Loading...
Stella dhinakaran

விசுவாசத்தின் வெகுமதி!

Sis. Stella Dhinakaran
03 Jan
உங்கள் விசுவாசமே தேவனுடைய ஆசீர்வாதத்தை திறக்கும் திறவுகோலாகும். ஆபிரகாம் தேவனை உண்மையாய் தேடினதுமல்லாமல் குடும்பத்தினரையும் அவ்வழியில் நடத்தினான். “கர்த்தர் ஆபிரகாமுக்குச் சொன்னதை நிறைவேற்றும்படியாய் அவன் தன் பிள்ளைகளுக்கும், தனக்குப் பின்வரும் தன் வீட்டாருக்கும்: நீங்கள் நீதியையும் நியாயத்தையும் செய்து, கர்த்தருடைய வழியைக் காத்து நடவுங்கள் என்று கட்டளையிடுவான் என்பதை அறிந்திருக்கிறேன்” (ஆதியாகமம் 18:19) என்று கர்த்தராகிய ஆண்டவர் அவனைக்குறித்து சாட்சி அளிக்கிறார். இதுபோலவே நீங்களும் ஆசீர்வதிக்கப்படுவீர்கள். 

தேசத்திலே கொடிய பஞ்சம் ஏற்பட்டதால் அவள் தன் புருஷனோடும், இரண்டு பிள்ளைகளோடும் மோவாப் தேசத்திற்கு புறப்பட்டு சென்றாள். அங்கே நகோமியின் புருஷனாகிய எலிமெலேக்கு இறந்துபோனான். பின்பு, இரண்டு குமாரரும் மோவாபியரில் பெண் கொண்டார்கள். ஏறக்குறைய பத்து வருடங்கள் அங்கே வாசம் பண்ணினார்கள். திடீரென்று நகோமியின் இரண்டு மகன்களும்கூட இறந்துபோனார்கள். தன் புருஷனும், இரண்டு மகன்களும் இறந்தபின்பு, நகோமியும், அவளுடைய இரண்டு மருமகள்மாரும்  விதவைகளானார்கள். ஆகவே, நகோமி தன் மருமக்கள் இருவரையும் பார்த்து, “என் மக்களே, நீங்கள் உங்கள் பெற்றோரிடத்தில் திரும்பிப் போங்கள். கர்த்தர் உங்கள் இருவருக்கும் வாய்க்கும் புருஷனுடைய வீட்டிலே உங்களை சுகமாய் வாழ்ந்திருக்க செய்வாராக. கர்த்தருடைய கை எனக்கு விரோதமாயிருக்கிறதினால் உங்கள் நிமித்தம் எனக்கு மிகுந்த விசனம் இருக்கிறது” என்றாள். அப்பொழுது அவர்கள் சத்தமிட்டு அழுதார்கள். ஓர்பாள் தன் மாமியை முத்தமிட்டு போய்விட்டாள்; நகோமி, ரூத்தை நோக்கி: “நீயும் உன் சகோதரியின் பிறகே திரும்பிப் போ” (ரூத் 1:1-15) என்றாள். ரூத்தோ அவளை விடாமல் பற்றிக்கொண்டு, தன் மாமியார் நகோமியின் வாழ்க்கையை கூர்ந்து கவனித்தாள். இத்தனை கஷ்டங்கள், கசப்புகள், உபத்திரவங்கள், துன்பங்கள் மத்தியிலும் தன் தேவனாகிய கர்த்தரைத் தேடுவதில் அவள் உண்மையாய் இருப்பதைக் கண்டு, ஆச்சரியமடைந்தாள்! ஆம், நகோமி தேவனைத் தேடுவதில் உண்மையாயிருந்ததினால், ரூத்தும் அவ்வாறே அதே உண்மை அன்புடன் தேவனைத் தேடினாள். ஆகவே தேவன் அவளை ஆசீர்வதித்து, வசதி படைத்த மனிதரான போவாஸுடன் அவள் வாழ்வை மீண்டுமாக கட்டி எழுப்பி, அவள் சந்ததியை பெருகச்செய்தார். குறைவை மாற்றி, பூரண ஆசீர்வாதத்தை அருளினார். பிற்காலத்தில் அவளுடைய சந்ததியில் இயேசு கிறிஸ்து பிறந்தார். 
பிரியமானவர்களே, ஒரு குடும்பத்திலுள்ள எல்லா ஆண்களையும் மரிக்கக் கொடுத்து, தொடர்ச்சியான வேதனையையும் கசப்புகளையும் கவனித்தீர்களா? ஜீவனுள்ள தேவன்மீதுள்ள நம்பிக்கையிலிருந்து விலகுவதற்கு  கோடிக்கணக்கான காரணங்கள் இருந்தபோதிலும், நகோமியும் ரூத்தும் அவ்வாறு செய்யவில்லை. மேலும், இதுபோன்ற முக்கியமான நேரங்களில் கூட அவர்கள் ஒருவரை ஒருவர் நேசித்தார்கள். எந்தவிதமான குற்றஞ்சாட்டுகளும் இன்றி ஒருவருக்கொருவர் தங்கள் உண்மையைக் வெளிக்காண்பித்தார்கள். “உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்” (நீதிமொழிகள் 28:20) என்று வேதம் கூறுகிறது. அவர்களுடைய உண்மையே, அவர்கள் வாழ்வில் விசுவாச மேகத்தை வரச்செய்து ஆசீர்வாத மழையை பெய்யச்செய்தது. பிரியமானவர்களே, இப்போது பல்வேறு வடிவங்களில் உங்களைத் துன்புறுத்துகிற அக்கினி ஜூவாலையை போன்ற பிரச்சினைகளை கண்டு கலங்காதீர்கள். “மனுஷரை எங்கள் தலையின்மேல் ஏறிப்போகப்பண்ணினீர்; தீயையும் தண்ணீரையும் கடந்துவந்தோம்; செழிப்பான இடத்தில் எங்களைக் கொண்டு வந்து விட்டீர்” (சங்கீதம் 66:12) என்ற வார்த்தையின்படியே உங்களை வாழ்வை தேவன் செழிப்பாக்குவார். உற்சாகமாயிருங்கள்!
Prayer:
அன்புள்ள ஆண்டவரே,

உமது அற்புதமான அன்புக்கும் கிருபைக்கும் நன்றி. நான் பல நேரங்களில் விசுவாசமற்றவளாக காணப்பட்டாலும், நீர் எப்போதும் எங்களுக்கு உண்மையுள்ளவராயிருக்கிறீர். இப்போதும்கூட, துயரங்களையும், வேதனையையும் நான் கடந்து செல்லும்போது, நீங்கள் நல்லவர் என்பதை நான் அறிந்திருக்கிறேன். உமது கரம் என்னை தாங்கி நடத்துகிறபடியால் உமக்கு நன்றி. என்னுடைய வேதனையின் நேரத்திலும்கூட  மற்றவருக்கு நல்லவராகவும் கனிவாகவும் இருக்க உதவிச்செய்தருளும். உமது நாமம் மகிமைக்காக என் தலையை உயர்த்தும். உம்மையல்லாது நான் வேறெங்கு செல்ல முடியும். நீரே என் அடைக்கலமானவர். என் வாழ்வை செழிப்பாக்கும். எல்லாவற்றிலும் உமது நாமம் மகிமைப்படட்டும்

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000