Loading...
Stella ramola

கொடுத்ததை திரும்பக் கொடுக்கிற தேவன்

Sis. Stella Dhinakaran
25 Nov
எனக்கு அருமையான பிள்ளையே,  ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். இன்று நாம் நீதிமொழிகள் 19:17-ஐ  தியானிக்கப் போகிறோம். இந்த வசனம் கூறுகிறது, "அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்." இந்த ‘அவன்’ யார்? இது, ஏழைகள் மீது இரக்கம் கொண்ட ஜனங்களை குறிக்கிறது!

இன்று தேவன் நமக்கு சீஷாவை கொடுத்துள்ளார். இது ஏழைகளுக்கு உதவும் ஒரு ஊழியம். இந்த சீஷா ஊழியத்தின் மூலம் ஆயிரக்கணக்கான ஏழைகள் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். நீங்கள் எங்களுக்கு உதவுகிறீர்கள். உங்கள் தியாகமான காணிக்கையின் மூலம், ஏழ்மையான பல ஜனங்களுக்கு நாங்கள் உதவ முடிகிறது. நீங்கள் தேவனுக்காக கொடுக்கும்போது கர்த்தர்  உங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறார். மற்றவர்கள் அதை அறிந்திருக்க மாட்டார்கள். ஆனால் தேவன் பார்த்துக்கொண்டிருக்கிறார். நீதிமொழிகள் 15:3-ஐ  நீங்கள் வாசித்தால், “கர்த்தரின் கண்கள் எவ்விடத்திலுமிருந்து, நல்லோரையும் தீயோரையும் நோக்கிப்பார்க்கிறது” என்று வேதம் கூறுகிறது. ஒருவரும் அறியாதபடி உங்கள் நன்கொடைகளை  ஏழை ஜனங்களுக்கும்,  உங்கள் தசமபாகத்தை கஷ்டப்படுகிற தேவ ஊழியர்களுக்கும் கொடுங்கள்.
ஏழை போதகர்களுக்கு தசமபாகம் கொடுப்பதில் என் கணவர் மிகவும் கவனமாக இருந்தார். அதனால்தான் அவருக்கு பாரத ஸ்டேட் வங்கியில் சிறந்த வேலையைக் கொடுத்து ஆசிர்வதித்து அவரை உயர்ந்த நிலைக்கு உயர்த்தினார். எனவே, சீஷா ஊழியத்தின் மூலம் ஏழை ஜனங்களுக்கு  உங்கள் பொருளாதார ஆதரவைக் கொடுங்கள். சமீபத்தில் பாண்டிச்சேரியிலிருந்து ஒரு ஏழை தம்பதி வந்து தசமபாகம் கொடுத்தனர். நிச்சயமாக, தேவன் அத்தகையவர்களை அற்புதமான வழியில் ஆசீர்வதிப்பார். சங்கீதம் 41:1 கூறுகிறது, “சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுள்ளவன் பாக்கியவான்; தீங்குநாளில் கர்த்தர் அவனை விடுவிப்பார்.” சீஷா ஊழியத்தின் மூலம் உங்களால் முடிந்ததை ஏழைகளுக்கு கொடுங்கள். தேவன் அதை இரட்டிப்பாக உங்களுக்குத் திரும்பக் கொடுப்பார். பல வழிகளில், தேவன் உங்களை அளவில்லாமல் ஆசீர்வதிப்பார். தேவன் உங்களுக்கும் இந்த கிருபையையும், தாராள மனதையும் தரும்படி தேவனை வேண்டுகிறேன்.
Prayer:
என் அன்பின் பரலோகத் தகப்பனே,

இன்று நீர் என்னுடன் பேசியதற்காகவும், ஏழைகள்மீது நீர் எவ்வளவு கரிசனையாக இருக்கிறீர் என்பதற்காகவும் உமக்கு நன்றி. ஆண்டவரே, உம்மோடு நான் நெருங்கி நடக்க எனக்கு உதவும். ஏழைகளுக்கு உதவும் கிருபையை எனக்கு தாரும். ஏழ்மையில் இருக்கும் என் சொந்த உறவினர்களுக்கு ஆதரவாக இருக்க என்னை ஆசீர்வதியும். உதாரத்துவமான நபராக இருக்க எனக்கு உதவும்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே, ஆமென்.

For Prayer Help (24x7) - 044 45 999 000