Loading...
Samuel Paul Dhinakaran

மகிமையான பாதுகாப்பு

Samuel Dhinakaran
16 Sep
நண்பரே, தேவன்  இன்று உங்களுடன் பேசுவதை பகிர்ந்துகொள்வதில் நான்  மகிழ்ச்சி அடைகிறேன். இன்றைய காலத்திற்கான வாக்குறுதியை இயேசு அழைக்கிறார் நாட்காட்டியில் அல்லது சமூக ஊடகங்களில் பார்த்திருப்பீர்கள். இது ஏசாயா 4: 5 ன் இரண்டாம் பகுதி.  “மகிமையானவைகளின்மேலெல்லாம் காவல் உண்டாயிருக்கும்.” எத்தனை பெரிய வாக்குறுதி! தேவனுடைய மகிமை உங்களை பாதுகாப்பாக வைக்கும். இந்த வாக்குறுதியை நீங்கள் பெற்றுக்கொள்ளும்போது அது உங்கள் மீது அளவில்லாத ஆசீர்வாதத்தை பொழியும்.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் எதிராக பிசாசு பல தீய விஷயங்களை திட்டமிடலாம். அவனுடைய சோதனைகள் மற்றும் அவனுடைய கொடிய  அம்புகள் உங்களை ஒன்றும் செய்யாது . சங்கீதம் 91: 4-5 ல், நீங்கள் வாசிக்கலாம், தேவன் உங்களை "இரவில் உண்டாகும் பயங்கரத்துக்கும், பகலில் பறக்கும் அம்புக்கும், இருளில் நடமாடும் கொள்ளைநோய்க்கும், மத்தியானத்தில் பாழாக்கும் சங்காரத்துக்கும் பயப்படாதிருப்பாய்." ஏனென்றால் அவர் உங்களைத் தன் சிறகுகளின் கீழ் மறைக்கிறார், நீங்கள் அவருக்குள் தஞ்சம் அடைகிறீர்கள். தேவ  மகிமை உங்களை மூடுவதை நீங்கள் காண்பீர்கள்.
ஒரு குறிப்பிட்ட குடும்பத்திற்கு  நடந்ததை கேள்விப்பட்டு  என் இதயம் உடைந்தது. அவன் தன் தாயையும், மனைவியையும் அழிக்கும்படியும்,  தன் மனைவியின் வயிற்றில் வளரும் தன் குழந்தைக்கு எதிராகவும்  சூனியம் செய்ததாக கூறினான். அந்த குடும்பத்தினர் தேவனை நேசித்ததால், அவருடைய தாயாரால் இதைத் தாங்க முடியவில்லை. இன்று, நீங்களும்,  உங்கள் சொந்த குடும்ப உறுப்பினர்களிடமிருந்தும்,  உங்கள் சொந்த சகோதரர்கள், கணவர் அல்லது உங்கள் எதிரிகளிடமிருந்தும் இதை எதிர்கொள்ளலாம். அவர்கள் உங்களை சூனியம் மற்றும்  தீய சக்திகளால் அழிக்க முயற்சி செய்யலாம். கவலைப்படாதிருங்கள்! உங்களுக்கு எதிராக உருவாக்கப்படும்  எந்த ஆயுதமும் வாய்க்காது. ஏனென்றால் உங்களைப் பாதுகாக்கும்படி  தேவ  மகிமை உங்களைச் சுற்றிலும் பாதுகாக்கும். பின்வரும் பிரார்த்தனையை விசுவாசமாகச் சொல்லி, தேவ மகிமையின் பிரசன்னத்தையும் பாதுகாப்பையும் இப்போதே பெற்றுக்கொள்ளுங்கள்.
Prayer:
என் அன்பின் பரலோகத் தகப்பனே,
 
 இன்றைய வாக்குறுதிக்கு நன்றி. உமது வல்லமையும் புகழும் நிறைந்த பிரசன்னத்தால் என் இருதயத்தையும் என் வீட்டையும் நிரப்பும். ஆண்டவரே, எப்போதும் உம்மை தேட எனக்கு உதவும். உமது மகிமை என்னையும் என் குடும்பத்தையும் பாதுகாக்கும் என்ற வாக்குறுதியை நான் உரிமையாக்கி ஜெபிக்கிறேன். பிசாசின் கிரியைகளிலிருந்தும், எல்லாவிதமான  சாபத்திலிருந்தும், தீய கிரியைகளிலிருந்தும் என்னை பாதுகாத்தருளும். தேவனே, எல்லா விதமான கட்டுகளையும் உடைத்தருளும். உமது நாமம் மகிமைப்படும்படி என்னை உயர்த்தி கவுரவித்தருளும்.  எப்போதும் உமது மகிமையால் என்னை நிரப்பும்.
 
இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,
 
ஆமென்.

For Prayer Help (24x7) - 044 45 999 000