Loading...
Dr. Paul Dhinakaran

பயப்படாதே!

Dr. Paul Dhinakaran
17 May
இன்றைக்கு ஒருவேளை நீங்கள், ஜனங்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று யோசிக்கலாம். நீங்கள் வீட்டைவிட்டு வெகுதொலைவில் இருக்கலாம். பிறருடன் பேசுவதற்கு பயப்படலாம். தோல்வி அல்லது உதாசீனப்பட்டிருக்கலாம். வஞ்சமோ, பசியோ, வியாதியோ, வேதனையோ, மரணமோ எதுவாயிருந்தாலும், தேவன் உங்களைப்பார்த்து சொல்கிறார். “பயப்படாதே”. தேவையற்ற பயத்தோடிருக்கும் அநேகருக்கு இந்த ஆறுதல் மிகவும் தேவைப்படுகிறது. பயம் என்பது உண்மையல்ல. பயம் தேவனிடமிருந்து நம் கண்களை திருப்பி, நம்மை அச்சுறுத்துகிற பிரச்சினைகள்மீது வைக்கச் செய்கிறது. உங்கள் பயத்திற்கு ஒரு காரணம் இருக்கலாம். ஆனால், உங்களுடைய வாழ்வில் அது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடாது. உங்கள் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டுமென்பதை அது கட்டளையிடக்கூடாது. ஆண்டவர் உங்களோடிருந்தால், நீங்கள் பயத்தை ஆளமுடியும்.

 “பயப்படாதே” என்ற வார்த்தையானது, பனிபெய்யும் கிறிஸ்துமஸ் இரவில், பயத்தால் நடுங்கிய வயல்வெளி மேய்ப்பர்களுக்கு அருளப்பட்ட நற்செய்தியின் முதல் வார்த்தைகள். “பயப்படாதிருங்கள்” என்ற வார்த்தையானது உயிர்த்தெழுந்த கிறிஸ்து, அதிகாலையில் கல்லறையருகே அழுதுகொண்டிருந்த மரியாளுக்கு சொல்லப்பட்ட வார்த்தை. ஒருமுறை தவறு செய்த ஒரு குற்றவாளி மன்னரிடம் அனுப்பப்பட்டான். ராஜா அவனிடம் இரண்டு தண்டனைகளில் ஒன்றை நீ தேர்வு செய்துகொள்ளலாம் என்றார். நீ ஒரு கயிற்றில் தொங்க வேண்டும் அல்லது இருண்ட, பயமுறுத்தும் மர்மமான இரும்பு கதவிற்கு பின்னால் இருக்க வேண்டாம். இதில் ஏதாவது ஒன்றை நீயே தேர்வு செய்துகொள் என்றார். குற்றவாளி கயிற்றில் தொங்குவதை தேர்வு செய்தான். அவன் ஆர்வத்துடன் ராஜாவிடம், “அந்த மர்ம கதவிற்கு பின்னால் என்ன இருக்கிறது?” என்று கேட்டான். ராஜா சிரித்துக்கொண்டே கூறினார்: “இது வேடிக்கையானது தான். நான் தண்டனை கொடுக்கிற அனைவரிடத்திலும் இதை கூறுகிறேன். ஆனால், அனைவருமே கயிற்றையே தேர்ந்தெடுக்கின்றனர். இந்த கதவிற்கு பின்னால் “விடுதலை” உள்ளது. ஆனால், பெரும்பாலான ஜனங்கள் பயத்தினால் அதை அறியாமல் இருக்கின்றனர். ஆம், பிரியமானவர்களே, கர்த்தருக்காக நேரத்தை செலவிடாமல், நம்முடைய எதிர்காலம் எப்படி இருக்குமோ? என்கிற பயத்துடனே நாம் இருக்கிறோம். 
"பயப்படாதே" என்ற வார்த்தை வேதத்தில் 366 முறை வருகிறது. காரணமற்ற பயம் வேதனையை வருவிக்கும். ஆதாரமற்ற பயத்திலிருந்து நீங்கள் விடுதலையாக சிறந்த தீர்வு தேவனுடைய இரக்கத்தையும், கிறிஸ்துவை பற்றிய அறிவை அறி விரும்புவதாகும். “பயத்தை எவ்வாறு தவிர்க்கலாம்” என்று நீங்கள் கேட்கலாம்? பிரியமானவர்களே, “தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும், அன்பும், தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்” (2 தீமோத்தேயு 1:7). ஆகையால், அர்த்தமற்ற பயத்தை நீக்கி, நம்பிக்கையும் தைரியமுமுள்ள வார்த்தைகளையே பேசுங்கள். நீங்கள் பலங்கொண்டு திடமனதாயிருங்கள். யூதாவின் ராஜ சிங்கம் உங்களோடு வாசம்பண்ணுகிறார். நீங்கள் அவருடைய பிள்ளைகள். அவர் உங்களிலிருக்கும் பயத்தை புறம்பே தள்ளுவார்.
Prayer:
அன்பின் பரலோகப் பிதாவே, 

நீர் எனக்கு அன்பின் ஆவியையும், வல்லமையையும் தெளிந்த மனதையும் கொடுக்கிறபடியால் உமக்கு ஸ்தோத்திரம். எனக்குள் காணப்படும் அர்த்தமற்ற பயத்தை நீக்கியருளும். எதிர்காலத்தை குறித்து பயப்படாமல், சகலத்தை உமது பாதபடியில் அர்ப்பணிக்கிறேன். நீர் என்னை ஆசீர்வாதமாய் நடத்துவீர் என்று நான் விசுவாசிக்கிறேன். நீர் எனக்கு ஆசீர்வாதமாகத் தந்திருக்கிற உமது அன்பை பிறகுக்கு வெளிப்படுத்தவும், தெளிந்த சிந்தையோடு தீர்மானங்களை எடுக்கவும் எனக்கு உதவி செய்யும். 

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென்.

For Prayer Help (24x7) - 044 45 999 000