Loading...
Stella dhinakaran

மனதுருக்கதுடன் உங்களை வரைந்திருக்கிறார்!

Sis. Stella Dhinakaran
16 Sep
என் விலையேறப்பெற்ற சகோதர சகோதரிகளே, இன்றும் தேவன் உங்களைப்பார்த்து, உருக்கமான இரக்கங்களால் உங்களை சேர்த்துக்கொள்வேன் என்று சொல்லுகிறார். தேவன் உங்களை சாத்தானின் கட்டுகளிலிருந்த விடுவிக்க விரும்புகிறார். தாவீது தேவனுக்கு விரோதமாக தவறு செய்தபோது, தேவன் அவனை கொன்றுபோடவில்லை. ஆகையினால் தான் அவன் தேவனைப்பார்த்து “தேவனுடைய இரக்கம் பெரியது” என்று கூறுகிறான். இன்றும் கூட, தேவனிடத்தில் உங்கள் தவறுகளை அறிக்கையிடுவதன் மூலமும் தேவன் உங்கள்மீது இரக்க காட்டுவார். நீங்கள் கர்த்தரை நோக்கி, “பிதாவே என்னை மன்னியும். இந்த பெரிய தவறை நான் செய்துள்ளேன். இந்த சிக்களிலிருந்து விடுதலையாக எனக்கு உதவிச்செய்யும்” என்று கேளுங்கள். தாவீது தேவனை நோக்கி கூப்பிட்டபோது, தேவனுடைய இரக்கம் தாவீதின் மீது வந்தது. தாவீது கர்த்தரை நோக்கி கூப்பிட்டான். 

இன்றைக்கும்கூட நீங்கள் பல சிக்கல்களை எதிர்கொண்டிருக்கலாம். உங்கள் வாழ்க்கையை இயேசு கிறிஸ்துவிடம் அர்ப்பணித்துவிடுங்கள். “ஆண்டவரே, எனக்கு இரங்கும். நான் பாவம் நிறைந்தவன்(ள்). உமது விலையேறப்பெற்ற இரத்தத்தினால் என்னைத் பரிசுத்தமாக்கும் என்று கேளுங்கள். தேவகிருபை நம்மை சூழ்ந்துகொண்டு நம் தவறுகளை மன்னித்து அழித்துவிடும். தேவனுடைய இரக்கம் எல்லாப் பிரச்சினைகளிலிருந்தும், பாவங்களிலிருந்தும் உங்களை விடுவிக்கும். அவைகள் உங்களை ஒருபோதும் தொடாது. தேவன் தாவீதுக்கு இரக்கம் காட்டியதுபோல, அவர் உங்களுக்கும் இரக்கம் காட்டுவார். எவ்வளவு இரக்கமுள்ள தேவன்.
 “இந்த ஏழை கூப்பிட்டான், கர்த்தர் கேட்டு, அவனை அவன் இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கி இரட்சித்தார்” (சங்கீதம் 34:6) என்று வேதத்தில் வாசிக்கிறாம். மேலும், “ஆண்டவரே, நீர் மனவுருக்கமும், இரக்கமும், நீடிய பொறுமையும், பூரண கிருபையும், சத்தியமுமுள்ள தேவன்” (சங்கீதம் 86:15; சங்கீதம் 103:8). தேவன் கிருபையும் இரக்கமும் நிறைந்தவர். இந்த கிருபையின் தேவன் உங்கள் மத்தயில் இருக்கிறார். இன்று நீங்கள் அவரை நோக்கி கூப்பிடும்போது, அவரது இரக்கம் உங்கள்மீது காணப்படும். அவர் உங்களுடைய பாவங்களை கழுவி சுத்திகரித்து உறைந்த மழையைப்போல் வெண்மையாக்குவார். “உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழைப்போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும்” (ஏசாயா 1:18). ஆகவே, கர்த்தருக்கு முன்பாக உங்களை சரிப்படுத்திக் கொள்ளுங்கள். அவர் உங்களை ஒரு புதுசிருஷ்டியாக மாற்றுவார்.
Prayer:
அன்பின் தேவனே,

இன்று என் வாழ்க்கையை உம்மிடத்தில் அர்ப்பணிக்கிறேன். நான் என் வாழ்க்கையில் பல தவறுகளை செய்திருக்கிறேன். இரக்கமுள்ள தேவரீர் தயவுகூர்ந்து என்னை மன்னித்தருளும். உமது அன்பும் இரக்கமும் எனக்குள் வரட்டும். உமது கிருபைகளினால் என்னை மூடிக்கொள்ளும். என்னை புது சிருஷ்டியாய் மாற்றும். எல்லாவித அடிமைத்தனத்திலிருந்தும் என்னை விடுவித்தருளும்.

இயேசுவின் நாமததில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000