Loading...

தேவதிட்டமே சிறந்தது

Stella Ramola
15 May
அன்பு நண்பரே, தேவனுடைய வார்த்தையை உங்களோடு பகிர்ந்து கொள்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இன்று  யோபு 42:2-ல் உள்ள தேவனுடைய வார்த்தையை நாம் தியானிக்கப்போகிறோம். “தேவரீர் சகலத்தையும் செய்யவல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்.” யோபு தனது வாழ்க்கையில் பல இன்னல்களை சந்தித்தபோது பேசிய வார்த்தைகள் இவை. யோபு 1-ம் அதிகாரத்தை நீங்கள் வாசிக்கும்போது, அவர் இந்த வார்த்தைகளைச் சொன்னபோது அவர் இருந்த நிலைமைக்கும், அவருடைய மாறுபட்ட நிலையையும் நீங்கள் காணலாம். யோபு உண்மையும் உத்தமுமானவர் என்று வேதம் கூறுகிறது. அவருக்கு ஏராளமான ஆடு மாடுகளும் எண்ணற்ற உடைமைகளும் இருந்தது. யோபு வசதிப்படைத்தவன் என்று வேதம் கூறுகிறது.
 
இந்த சூழ்நிலையில் தான் சாத்தான் தேவனிடத்தில் வந்து சவால் விட்டான். யோபுவின் உடைமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டால் அவன் தன் நீதியில் நிலைத்திருப்போனோ என்று சோதிக்கும்படி தேவனிடத்தில் உத்தரவு கேட்டான். தேவன் அவனுடைய சவாலை ஏற்றுக்கொண்டு, யோபுவை சோதிக்க அனுமதித்தார். இதன் விளைவாக, சாத்தான் யோபுக்கு சொந்தமான எல்லாவற்றையும் அவனது கால்நடைகள், பிள்ளைகள் மற்றும் வசதி வாய்ப்புகள் உட்பட அனைத்தையும் பறித்துக்கொண்டான். ஒரே நாளில் யோபு வெறுமையான நிலைக்கு வந்துவிட்டான். யோபு ஒன்றும் சொல்லவில்லை. இதிலும் சாத்தான் திருப்தி அடையாமல், யோபுவின் உடலெங்கும் கொப்பளங்களை ஏற்படுத்தினான். அவன் துன்பத்திற்கு மேல் துன்பத்தை எதிர்கொண்டான். யோபின் நண்பர்கள் அவனைப் பாhக்க வந்தனர். அவர்கள் யோபுவிடம் ஆறுதலாகவும் உற்சாகமாகவும் பேசுவதை விட்டுவிட்டு அவர் தண்டனைக்கு பாத்திரர் என்றும் குற்றம் சாட்டினர். அவருடைய சொந்த மனைவி கூட தேவனை தூஷித்து ஜீவனை விடும்படி கூறினாள்.
அத்தனை துன்பங்களிலும், யோபு, நான் ஏன் பிறந்தேன் என்று வருத்தப்பட்டார். ஆனால் தேவனை நம்பினார். தன் உடலில் அனுபவித்த அத்தனை துன்பங்களையும், தன் மனைவி மற்றும் நண்பர்களிடமிருந்து வந்த புண்படுத்தும் வார்த்தைகளையும், தேவனுடைய மவுனத்தையும் கண்டு, தேவன் தனக்கு ஒரு திட்டத்தை வைத்திருப்பதை அறிந்திருப்பதாகவும், தேவன் சகலத்தையும் செய்ய வல்லவர் என்பதையும் யோபு கூறினார். அவர் தேவனை பிடித்துக்கொண்டார். அவரை நம்புவதை ஒருபோதும் நிறுத்தவில்லை. அதன் பலனாக தேவன் அவரை மீட்டு, அவரது வியாதியை குணமாககி, இழந்த அனைத்தையும் இரட்டிப்பாக மீட்டுக்கொள்ளும்படி ஆசீர்வதித்தார். அவரது செல்வம், நிலம் மற்றும் கால்நடைகள் அவரை மீண்டும் செழிப்புள்ளவனாக்கியது. தேவன் அவரது பிள்ளைகளையும் திருப்பித்தந்தார். அவருடைய துன்பத்தின் மத்தியில் அவர் கர்த்தருக்குள் உறுதியாயிருந்தான். ஆகையினால் தான் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டு தேவன் அவரை ஆசீர்வதித்தார்.
 
என் நண்பரே, உங்கள் செழிப்பிற்காக, உடல்நலத்திற்காக அல்லது சில காரியங்களை பெறுவதற்காக வாழ்நாள் முழுவதிலும் வலியை அனுபவித்து வருகிறீர்களா? இன்று உங்கள் துயரங்களை நீக்கி, நீங்கள் இழந்த அனைத்தையும் இரட்டிப்பாக திரும்பத்தருவேன் என்று தேவன் வாக்களிக்கிறார். நீங்கள் அவரை நம்புகிறபடியினால், “கர்த்தர் உங்களுக்காக யாவையும் செய்துமுடிப்பார்” (சங்கீதம் 138:8). உங்கள் வாழ்வில் எல்லாவற்றையும் அவர் முழுமையாக்குவார். அவர் உங்களை ஆன்மீக ரீதியாக கட்டியெழுப்புவார். உங்கள் எதிர்காலத்திற்காக அவர் வைத்திருக்கும் திட்டங்களுக்காக உங்களுக்கு பயிற்சி அளிப்பார். ஆகவே உற்சாகமாயிருங்கள் நண்பரே. நம்பிக்கை இழக்காதீர்கள். உங்கள் பலன் வந்துகொண்டிருக்கிறது.
Prayer:
என் அன்பின் பரலோகத் தகப்பனே,
 
இன்றைய வாக்குறுதி வார்த்தைக்கு நன்றி. நான் அனுபவிக்கும் துன்பங்கள் அனைத்தும் உமது திட்டத்திற்கு என்னை ஆயத்தப்படுத்தும் என்பதை நான் அறிவேன். உம்மை பற்றிப்பிடித்துக் கொள்ளவும், உம்மையே நம்பவும் எனக்கு உதவும்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,
 
ஆமென்.

For Prayer Help (24x7) - 044 45 999 000