Loading...
Paul Dhinakaran

தேவபயத்துடன் கூடிய விசுவாசம்

Dr. Paul Dhinakaran
13 Jun
அன்பு நண்பரே, இன்றைய தியானத்திற்கான வார்த்தை நீதிமொழிகள் 28:25லிருந்து கொடுக்கப்பட்டுள்ளது. “பெருநெஞ்சன் வழக்கைக் கொளுவுகிறான்; கர்த்தரை நம்புகிறவனோ செழிப்பான்.” வாலிபனான யோசேப்பின் மீது இச்சைக்கொண்ட ஒரு பெண் இருந்தாள். அவள் பெயர் போத்திபார். பார்வோன் அவன் வீட்டிலுள்ள சகலவற்றின்மீதும் யோசேப்பை தலைவனாக நியமித்திருந்தான். போத்திபர் யோசேப்பின்மீது இச்சைக்கொண்டு, “தன்னுடன் சேர்ந்து பொய்சொல்லும்படி” அழைத்தாள். ஆனால் அதற்கு யோசேப்பு, “நான் கர்த்தருக்குப் பயப்படுகிறேன், என் எஜமானுக்கு உண்மையாக இருக்க விரும்புகிறேன். அதனால் நான் பாவம் செய்ய மாட்டேன்” என்றான். ஆனால், அவள் அவன்மீது பொய்யான குற்றச்சாட்டை சொல்லி அவனை கைது செய்தாள். அவள் பேராசைக் கொண்ட ஒரு பெண்ணாக இருந்தால். ஆனால் யோசேப்போ கர்த்தருடைய நியாயத்தீர்ப்பில் மிகவும் விசுவாசமாகவும் உண்மையுள்ளவனாகவும் இருந்ததால், தேவன் அவனை பார்வோனுக்கு அடுத்த ஸ்தானத்தில் உயர்த்தினார்.
 
ஆம், கர்த்தரை நம்புகிறவனோ செழிப்பான்.  மனிதர்களை பிரியப்படுத்த பல விஷயங்களை செய்யும்படி அவர்கள் உங்களிடத்தில் சொல்லலாம். ஆனால், நீங்கள் மனிதர்களுக்கு அடிபணியாமல், கர்த்தருக்கு பயந்து நடப்பீர்களானால் அவர் உங்களை கனம்பண்ணுவார். ஆபிரகாம் இதைச் செய்தார். ஆதியாகமம் 22:2ல், கர்த்தர் ஆபிரகாமிடம், “உன் புத்திரனும் உன் ஏகசுதனும் உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக்கொண்டு, மோரியா தேசத்துக்குப் போய், அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு என்றார்.” ஆபிரகாம் பேராசை கொள்ளவில்லை. எல்லா சூழ்நிலைகளிலும் தேவனுக்குக் கீழ்ப்படிய மட்டுமே அவரது இதயம் விரும்பியது. தேவனுக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்ய அவர் ஆயத்தமாயிருந்தார். தேவனுக்கு கீழ்ப்படிவதற்காக அவர் தன் மகனை பலியிடவிருந்தபோது, தேவன், “பிள்ளையாண்டான்மேல் உன் கையைப் போடாதே, அவனுக்கு  ஒன்றும் செய்யாதே; நீ அவனை உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல் எனக்காக ஒப்புக்கொடுத்தபடியினால் நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றார்” (ஆதியாகமம் 22:12).
தேவன் அவரை ஆசீர்வதித்து, செழிக்கப்பண்ணினார். இன்று  ஒரு பெரிய தேசமே அவரது பெயரில் அழைக்கப்படுகிறது. இஸ்ரேல் அவரை தகப்பன் என்று அழைக்கிறது. கர்த்தரை நம்புகிற மனிதன் செழிப்பான். உலகத்தின் வார்த்தைகளைக் கேட்காமல், அதிகார அச்சுறுத்தலை கேட்காமல், பேராசைக்கொண்ட ஆண்கள்/பெண்களுக்கு அடிபணியாமல், தேவனுக்கு கீழ்ப்படிந்து நீதியுடன் நடந்தால்  உங்கள் வாழ்வும் செழிக்கும். “கர்த்தரை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான்” (நீதிமொழிகள் 29:25). எல்லாவிதமான பேராசைகளையும் தவிர்த்து, 1 தீமோத்தேயு 6:6 கூறுகிறபடி, “போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்.”
Prayer:
அன்பின் தகப்பனே,

உம்மை நம்பி, உமக்கு கீழ்ப்படிந்து, நீதியுடன் வாழக்கூடிய இருதயத்தை எனக்குத்தாரும். என் வாழ்வில் ஜனங்கள் கொண்டுவருகிற அனைத்து வலைகளிலிருந்தும் தப்பி ஓட எனக்கு உதவும். தேவபக்தியுடன் கூடிய இருதயத்தையும் நம்பிக்கையையும் எனக்குத் தாரும். உமக்குப் பயந்து, பாவத்திலிருந்து தப்பிக்க எனக்கு அருள் தாரும். 

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000