கர்த்தர் உங்கள் நடைகளை உறுதிப்படுத்துவார்
Samuel Dhinakaran
30 Nov
அன்பானவர்களே, "நல்ல மனுஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும், அவனுடைய வழியின்மேல் அவர் பிரியமாயிருக்கிறார்" (சங்கீதம் 37:23) என்ற இன்றைய வாக்குத்தத்தத்தை உங்களோடு பகிர்ந்து கொண்டு உங்களை திடப்படுத்துவதில் எனக்கு அதிக சந்தோஷம். ஒருவருடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமானவையாக இருந்தால் அவனுடைய நடைகளை அவர் உறுதிப்படுத்துகிறார் என்பதை இந்த வசனத்தின் மூலம் அறிந்துகொள்கிறோம். இந்த வாக்குத்தத்தம் கூறுகிறபடி, இன்றைக்கு கர்த்தர் உங்கள் நடைகளை உறுதிப்படுத்துவார்; உங்களை யாராலும் அசைக்க இயலாது; உங்கள் வாழ்க்கையிலிருந்து எதையும் எடுத்துப்போடவும் யாராலும் இயலாது. உங்கள் வாழ்வில் தேவன் கட்டியெழுப்புகிறவற்றை பிசாசால் திருடவோ, அழிக்கவோ இயலாது.
"அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்" (சங்கீதம் 1:3) என்று வேதம் கூறுகிறது. ஆகவே, கர்த்தருக்குப் பிரியமாக நடந்துகொள்ளுங்கள்; அவர் உங்கள் நடைகளை உறுதிப்படுத்துவார். தேவன் உங்களை உயர்த்தி கொடுத்த அந்தஸ்தை ஏதாவது ஒரு காரியம் பிடுங்கிப்போட்டுவிடும் என்று இன்றைக்கு நீங்கள் பயந்துகொண்டிருக்கலாம் அல்லது தேவன் உங்களுக்குக் கொடுத்தவற்றை நீங்களே விட்டுக்கொடுக்கும்படி யாராவது மிரட்டிக்கொண்டிருக்கலாம். உங்களுக்கு எதிராக பொய் வழக்குகள் புனையப்படலாம் அல்லது தேவன் கட்டியெழுப்பியவற்றை எடுத்துப் போடும்படி ஜனங்கள் உங்கள் ஊழியத்திற்கு விரோதமாக எழும்பலாம். நீங்கள் பயப்படாதிருங்கள்!

நீங்கள் தேவனுக்கு பிரியமானவற்றை செய்யுங்கள். முன்னோக்கி தொடருங்கள். "ஆண்டவரே, உமக்காக நான் என்ன செய்யட்டும்?" என்று அவரிடம் கேளுங்கள். 'எதற்கும் பயப்படமாட்டேன், வாழ்வில் தேக்கமடைந்து நிற்கமாட்டேன்' என்று தைரியமாக அறிக்கை செய்யுங்கள். மாறாக, தொடர்ந்து முன்னேறுங்கள். அப்போது தேவன் உங்கள் நடைகளைக் காப்பாற்றுவார். நீங்கள் அவருடைய சித்தத்தை, அவருடைய ஊழியத்தை தொடர்ந்து நிறைவேற்றும்போது அல்லது அவரது வேலையை செய்யும்போது, சிறுமைப்பட்டவர்களுக்கு உதவும்போது, உங்களால் இயன்ற சிறந்த காரியங்களை கர்த்தருக்கென்று கொடுக்கும்போது உங்கள் நடைகள் உறுதிப்படும். அன்பானவர்களே, கர்த்தருக்குள் திடமாயிருங்கள். நீங்கள் ஒருபோதும் அசைக்கப்படுவதில்லை.
Prayer:
அன்பின் ஆண்டவரே, உம்முடைய வசனத்தின் மூலம் இன்றைக்கு என்னை உற்சாகப்படுத்துவதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். என்னுடைய வாழ்க்கையை உம் அன்பின் கரங்களில் முற்றிலுமாக அர்ப்பணிக்கிறேன். என் வாழ்க்கை எப்போதும் உமக்கு முன்பாக பிரியமானதாக இருக்கட்டும். ஆண்டவரே, நீரே என்னை பாதுகாத்து, நீர் எனக்குக் கொடுத்துள்ள ஆசீர்வாதங்களைச் சுற்றிலும் வேலியடைப்பீராக. நீரே என்னை பாதுகாக்கிறவர். உம்முடைய வாக்குத்தத்தத்தின்படி, நான் ஒருபோதும் அசைக்கப்படாதபடிக்கு, என்னுடைய நடைகளை உறுதிப்படுத்தியருளும். எல்லா சூழ்நிலைகளிலும் எனக்கு ஜெயத்தை கொடுத்து, உம்முடைய நாமத்தை மகிமைப்படுத்தியருளும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.