Loading...
Samuel Paul Dhinakaran

விசுவாச கிரியை

Samuel Dhinakaran
16 Jun
கிறிஸ்துவுக்குள் அன்பு நண்பர்களே, தேவனுடைய திட்டத்தை அறிந்துகொண்டு, அந்த திட்டத்தின் மேல் நம்பிக்கை வைத்து, அதை செயலாற்றுவதே விசுவாச கிரியையாகும். நாம் சரியானதைத் தேர்வு செய்யவும், நம் எதிர்காலத்தைக் குறித்து சரியான முடிவுகளை எடுக்கவும், படிப்பு, தொழில், வாழ்க்கைத் துணையை தெரிந்தெடுத்தல் போன்றவைகளிலும் தேவன் உதவிச் செய்வார். குடும்பத்தில் உங்கள் கணவன்/மனைவி அல்லது பிள்ளைகளுடனோ பிரச்னை ஏற்படும்போது, உங்களுக்குச் சரியான தீர்வுகளைக் கொடுப்பார். 

உங்கள் அன்பிற்குரியவர்களைக் குறித்து தேவன் உங்களிடத்தில் பேசுவார். பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய சிந்தையை உங்களுக்கு வெளிப்படுத்தி, உங்களுடைய திட்டத்தை வீட்டிலோ, வியாபாரத்திலோ, ஊழியத்திலோ அதற்கு ஏற்ற இடத்திலோ வாய்க்கப்பண்ணுவார். தேவனுடைய வல்லமை  உங்கள் வாழ்க்கையில் பலமாய் வெளிப்படுவதை காண்பீர்கள். நீங்கள் ஆசீர்வாதமாக இருப்பதோடு, பிறருக்கும் ஆசீர்வாதமாக திகழ்வீர்கள்.
விசுவாசம் செயல்படும்போது, உங்கள் வாழ்க்கையில் தேவனுடைய பெலனையும், நன்மைகளையும் பெற்றுக்கொள்வதோடு உங்களுடையதை மற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்கவும் ஏதுவுண்டாகிறது. பேதுரு, சபை அதிகாரிகளின் முன்பாக நிற்க தேவன் அவருக்கு தைரியத்தையும், ஞானத்தையும், துணிச்சலையும் தந்தார் (அப்போஸ்தலர் 4:8-13). அவரால் சீஷர்களை வழிநடத்த முடிந்தது.  முடவனை எழுந்திருக்க செய்தது போன்ற வல்லமையான அற்புதங்களை செய்ய தேவன் பேதுருவுக்கு வல்லமையைக் கொடுத்தார். இதுதான் நீங்கள் இயேசுவோடுகூட நடக்கும்போது சம்பவிக்கும் காரியங்கள். பயங்களும் குழப்பங்களும் உங்களைவிட்டு மறைந்துவிடும். ஒரு ஆழமான தொடர்பு இயேசுவுடன் ஏற்பட்டு நாம் தேவனுக்காக வல்லமையான காரியங்களைச் செய்வதற்கேதுவான கிருபையையும் வல்லமையையும் பெற்றுக்கொள்வோம். அவர் நம்மை முத்திரை மோதிரமாக மாற்றுவார். 

சுருங்கச் சொல்ல வேண்டுமென்றால், தேவன் நமக்காக வைத்திருக்கிற திட்டத்தையும் நோக்கத்தையும் நிறைவேற்ற அவருக்கு முன்பாக நாம் நீதியோடும், வைராக்கியத்தோடும் காணப்பட வேண்டும். “ஆவியில்லாத சரீரம் செத்ததாயிருக்கிறதுபோல, கிரியைகளில்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது” (யாக்கோபு 2:26). ஆகவே கிரியைகளோடு கூடிய விசுவாசத்தினால் அற்புதங்களையும் அடையாளங்களையும் பெற்று ஆசீர்வாதமாகவும், மற்றவருக்கு சாட்சியாகவும் வாழ்வோம். இயேசுவின் மீது ஆழமான விசுவாசத்தோடிருந்து, முழு இருதயத்தையும் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்து, அவருடைய கிருபையிலும் வல்லமையிலும் களிகூர்ந்து, இயற்கைக்கு அப்பாற்பட்ட காரியங்களை தேவனுக்காகச் செய்வோம். 
Prayer:
வல்லமையுள்ள தேவனே,

இயற்கைக்கு அப்பாற்பட்ட அதிசயங்களை செய்கிறவரே உமக்கு ஸ்தோத்திரம். உம்முடைய அற்புதத்தை பெற்றுக்கொள்ள விசுவாசத்தை தாரும்.  விசுவாசத்தை அப்பியாசப்படுத்த கற்றுத்தாரும். என்னுடைய கிரியைகளில் விசுவாசத்தை காட்டவும், அது மற்றவர்களை எழுச்சியூட்டக்கூடிய வகையில் காணப்படவும் கிருபை செய்தருளும். எல்லா துதி கனம் மகிமை யாவும் உமக்கே செலுத்துகிறேன்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் ஜீவனுள்ள நல்ல பிதாவே,

ஆமென்.

For Prayer Help (24x7) - 044 45 999 000