Loading...

தேவனுடைய களஞ்சியம்

Shilpa Dhinakaran
08 Apr
அன்பு நண்பரே, இன்றைய வாக்குறுதி சங்கீதம் 146:7ல் இருந்து எடுக்கப்பட்டது. “அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார்; பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங் கொடுக்கிறார்” என்று வேதம் கூறுகிறது. ஆம், என் நண்பரே, உங்கள் தேவைகள் யாவையும் சந்திப்பதாக தேவன் கூறுகிறார். உங்களுடைய மிகச்சிறிய தேவைகளைகூட கர்த்தர் இன்று சந்திப்பார். பிலிப்பியர் 4:19ல் வேதம் கூறுகிறது, “என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்.” இந்த வார்த்தையின்படியே கர்த்தர் இன்று உங்கள் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வார்.
 
உங்கள் தேவைகள் அனைத்தையும் தேவன் சந்திக்கும்போது, நீங்கள் செய்ய வேண்டிய காரியம் என்ன? தேவையிலுள்ள ஜனங்களுக்கு நீங்கள் தாராளமாக உதவ வேண்டும். “கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும்” (லூக்கா 6:38). நம் இருதயத்தை நாம் அவருக்கு கொடுக்கும்போது, கர்த்தர் நம்மை அளவில்லாமல் ஆசீர்வதிப்பார். நான் என் வாழ்வில் இதை பலமுறை அனுபவித்திருக்கிறேன். என்னுடையதை நான் மற்றவர்களுக்குக் கொடுக்கும்போதெல்லாம், அதற்குப் பதிலாக இரண்டு மடங்கு பெற்றிருக்கிறேன். இந்த ஆடை எனக்கு சரியில்லாததால் அதை மற்றவருக்கு கொடுக்கிறேன் என்று நான் நினைத்துக்கொண்டிருப்பேன். ஆனால், ஒரு சில நாட்களுக்குள் வேறொருவரிடமிருந்து பரிசாக இரண்டு ஆடைகளை நான் பெற்றிருக்கிறேன். 
அதுபோலவே, நீங்களும் தாராளமாக கொடுக்கும்போது, கர்த்தர் உங்களையும் அளவில்லாமல் ஆசீர்வதிப்பார். இரண்டு காசுகளை காணிக்கையாக கொடுத்த ஒரு ஏழை விதவையை குறித்து வேதத்தில் வாசிக்கிறோம். அவள் தன்னிடம் உள்ள அனைத்தையும் கொடுத்துவிட்டாள். அதைத்தான் இயேசு இவள் மற்றெல்லாரைப்பார்க்கிலும் அதிகமாய் போட்டாள் என்று கூறினார் (லூக்கா 21). அதுபோல உங்களால் இயன்றதை மற்றவர்களுக்குக் கொடுக்கும்போது, கர்த்தர் உங்களை நினைத்து மகிழ்ச்சி அடைவார். உங்களை அளவில்லாமல் ஆசீர்வதிப்பார். இன்று கர்த்தர் நீங்கள் நினைப்பதற்கும் வேண்டிக்கொள்வதற்கும் மேலாக உங்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றப்போகிறார். இதற்காக கர்த்தருக்கு நன்றி செலுத்துவோம்.
Prayer:
அன்பின் பரலோகத் தகப்பனே,
 
இந்த வாக்குத்தத்தத்திற்காக உமக்கு நன்றி. என்னுடைய ஒவ்வொரு தேவைகளையும் சந்திக்கிற உமது உன்னத அன்பிற்கு நன்றி செலுத்துகிறேன். நீர் என் தேவைகள் அனைத்தையும் சந்தித்து, என் மனவிருப்பத்தை நிறைவேற்றுவீர் என்று நம்புகிறேன். நீர் என்னை ஆசீர்வதிக்கும்போது மற்றவர்களுக்கு தாராளமாய் உதவிச்செய்யும் மனப்பான்மையை எனக்குத் தாரும்.
 
இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,
 
ஆமென்.

For Prayer Help (24x7) - 044 45 999 000