Loading...
Stella dhinakaran

தேவன் தரும் ஐசுவரியமும் ஆசீர்வாதமும்

Sis. Stella Dhinakaran
20 May
அன்பு  நண்பரே, நம்முடைய ஆண்டவரும்  இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். இன்று நாம் நீதிமொழிகள் 10:22-லிருந்து வருகிற வாக்குத்தத்த வசனத்தை தியானிக்கப் போகிறோம், “கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்.”  ஆதியாகமம் 24:1-ஐ வேதத்தில் நீங்கள் வாசித்தால், “ஆபிரகாம் வயதுசென்று முதிர்ந்தவனானான். கர்த்தர் ஆபிரகாமைச் சகல காரியங்களிலும் ஆசீர்வதித்தார்” என்பதையும்,  “உங்கள் தகப்பனாகிய ஆபிரகாமையும், உங்களைப் பெற்ற சாராளையும் நோக்கிப்பாருங்கள்; அவன் ஒருவனாயிருக்கையில் நான் அவனை அழைத்து, அவனை ஆசீர்வதித்து, அவனைப் பெருகப்பண்ணினேன்" (ஏசாயா 51:2) என்பதையும் அறியலாம்.
 
ஆதியாகமம் 17:4-5-ல், "நான் உன்னோடே பண்ணுகிற என் உடன்படிக்கை என்னவென்றால், நீ திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாவாய். இனி உன் பேர் ஆபிராம் என்னப்படாமல், நான் உன்னைத் திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாக ஏற்படுத்தினபடியால், உன் பேர் ஆபிரகாம் என்னப்படும்" என்று வாசிக்கிறோம். ஆபிரகாமுக்கு பல வருடங்களாக குழந்தை இல்லை. ஆனால்,  ரோமர் 4:17-ல், "அநேக ஜாதிகளுக்கு உன்னைத் தகப்பனாக ஏற்படுத்தினேன் என்று எழுதியிருக்கிறபடி, அவன் தான் விசுவாசித்தவருமாய், மரித்தோரை உயிர்ப்பித்து, இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல் அழைக்கிறவருமாயிருக்கிற தேவனுக்கு முன்பாக நம்மெல்லாருக்கும் தகப்பனானான்" என்று வாசிக்கிறோம்.
ஆபிரகாம் நூறு வயதாக இருந்தபோது இயற்கைக்கு அப்பாற்பட்ட விதத்தில்  ஈசாக்கு  என்ற மகனைப் பெற்றான். ஆம், நம் வாழ்க்கையிலும் அநேகவிதமான பிரச்சனைகள் இருக்கலாம் ஆனால், சங்கீதம் 121:1, 2-ன்படி, தேவன்  நமக்கு உதவிச்செய்வார். “எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன். வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்.” என் வாழ்க்கையில் கூட, நான் பல்வேறு வகையான பிரச்சனைகளை சந்தித்தேன். ஆனால், என் கண்கள் சிலுவையை மட்டுமே நோக்கி பார்த்துக்கொண்டிருந்தது. அதினிமித்தம் கர்த்தர் என் நிலைமையை மாற்றி என்னை ஆசீர்வதித்தார். சங்கீதம் 66:12 கூறுகிறது, “மனுஷரை எங்கள் தலையின்மேல் ஏறிப்போகப்பண்ணினீர்; தீயையும் தண்ணீரையும் கடந்துவந்தோம்; செழிப்பான இடத்தில் எங்களைக் கொண்டுவந்து விட்டீர்." மேலும், "கர்த்தரை நம்புகிறவனோ செழிப்பான்"  (நீதிமொழிகள் 28:25) என்று வேதம் கூறுகிறது. தேவன்  உங்களுக்கு உலக ஆசீர்வாதங்களை மட்டுமல்ல, எபேசியர் 1:3-ன்படி, ஆவிக்குரிய ஆசீர்வாதங்களையும் தருவார். “அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களில் ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்."  “சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது” (சங்கீதம் 34:10) என்ற  வாக்குறுதிகளின்படி, தேவன் உங்களுக்கு தேவையான அனைத்தையும்  தருவார். ஆகவே, உற்சாகமாயிருங்கள். கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.
Prayer:
அன்பின் தகப்பனே,
 
என் தேவைகள் அனைத்திற்காகவும் உம்மையே  நான் நோக்கிப்பார்க்கிறேன். என் இருதயத்தின் ஆசைகள் மற்றும் தேவைகள் அனைத்தையும் நீர் அறிவீர். உமது கரம் என்னை ஆசீர்வதிக்கட்டும். உமது நாம மகிமைக்காக, உமக்கு சாட்சியாக வாழ எனக்கு தேவையான அனைத்தையும் தருவீராக. எல்லா துதியும் கனமும் மகிமையும் உமக்கே செலுத்துகிறேன்.
 
இயேசுவின்  நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,
 
ஆமென்.

For Prayer Help (24x7) - 044 45 999 000