Loading...

உங்கள்மீது மகிழ்ச்சியாயிருக்கும் தேவன்

Shilpa Dhinakaran
14 May
அன்பு நண்பரே, தேவன் உங்களுக்கு அளித்த வாக்குறுதி யாத்திராகமம் 33:17ல் இருந்து வந்தது. “நீ சொன்ன இந்த வார்த்தையின்படியே செய்வேன்; என் கண்களில் உனக்குக் கிருபை கிடைத்தது; உன்னைப் பேர்சொல்லி அழைத்து அறிந்திருக்கிறேன்” (யாத்திராகமம் 33:17).எத்தனை அருமையான ஒரு வாக்குத்தத்தம். “நான் உன்னை பெயர்ச்சொல்லி அழைத்து, உன்னில் மகிழ்ச்சியடைகிறேன்.” ஏசாயா 49:15ல், “ஸ்திரீயானவன் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை” என்று ஆண்டவர் கூறுகிறார். இந்த நேரத்தில் நீங்கள் தனிமையால் பாதிக்கப்படலாம். உங்கள் குடும்பத்தில் தவறான புரிதல்கள் இருக்கலாம். ஒருவேளை உங்கள் பெற்றோரிடமிருந்தோ அல்லது உங்கள் மனைவியிடமிருந்தோ நீங்கள் விலகி இருக்கலாம். ஆனால், கர்த்தர் உங்களைப்பார்த்து, “என் பிள்ளையே நான் உன்னை நேசிக்கிறேன். நான் உன் பெயரை சொல்லி அழைக்கிறேன்” என்று கூறுகிறார்.
 
உங்களுக்கு எந்த காரியத்தில் அவரது அக்கறை தேவைப்பட்டாலும், அதை ஆண்டவரிடம் சொல்லுங்கள். ஏனெனில் அவர் உங்களை கவனித்துக்கொள்வார். “நீ என் பார்வைக்கு அருமையானபடியினால் கனம்பெற்றாய்; நானும் உன்னைச் சிநேகித்தேன், ஆதலால் உனக்குப் பதிலாக மனுஷர்களையும், உன் ஜீவனுக்கு ஈடாக ஜனங்களையும் கொடுப்பேன்” (ஏசாயா 43:4). கர்த்தர் உங்களை மிகவும் நேசிகிறார். அவர் உங்கள் ஜீவனுக்கு ஈடாக ஜனங்களை தருவார். அதற்கு என்ன பொருள்? மற்றவருக்காக வைத்திருக்கும் நன்மையானவைகளை தேவன் உங்களுக்கு கொடுப்பார். தீமையிலிருந்து அவர் உங்களைக் காப்பாற்றுவார். ஆகவே, உங்களுக்காக இந்த உலகில் யாருமில்லை என்று நினைக்க வேண்டாம். தனிமையை உணர வேண்டாம். உங்கள் அழுகையின் சத்தத்தை கேட்க யாருமில்லை என்று சொல்லாதீர்கள்.
உங்கள் அன்பானவரை நீங்கள் இழந்திருக்கலாம். அந்த தனிமை உங்கள் இருதயத்தை துக்கத்தால் நிரப்பக்கூடும். ஆனால் கர்த்தர் சொல்லுகிறார், “நான் உன்னுடனே இருக்கிறேன்.” ஆம், ஏசாயா 41:10ல் அவர் “நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்” என்று கூறுகிறார். அவர் எப்போதும் உங்களுடன் இருப்பார். அவர் ஒருபோதும் உங்களைவிட்டு விலகமாட்டார். “நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர்” (சங்கீதம் 139:8). ஆம், நீங்கள் எங்கிருந்தாலும் தேவ பிரசன்னம் உங்களுடனேகூட இருக்கும். அவர் உங்களை ஆறுதல்படுத்தி உங்களுக்கு மகிழ்ச்சி தருவார். துக்கமான ஒவ்வொரு சூழ்நிலையையும் அவர் மகிழ்ச்சியாக மாற்றுவார்.
Prayer:
அன்பின் பரம தகப்பனே,

நீர் என்னை மிகவும் நேசிப்பதற்காக நன்றி. உமது பார்வையில் நான் விலையேறப்பெற்றவனாக இருப்பதற்கு நன்றி. என் தனிமை மனச்சோர்விலிருந்து வெளியே வர எனக்கு உதவும். உமது பிரசன்னத்தால் என்னை நிரப்பும். நீர் என் அருகில் இருப்பதை உணர எனக்கு உதவும். என் துக்கத்தை சந்தோஷமாய் மாற்றும். என் வாழ்விலுள்ள ஒவ்வொரு வெற்றிடத்தையும் உமது பிரசன்னம் நிரப்பட்டும். உமது ஆவியால் என்னை நிரப்பும்.
 
உமது விலையேறப்பெற்ற நாமத்தில், ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,
 
ஆமென்.

For Prayer Help (24x7) - 044 45 999 000