Loading...
Paul Dhinakaran

குடும்பங்களை ஆசீர்வதிக்கிற தேவன்!

Dr. Paul Dhinakaran
15 May
நம்முடைய தேவன் குடும்பங்களை ஆசீர்வதிக்கிறவர், அவர் குடும்பங்களை கட்டுகிறவர். “நான் இஸ்ரவேலின் வம்சங்களுக்கெல்லாம் தேவனாயிருப்பேன்,  அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் (எரேமியா 31:1). உங்கள் குடும்பத்தை அவர் மிகவும் நேசிக்கிறார்.   தேவன் உங்கள் குடும்பத்தை நேசித்து, அதன் நடுவில் வாசம்பண்ண விரும்புகிறார். 

குடும்பங்களை நேசிக்கிற தேவன், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பார். எப்படிப்பட்டவர்களுடைய குடும்பத்தை அவர் ஆசீர்வதிக்கிறார்? “கர்த்தருக்குப்பயந்து, அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் சந்ததி பூமியில் பலத்திருக்கும், செம்மையானவர்களின் வம்சம் ஆசீர்வதிக்கப்படும்.”  (சங்கீதம் 112:1,2) என்று வேதம் கூறுகிறது. அவருக்கு பயப்படுகிற மனிதனுடைய வாழ்க்கையை அவர் ஆசீர்வதித்து அவன் கீர்த்தியையும், நீதியையும், ஐசுவரியத்தையும் பெறும்படி அவனை பரிபூரணமாக ஆசீர்வதிக்கிறார். நீங்களும் கர்த்தருக்கு பயந்து அவருடைய கட்டளைகளை கருத்தாய் கைக்கொள்ளும்போது, இவ்விதமான ஆசீர்வாதத்தை உங்கள் வாழ்க்கையிலும் சுதந்தரிக்கமுடியும்.

அநேக வருடங்களுக்கு முன்பாக வட இந்தியாவில் மிகுந்த வறட்சி உண்டானது.  அங்குள்ள ஒரு கிராமத்தில், ஒரு குடும்பமே ஆடு, மாடுகளை நம்பி தான், ஜீவியம் நடத்திகொண்டிருந்தது, அந்த கிராமத்தில் வறட்சியினிமித்தம் ஆடு, மாடுகளெல்லாம் மடிந்து கொண்டிருந்ததினால், இதைக்கண்ட அக்குடும்பத்தாருக்கு பயம் வந்துவிட்டது, எங்களுடைய ஆடுமாடுகளை காப்பாற்ற, ஒரு வழி தெரியுமென்று சொல்லி, ஒரு பாட்டில் நிறைய எண்ணெயை எடுத்துக்கொண்டு, உடனே சென்னையிலிருக்கும் இயேசு அழைக்கிறார் ஜெபகோபுரத்திற்கு வந்தார்கள். அங்கிருப்பவர்களிடம் சகோ.தினகரன் அவர்களை ஒரே ஒரு நிமிடம் சந்திக்க வேண்டுமென்று கேட்டார்கள்.  சகோதரரிடம் அந்த எண்ணையை கொடுத்து, இதை ஜெபித்து தாருங்கள் என்று கூறினர். அப்பாவும் முழு இருதயத்தோடு பரிசுத்த ஆவியானவரின் வல்லமை இறங்கும்படியாக ஜெபித்து, அந்த எண்ணெயை அவரிடம் கொடுத்தார். அவர்கள் தங்கள் கிராமத்திற்கு திரும்பி சென்று, ஜெப எண்ணெயை ஆடு, மாடுகள்மீது பூசினார். கர்த்தர் அவருடைய விசுவாசத்தை நினைத்தருளினதினிமித்தம். அவருடைய ஆடு, மாடுகள் மட்டும் காப்பாற்றப்பட்டது.  எவ்வளவு பெரிய விசுவாசம் பாருங்கள்! அதன்பிறகு அவர்களிடத்திலிருந்த பசுக்கள், இதற்கு முன்னில்லாத அளவிற்கு பால் கறந்தது.  கர்த்தர் அவரது குடும்பத்தை ஆசீர்வதித்தார்! இது உண்மையாக நிகழ்ந்த ஒரு காரியம்.
பிரியமானவர்களே! இவ்விதமாகவே உங்களையும் கர்த்தர் பாதுகாக்க வல்லவராயிருக்கிறார்.  உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் அவர் நேசிக்கிறார்.  ஆகையால் தான் கர்த்தருக்கு பயப்படும் குடும்பங்களை, அவர் மிகவும் நேசிக்கிறார். “...நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள்...” (2 கொரிந்தியர் 6:16) இந்த வார்த்தையின்படியே நீங்கள் அவருடைய ஜனங்களாயிருப்பதினால், அவர் உங்கள் குடும்பத்தில் வந்து வாசம்பண்ணுவார். உங்கள் ஜெபத்தை ஒருபோதும் தள்ளமாட்டார். இன்றைக்கே உங்கள் குடும்பத்திற்கு பரிபூரண ஆசீர்வாதத்தை கட்டளையிடுவார்.
Prayer:
என் அன்பிற்குரிய தகப்பனே,

உம்முடைய நாமமே வல்லமையில் பெரியது. உம்முடைய தியாகமும், உம்முடைய அன்பும் அளவிடப்பட முடியாதது. நீர் குடும்பங்களை ஆசீர்வதித்து உயர்த்துகிறதற்காக உம்மைத் துதித்து, ஸ்தோத்திரிக்கிறேன். உம்முடைய நாமத்தை உயர்த்துகிறேன். உம்முடைய சமுகத்தில் என்னை தாழ்த்துகிறேன். உம்முடைய கரம் என் வாழ்க்கையில் பலத்த அற்புதங்களைச் செய்ய வேண்டும் என்று மன்றாடுகிறேன். உம்மையே நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற என்னைப் பாதுகாத்தருளும். என்னிமித்தம் என்னைச் சார்ந்தவர்களையும் ஆசீர்வதித்தருளும்.

துதி, கனம், மகிமை யாவையும் உமக்கே செலுத்துகிறேன்.

ஆமென்

1800 425 7755 / 044-33 999 000