயிருங்கள்!
Prayer:
அன்பின் தேவனே,
 
தாழ்ந்த நிலைமையிலிருக்கும் என்னை நீர் காண்பதற்காக உமக்கு நன்றி. என் கஷ்டநேரத்தில் எனக்கு உதவும்படி மனமிரங்கும். நீர் என் பெலத்தை காண்கிறீர். ஆகவே என்னை உமது வல்லமையான செயல்களை செய்யும்படி உயர்த்தும். இவ்வுலகில் உமது ஞானத்தையும், பெலத்தையும் வெளிப்படுத்த எனக்கு உதவும். நான் தனியே இல்லை. நீர் என்னோடிருப்பதற்காக நன்றி.
 
இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்லபிதாவே,
 
ஆமென்.

For Prayer Help (24x7) - 044 45 999 000