Loading...
Dr. Paul Dhinakaran

பெரிய காரியங்களை எதிர்பாருங்கள்!

Dr. Paul Dhinakaran
03 Sep
நம்முடைய தேவன் சர்வ வல்லமையுள்ளவர். அவர் எல்லாம் அறிந்தவர். பெரியவர். வல்லமை மிகுந்தவர். பழைய ஏற்பாட்டு காலத்தில் தேவனுடைய மகத்தான கிரியைகளைக் கண்டு மக்கள் பயபக்தியுடன் கர்த்தரை சேவித்தனர் என்று நாம் வாசிக்கிறோம். “யோசுவாவின் சகல நாட்களிலும், கர்த்தர் இஸ்ரவேலுக்காகச் செய்த அவருடைய பெரிய கிரியைகளையெல்லாம் கண்டவர்களும், யோசுவாவுக்குப் பின்பு உயிரோடிருந்தவர்களுமாகிய மூப்பரின் சகல நாட்களிலும் ஜனங்கள் கர்த்தரைச் சேவித்தார்கள்” (நியாயாதிபதிகள் 2:7). பழைய ஏற்பாட்டில், கர்த்தருடைய கிரியைகள் எல்லா ஜனங்களுக்கு முன்பாகவும் வெளியரங்கமாய் காணப்பட்டது. இஸ்ரவேலரை விடுவிக்கும்படி தேவன் எகிப்தியர்களுக்குள் வாதைகளை அனுப்பினார். இஸ்ரவேலர் வெட்டாந்தரையில் நடக்கும்படி தேவன் செங்கடலை பிளந்தார். எகிப்தியர்கள் இஸ்ரவேலரை அவ்வழியே துரத்திக்கொண்டு வந்தபோது, அவர்களை கடலிலே மூழ்கடித்தார். எரிகோவின் மதில்களை தகர்த்தார். இஸ்ரவேல் ஜனங்கள் கடந்து செல்லும்படி யோர்தானை பிரித்தார். பகலிலே மேகஸ்தம்பத்தையும், இரவிலே அக்கினி ஸ்தம்பத்தையும் அனுப்பி அவர்களை வழிநடத்தினார்.  கர்த்தருடைய அற்புதமான கிரியைகளை கண்ட மக்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் அவரை நம்பின்hர்கள். ஆம், தேவன் வல்லமையான காரியங்களை செய்யும்போது, அதிலே அவருடைய மகத்துவத்தை காண்கிறோம். அவரை பிரமிப்புடனே ஆராதிப்போம். 

ஒருமுறை அநேக பட்டணங்களை வென்ற அலெக்சாண்டரைப் பற்றி வாசித்தேன். எப்பொழுதெல்லாம் அவர் ஒரு பட்டணத்தைக் கைப்பற்றுகிறாரோ, அப்பொழுதெல்லாம், அந்தப் பட்டணத்து தலைவனிடம், தன்னுடைய சிலையை பட்டணத்தில் நடுவிலே வைக்கும்படியாய் சொல்வான். ஒருமுறை அவன் ஒவ்வொரு பட்டணமாகச் சென்று சிலைகளை சோதித்தான். அவைகள் பட்டணத்தின் நடுவிலே இருப்பதைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தான். ஆனால், ஒரு குறிப்பிட்ட பட்டணத்தில் சிலை இல்லை. அவர் பட்டணத்தின் பெரியவர்களைக் கூப்பிட்டு கத்தினார். என்னுடைய சிலை எங்கே என்று, அவர்கள் ஒருகணம் அவகாசத்திற்கு பின்பு, தங்கள் சத்தத்தை உயர்த்தி ‘அலெக்சாண்டார்’ என்று சொன்னார்கள். உடனே சில வாலிபர்கள் அங்கு ஓடிவந்தனர். பெரியவர்கள் அவரிடம், ‘ஐயா, உங்களை சிலைவடிக்கவில்லை. ஆனால் எங்களுடைய ஆண் பிள்ளைகளுக்கு “அலெக்சாண்டார்” என்று பெயர் வைத்து, உங்களுக்கு பெருமையைச் சேர்த்துள்ளோம்’ என்று கூறினர். 
அவருடைய வாழ்வில் பெரிய காரியங்களை செய்த தேவனால் உங்களுக்கும் பெரிய காரியங்களைச் செய்ய முடியும். புதிய ஏற்பாட்டில் தேவன் இயேசுவின் மூலம் அதிசயங்களைச் செய்தார். செங்கடலை இரண்டாய் பிரித்ததுபோன்றோ அல்லது எரிகோ கோட்டைகளை தகர்த்தது போலவோ அல்லாமல், இயேசு ஜனங்களை சுகமாக்குவதற்கும், விடுவிப்பதற்கும், ஆசீர்வதிப்பதற்கும் இவ்வுலகிற்கு வந்தார். தேவனுடைய மிகப்பெரிய நோக்கம் இயேசுவின் முலம் ஆத்துமாக்களை இரட்சிப்பது. இயேசு சிலுவையில் தன் ஜீவனையே தியாகமாய் கொடுத்து நமது மீட்பிற்கான விலையை செலுத்தியிருக்கிறார். தேவனுடைய அன்பு எல்லாவற்றையும் விட மேலானது என்று நாம் வாசிக்கிறோம். “இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது” (1 கொரிந்தியர் 13:13). உலகம் கண்ட மிகச்சிறந்த அன்பு, இயேசுவின் அன்பு. அவருடைய அன்புக்கு ஈடு இணையில்லை. “ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை” (யோவான் 15:13). தேவன் உங்கள்மீது வைத்துள்ள அன்பு மிகப்பெரியது. உங்களுக்காக தம் ஜீவனையே அர்ப்பணித்தவர், உங்களுக்காக மற்றெல்லாவற்றையும் கொடுக்கமாட்டாரா?. உங்கள் வாழ்நாள் முழுவதும் அவருடைய நாமத்தை நீங்கள் விசுவாசிக்கும்படி அவர் உங்களுக்காக பெரிய அதிசயங்களை செய்வார்.
Prayer:
என்னை நேசிக்கிற அன்பு தகப்பனே,

இன்று நீர் என்னுடன் பேசிய ஆசீர்வாத வார்த்தைக்காக உமக்கு நன்றி. இஸ்ரவேல் ஜனங்களுக்காக மகத்தான அற்புதங்களை செய்து, வைராக்கியமாய் அவர்களை வழிநடத்திய தேவனே, நீர் எனக்காகவும் பெரிய காரியங்களை செய்வீh என்று நம்புகிறேன். நீர் வந்து என்னில் வாழும்படி உம்மை அழைக்கிறேன். சாத்தான் என்னை சூழ்ந்துகொள்ளாதபடி, உமது பரிசுத்த ஆவியினால் நிரப்பும். என்னை உமது ஆலயமாக மறுரூபப்படுத்துவீராக.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000