நீங்கள் கர்த்தரின் சுதந்தரம்
Stella Ramola
27 Sep
அன்பானவர்களே, "கர்த்தர் தம்முடைய ஜனத்தை நெகிழவிடாமலும், தம்முடைய சுதந்தரத்தைக் கைவிடாமலும் இருப்பார்" (சங்கீதம் 94:14) என்ற வாக்குத்தத்தத்தை தியானிப்போம். யார் இந்த சுதந்தரம்? தேவனுடைய பிள்ளையாகிய நீங்களே அந்த சுதந்தரம்! இந்த வசனம் கூறுகிறபடி, தேவன் உங்கள் பரம பிதாவாக இருக்கிறார்; நீங்கள் அவருக்கு அருமையான பிள்ளையாக இருக்கிறீர்கள். ஆகவே, ஆண்டவரிடத்தில் இருப்பவை எல்லாம் உங்களுக்குரியவையாய் உள்ளன.
'சுகம் பெற்றே ஆகவேண்டும்' என்ற நிர்ப்பந்தமான நிலையில் இருக்கிறீர்களா? குடும்பத்தை நடத்துவதற்கு, வியாபாரம் செய்வதற்கு அல்லது வேலையை சரியாய் செய்வதற்கு தேவையான ஞானத்தை தேடுகிறீர்களா? 'என்னை நேசிப்பதற்கு யாருமேயில்லையே' என்று அங்கலாய்த்து உள்ளமுடைந்துபோயிருக்கிறீர்களா? புறக்கணிக்கப்பட்டதாய், தனிமையில் இருப்பதாய் உணர்கிறீர்களா? குடும்பத்தில், உறவுகளுக்கு மத்தியில் சமாதானம் வேண்டும் என்று வாஞ்சிக்கிறீர்களா? எதிர்காலம் எப்படி இருக்குமோ? சரியான வாழ்க்கைத்துணை அமையுமா? விரும்பும் பதவி உயர்வு, விரும்பும் பள்ளியில், கல்லூரியில் இடம் கிடைக்குமா? வாழ்க்கையில் ஜெயம்பெற முடியுமா? என்று கலங்கிப்போயிருக்கிறீர்களா? நீங்கள் ஒருவேளை பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியிருக்கக்கூடும்; வாழ்வில் வளமடைய வாஞ்சிக்கக்கூடும். மனங்கலங்காதிருங்கள். நீங்கள் எதிர்பார்க்கும் எல்லாமே தேவனிடம் இருக்கிறது.

"என் பிள்ளையே, என்னுடையவை எல்லாம் உன்னுடையதாயிருக்கிறது," என்று ஆண்டவர் உங்களிடம் கூறுகிறார். ஆகவே, திடமனதாயிருங்கள்; தைரியமாயிருங்கள். தம்முடைய குணமாக்கும் வல்லமையினால் ஆண்டவர் உங்கள் காயங்களை ஆற்றுவார். சமாதானப் பிரபுவாகிய அவர் உங்கள் இருதயத்தை சொஸ்தமாக்குவார். தம்முடைய மாறாத அன்பினால் அவர் உங்களை மூடுவார். தம்முடைய பெலனை அவர் உங்களுக்குக் கொடுத்து, உங்களை ஸ்திரமாய் நிற்கப்பண்ணுவார். உங்களுக்கு ஆச்சரியமான ஆலோசனைகளை கொடுத்து, உங்களை ஞானத்தினால் நிரப்புவார். இது எவ்வளவு சந்தோஷம்! நீங்கள் ஆண்டவரின் சுதந்தரமாயிருக்கிறீர்கள். இன்றைக்கு உங்களுக்குத் தேவைப்படும் எல்லாவற்றையும், அவர் தமது இருதய பரிபூரணத்தினால் உங்களுக்குக் கொடுப்பார். உங்கள் பரம பிதா தம்மிடத்தில் இருக்கும் எல்லாவற்றையும் உங்களுக்கு தந்தருள விரும்புகிறார்; அவர் ஒருபோதும் தம்முடைய சுதந்தரத்தை கைவிடமாட்டார். இன்றைக்கு நாள் முழுவதும் அவரை ஸ்தோத்திரித்துக்கொண்டே இருங்கள்; இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Prayer:
அன்புள்ள ஆண்டவர் இயேசுவே, நீர் கொடுத்திருக்கும் அருமையான வாக்குக்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். என்னை உம்முடைய பிள்ளையாக ஏற்றுக்கொண்டதற்காக உமக்கு நன்றி. என்னை உமக்கு சுதந்தரமாக தெரிந்துகொண்டதற்காகவும், எந்த சூழ்நிலையிலும் என்னை கைவிடாமல் இருப்பதற்காகவும் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். ஆண்டவரே, உம்முடைய வசனம் கூறுகிறபடி, உமக்குரியவை எல்லாம் என்னுடையதாயிருக்கிறது. இப்போதும், நாம் ஜெபிக்கும் இந்நேரமே அற்புதங்களைச் செய்யும் உம்முடைய வல்லமை என் வாழ்வில் வெளிப்படட்டும். இன்று என் வாழ்வில் உம்முடைய சுகத்தை, உம்முடைய ஞானத்தை, நீர் அருளுகிறவற்றை, உம்முடைய ஆசீர்வாதங்களை நான் சுதந்தரித்துக்கொள்ளட்டும். எனக்காக நீர் திட்டம்பண்ணியிருக்கிறதை செய்யக்கூடிய பெலத்தையும் மனதிடத்தையும் எனக்கு அருளிச் செய்யும். உம்மிடம் இருக்கும் எல்லாவற்றையும் அருளிச்செய்து என்னை ஆசீர்வதிப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். என் வாழ்வில் எதுவும் குறைவுபடாதபடிக்கு, பரிபூரணமாய் என்னை ஆசீர்வதிப்பதற்காக உமக்கு நன்றி. என் பரம பிதாவாக இருக்கும் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.