Loading...
Dr. Paul Dhinakaran

உங்களை இரட்சிக்கும் தேவன்!

Dr. Paul Dhinakaran
04 Aug
“நாள் உண்டாகாததற்கு முன்னும் நானே இருக்கிறேன்; என் கைக்குத் தப்புவிக்கத்தக்கவன் இல்லை; நான் செய்கிறதைத் தடுப்பவன் யார்?” (ஏசாயா 43:13) என்று வேதம் கூறுகிறது. உங்களை இரட்சிக்கும்படிக்கே, இயேசு இவ்வுலகத்திற்கு வந்தார். தேவபக்தியிலிருந்து, தேவனுடைய அன்பிலிருந்து உங்களை விலகச் செய்கிற காரியங்களை விட்டு விலகுங்கள். ஆண்டவர் உங்களை விடுவிப்பேன் என்று வாக்களித்திருக்கிறார். அவர் உங்களை இரட்சித்து தமது தெய்வீக சமாதானத்தினாலும், சந்தோஷத்தினாலும் நிரப்புவார். 

25 வருடங்களுக்கு முன்பாக நடந்த ஒரு சம்பவத்தை நினைவுப்படுத்த விரும்புகிறேன். நான் அலுவலகத்திற்கு ஒரு அவசர வேலையாக காரில் விரைந்து சென்று கொண்டிருந்தேன். நான் சிக்னல்களை கடந்து வேகமாக சென்றேன். உடனே போக்குவரத்து காவல் அதிகாரி என்னை தடுத்து நிறுத்தி என்மீது ஒரு வழக்கை பதிவு செய்துவிட்டு, “நீங்கள் யார்” என்று என்னிடத்தில் கேட்டார். அதற்கு நான், “சகோதரர் னு.ழு.ளு. தினகரன் அவர்களுடைய மகன்” என்று கூறினேன். உடனே அவர் என் தகப்பனாரை குறித்து, “அவரால் தான் நான் இங்கு பணிபுரிகிறேன். விசேஷமாக மரித்துப் போயிருக்க வேண்டிய நான் இன்று உயிரோடிருப்பதற்கு காரணம் அவருடைய பிரார்த்தனை தான்” என்று புகழ்ந்து பேசினார்.  அன்று என் தந்தையினிமித்தம் அவர் என்னை விட்டு விட்டார். ஆம், என் தகப்பனார் என்னை காப்பாற்றினார்! அதுபோலவே, நம்முடைய பரம பிதாவும் நம்மை ஆபத்திற்கும், பிசாசின் கட்டுகளுக்கும், தீங்கிற்கும் விலக்கி பாதுகாப்பார். 
ஆம், உன்னதமான தேவன் நமக்கு உண்டு. அவர் நம்முடைய ஒவ்வொரு முயற்சிகளையும் அவர் பார்த்துக்கொண்டிருக்கிறார். அவரே நம்மை பொறுப்பெடுத்துக்கொள்வார். பிசாசின் கிரியைகளிலிருந்து அவர் நம்முடைய ஆத்துமாவை மீட்டு, தீங்குக்கு விலக்கி காப்பார். இந்த முழு உலகத்தையும் நீங்கள் ஆதாயப்படுத்திக் கொண்டாலும், உங்கள் ஆத்துமாவை நஷ்டப்படுத்தினால் லாபமென்ன (மாற்கு 8:36) என்று வேதம் கூறுகிறது. ஆம், அவர் உங்களுடைய விலையேறப்பெற்ற ஆத்துமாவை இரட்சித்து அழிவில்லாத நித்திய வாழ்வை உங்களுக்கு கொடுக்க வாஞ்சையோடிருக்கிறார். ஆகவே, தேவனுடைய வழியைக் கைக்கொண்டு ஆசீர்வாதம் பெறுங்கள்.
Prayer:
அன்பின் பரம பிதாவே, 

உம்முடைய உன்னதமான அன்பிற்காக நன்றி கூறுகிறேன். நான் இவ்வுலகத்தின் பின்னாக ஓடாமல், உம்மை பின்தொடர்ந்து வரும்படியான, பாதுகாப்பான ஒரு வாழ்வை எனக்குத் தந்தருளும். தேவனே, என் ஆத்துமாவை பாதுகாத்துக்கொள்ளும். என்றென்றும் என்னோடிரும்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

1800 425 7755 / 044-33 999 000