Loading...
DGS Dhinakaran

முழுமனதுடன்செய்யுங்கள்!

Bro. D.G.S Dhinakaran
09 Sep
நாம் எதை செய்தாலும் மனப்பூர்வமாய் செய்ய வேண்டும். ஒரு வேலைக்காரன் தன் எஜமானுக்கு எப்படி ஊழியம் செய்யவேண்டும் என்று வேதம் கூறுகிறபடி, தேவனுக்கு ஊழியஞ்செய்வதை மனப்பூர்வமாய் முழுமனதோடு செய்ய வேண்டும். தாவீது எல்லாவற்றிலும் கர்த்தருக்கு உண்மையாய் சேவை செய்தான் என்பதை வேதத்தில் வாசிக்கிறோம். இஸ்ரவேலின் ராஜாவுக்கு சேவை செய்ய அழைக்கப்பட்டிருப்பதாக தாவீது சங்கீதத்தில் கூறுகிறான். அவன் வாத்தியத்தை வாசிக்கும்போதெல்லாம், சவுலின் மேலிருந்த அசுத்த ஆவி அமைதியாகிவிடும். கர்த்தர் அவனோடு இருந்தபடியால் தாவீது எல்லாவற்றிலும் வெற்றிபெற்றான் (1 சாமுவேல் 18:14). தாவீது செய்த எல்லாவற்றையும் கர்த்தர் நினைவில் வைத்திருந்தார். அப்படித்தான் தாவீது கோலியாத்தை தோற்கடித்தான். அவன் எல்லாவற்றையும் தேவனிடத்திலிருந்து ஆலோசனை பெற்றபிறகே செய்தான். அதனால் தான் தாவீது தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றவனாயிருந்தான் (அப்போஸ்தலர் 13:22) 

ஒரு முறை, வெளிநாட்டிலிருந்து வந்த தேவஊழியர் ஒருவர் என்னை சந்தித்தார். அவர் என்னிடம், “ஏன் எப்பொழுதும் ஜெபம் ஜெபம் என்று இருக்கிறீர்கள்” என்றார். நான், “பிரசங்கம் ஆயத்தம் பண்ணுகிறேன்” என்றேன்.  உடனே அவர் சிரித்துக்கொண்டே, அவருடைய வேதாகமத்தை என்னிடம் கொடுத்தார். நான் அதை திறந்துபார்த்த பொழுது, இரண்டு பக்கங்களுக்கு நடுவே ஒரு தாள்  ஒட்டி வைக்கப்பட்டிருந்ததை பார்த்தேன். அதில் பிரசங்கக் குறிப்பு இருந்தது. அப்படி வேதாகமம் முழுவதும் ஏராளமான பிரசங்க குறிப்புகள் ஒட்டி வைக்கப்பட்டிருந்தன.  அப்பொழுது அவர், “நான் மேடையில் ஏறி நின்று, “கர்த்தாவே” என்று சொல்லிக்கொண்டே வேதத்தை திறப்பேன். அந்த நேரத்தில் எந்த பிரசங்க குறிப்பு வருகிறதோ, அதையே நான் பிரசங்கிப்பேன்” என்றார். எனக்கு அன்பானவர்களே, “கர்த்தருடைய வேலையை அசதியாய் செய்கிறவன் சபிக்கப்பட்டவன்” என்று வேதம் சொல்லுகிறது (எரேமியா 48:10). ஆகவே, நாம்  எதை செய்தாலும் கர்த்தருடைய  பாதத்தில் காத்திருந்து அவருக்கென்று முழு இருதயத்தோடே அவருடைய நாமத்தின் மகிமைக்கென்று செய்வோம் (1 கொரிந்தியர் 10:31; கொலோசெயர் 3:24).
கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது” (2 கொரிந்தியர் 5:14) என்ற பவுலடிகளின் அனுபவத்தோடு தேவனுக்காக மனப்பூர்வமாக ஊழியம் செய்யவேண்டும். நீங்கள் ஒரு நிமிடம் ஜெபித்தாலும், அந்த ஜெபம் உங்கள் உள்ளத்தின் ஆழத்திலிருந்து  வரவேண்டும். அப்பொழுது எத்தனை திரள் மக்கள் வந்தாலும், நீங்கள் அவர்களுக்காக கண்ணீரோடு  ஜெபிக்க கர்த்தர் உங்களுக்கு பெலன் தருவார். அவ்வாறு மனப்பூர்வமாக, தெய்வபயத்துடன் செய்வதுதான், தகப்பனுக்கு பிள்ளை செய்யும் ஊழியம். பிரசங்கம் பண்ணினாலும், ஜெபித்தாலும் அல்லது உபவாசம் பண்ணினாலும் சரி. எதைச் செய்தாலும் அதை நாம் மனப்பூர்வமாக செய்யவேண்டும் இயேசு கிறிஸ்துவின் மீது உண்மையான அன்பு வைத்து, தெய்வ பயத்தோடு அவருக்கு ஊழியம் செய்கிற உங்களை நிச்சயமாக பிதாவானவர் கனம்பண்ணுவார் (யோவான் 12:26).
Prayer:
என் தேவனே,

நான் செய்கிற எல்லாவற்றிலும் உமது அன்போடுகூடிய கிருபை வேண்டுமென்று தேடுகிறேன். நான் எப்போதும் உமது பிரசன்னத்திலேயே நிலைத்திருக்க கிருபை செய்தருளும்.  நான் கையிட்டு செய்கிற வேலைகளிலெல்லாம் உம்மை பிரியப்படுத்த தயவு பாராட்டும். நான் உமக்குள் நேர்மையுடனும் உண்மையுடனும் இருந்து அன்புடனும் தேவபயத்துடனும் உமக்கு ஊழியம் செய்ய கிருபை செய்தருளும். முழு இருதயத்துடனும் உம்மை நேசிக்க எனக்கு கிருபை தாரும்.எதிலும் நஷ்டமடையாமலும் சோம்பறித்தனமாகவும் இல்லாமலிருக்க கிருபைசெய்தருளும்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000