Loading...
Stella dhinakaran

கண் சரீரத்தின் வெளிச்சமாயிருக்கிறது!

Sis. Stella Dhinakaran
04 Aug
இன்றைய நாட்களில், மக்ககளில் அநேகர் தங்கள் கண்களின் இச்சையினால், கேடான காரியங்களில் ஈடுபடுகிறார்கள். எளிதில் தங்கள் மனைவிகளின் அழகைக் காட்டிலும், வேறு பெண்கள் அழகாகத் தோன்றுவதால், பாவம், பிரிவினை, கசப்பு, விரோதம் போன்ற அனைத்து பிசாசின் கிரியைகளும் அவர்களுடைய இல்வாழ்வில் நுழைவதற்கு காரணமாயிருக்கிறார்கள். அன்பானவர்களே! இந்த இருளின் பாதையில் நீங்களும் செல்வீர்களானால், இன்றே உங்கள் கண்களை சுத்திகரிக்கும்படி, உங்கள் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவிடம் உங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, வெளிச்சத்தின் பாதையைக் கண்டுபிடித்து அதில் நடவுங்கள். ஏற்கனவே, வெளிச்சத்தில் வாழ்பவர்கள், அவ்வாறு இருளில் வாழ்கிறவர்களுக்காக மன்றாடி ஜெபித்து, அவர்களை நல்வழிப்படுத்துங்கள்.
 
ஒரு குடும்பத்தின் தலைவர், கர்த்தருடைய இரட்சிப்பின் மேன்மையை உதாசீனப்படுத்தி, பல பெண்கள்மேல் மோக இச்சைக்குட்பட்டு, கண்களிhனல் பாவம் செய்து, கேட்டின் வழிகளிலேயே துணிகரமாய் நடந்துவந்தாh. தன் மனைவியின் மனதை வேதனைப்படுத்தி, பிள்ளைகளுக்கும் உபயோகமற்ற தகப்பனாயிருந்தார். மனைவியோ கர்த்தரிடம் அவரை அனுதினமும் ஒப்புவித்து, தானே கஷ்டப்பட்டு பணம் சம்பாதித்து, பிள்ளைகளையும் நல்வழியில் நடத்தி வந்தாள். பாவத்திலேயே துணிகரமாக வாழ்ந்த வந்த அந்த மனிதன், அந்தகார வழிகளில் தன் வாழ்வையும் நாசமாக்கிக் கொண்டான். பாவத்தின் பலனாக அவனது கண்கள் இரண்டும் 45 வயதிலேயே குருடனாது. இனி யார் அவனைத் தேடுவார்கள்? அந்த பரிதாப நிலையில் மனைவிதான் அவன் செய்த கொடூரங்களையெல்லாம் மன்னித்து, அவனுக்கு வாழ்வளித்து, கர்த்தருடைய வெளிச்சத்தின் பாதையிலும் அவன் நடக்க, அவனுக்கு வழிகாட்டியாயிருந்தாள்.
அன்பானவர்களே, “உன் கண் கெட்டதாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் இருளாயிருக்கும்; இப்படி உன்னிலுள்ள வெளிச்சம் இருளாயிருந்தால், அவ்விருள் எவ்வளவு அதிகமாயிருக்கும்” (மத்தேயு 6:23).  இந்த பரிதாப நிலை உங்கள் வாழ்வில் வராமலிருக்க, நன்றாயிருக்கிற நாட்களிலேயே இன்றுமுதல் கர்த்தருடைய வெளிச்சத்தில் நடப்பதில் ஜாக்கிரதையாயிருங்கள். கண்களை பரிசுத்தமாய் காத்துக் கொள்ளுங்கள். தெய்வீக வெளிச்சத்தை அருளுகிற தேவன்மீது கவனம் செலுத்துங்கள். நீங்கள் சரியான பாதையில் நடக்கும்படி தேவன் உங்களை வழிநடத்துவார். “உன் வலது கண் உனக்கு இறடலுண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும்” (மத்தேயு 5:29). தேவனுடைய வார்த்தையை இலகுவாக எடுத்துக்கொண்டு தொடர்ந்து பாவம் செய்யாதீர்கள். மனந்திரும்புங்கள்! தவறான வழிகளை விட்டு, மனமாற்றமடைந்திடுங்கள். அப்பொழுது தேவசாயலாக மாற்றப்படுவீர்கள். “தீமையைப் பார்க்கமாட்டாத சுத்தக்கண்ணனே” (ஆபகூக் 1:13) என்று வேதம் கர்த்தரை வர்ணிக்கிறது. ஆகையால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்” (மத்தேயு 5:48). சற்குணம் என்றால் நல்ல குணம். நம்முடைய பரலோகத்தகப்பனுடைய கண்களைப் போன்று உங்கள் கண்களையும் தூய்மையாக காத்துக்கொள்ளுங்கள்.
Prayer:
அன்பின் இரட்சகரே!
 
என் கண்களையும் இருளில், பாவத்தில் விழுந்து விடாதபடி நீரே வெளிச்சத்தின் பாதையில் நடத்தும். அப்படியே துணிகரமாக இருளின் பாதையில் நடக்கிற மற்ற மக்களுக்காகவும் பாரத்தோடு வேண்டுதல் செய்யும் ஜெப ஆவியினாலும் என்னை நிரப்பும். நீர் பூரண சற்குணராயிருக்கிறபடியால், நானும் உம்மைப்போல சற்குணராயிருக்கும்படி வழிநடத்தும். நீர் இந்த ஜெபத்தைக் கேட்டபடியால் உமக்கு ஸ்தோத்திரம்.
 
இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,
 
ஆமென்.

For Prayer Help (24x7) - 044 45 999 000