Loading...
Stella dhinakaran

உங்கள்மீது நோக்கமாயிருக்கும் கர்த்தர்!

Sis. Stella Dhinakaran
11 Jan
துன்ப நேரங்களில் ஆண்டவர் நம்மை கைவிட்டார் என்ற முடிவுக்கு நாம் வந்து விடுகிறோம். உடனே ஆண்டவருக்கு விரோதமாக முறுமுறுக்கிறோம். ஆனால் “கர்த்தரை நம்பியிருக்கிறவனையோ கிருபை சூழ்ந்துகொள்ளும்” (சங்கீதம் 32:10) என்று வேதம் மிகத்தெளிவாய் கூறுகிறது. கர்த்தர்மேல் உங்கள் முழு நம்பிக்கையையும் வைப்பீர்களாகில், அவருடைய கிருபை உங்கள்மேல் இறங்குவதை நீங்கள் அறிந்துகொள்ளலாம். பாவத்தின் அடிமைத்தனத்தில் நீங்கள் சிக்கித் தவிக்கும்பொழுது, “பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய் பெருகிற்று” (ரோமர் 5:20) என்ற வார்த்தையின்படி, தேவ கிருபையானது உங்களில் பெருகவும், அற்புதமான மீட்பை நீங்கள் பெற்றுக்கொள்ளவும், ஆண்டவர் வழிச் செய்வார்.

“விபசார பாவ வாழ்வில்” தன்னையுமறியாமல் ஆழமாய் மூழ்கி, வெளிவர முடியாமல் தவித்துத் தடுமாறிக்கொண்டிருந்தான், ஒரு வாலிபன். இதைக் கண்ணுற்ற ஒரு நல்ல மனிதர், அவனுக்காக வேண்டுதல் செய்ததோடு, தேவ ஆலோசனைகளையும் கொடுத்து, அவனோடு சேர்ந்து ஜெபித்து வந்தார். கர்த்தர் மேல் அந்த வாலிபனுக்கு இருந்த நம்பிக்கையும், அவரை அறிகிற அறிவும் பெருகப் பெருக, வெகுநாட்களாக விடமுடியாமலிருந்த  அந்த விபசார ஆவி அவனைவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக மறைந்தது. அந்த நல்ல மனிதரோ, அவனோடு நேரம் செலவழித்து, அந்த ஆத்துமா கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படி, அவனை பக்தியின் நெறியில் வழிநடக்கச் செய்தார். நிறைவான தெய்வீக பாக்கியங்கள் அவனுக்குள் “கிருபையாக” இறங்க இறங்க, அவன் வாழ்வில் அசுத்தமான இச்சைகள், விபச்சார எண்ணங்கள் யாவும் அவனைவிட்டு ஓடியது. பரிசுத்த ஆவியினால் நிரம்பும் பாக்கியத்தையும் பெற்றுக்கொள்ளும்படி செய்தார். கர்த்தருக்காக அவன் நற்சாட்சியாய் விளங்கினான்.
தேவன் கோணலானவைகள் எல்லாவற்றையும் நேராக்குவார். உங்கள் எதிர்காலத்தை குறித்து கவலையோடு சமாதானம் இல்லாமல் இருக்கிறீர்களா? கர்த்தர் உங்களுக்காக வழியை உருவாக்குவார். தேவன் உங்களுக்காக எல்லாவற்றையும் நேர்த்தியாக செய்துமுடிப்பார். நியாயாதிபதியாகிய கர்த்தர் உங்களுக்கு முன்னே செல்கிறபடியினால் அவர் உங்களுக்கு மகிழ்ச்சியளிப்பார். கர்த்தருடைய மகிமை உங்களை பின்னாலே காக்கும். தேவன் இந்த ஆசீர்வாதத்தை உங்களுக்கு எப்படி தருவார்? அவர் கிருபை நிறைந்த வாழ்வை உங்களுக்குத் தருவார். நீங்கள் தேவனுக்கு பயந்து அவருடைய வழிகளில் நடக்கும்போது அவர் உங்களை ஆசீர்வதிப்பார். கர்த்தருக்கு பயப்படுகிற சிறியோரையும் பெரியோரையும் ஆசீர்வதிப்பார். நீங்கள் தேவனுடைய  அற்புதங்களைப்பெற்று அவருக்கு சாட்சியாயிருப்பீர்கள். 
Prayer:
என் அன்பான பரலோக தகப்பனே! 

நீர் என் வாழ்வையும், பரிசுத்தமான வழியிலே வழிநடத்தும். தேவனைப்பற்றிய காரியங்களிலே உண்மையோடிருந்த தானியேலை நீர் நற்சாட்சி. நற்கிரியையினால் நிரப்பி, உம் கிருபையினால் வழிநடத்தியதுபோல் என்னையும், என்னைப் போன்று பாரமுள்ள அனைவரையும் உம்மை உண்மையான நம்பிக்கையோடு பின்பற்றுவதில் நற்சாட்சிகளாக மாற்றி, உம் கிருபையினால் நிரப்பும்படி உம் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே, 

ஆமென். 

1800 425 7755 / 044-33 999 000