Loading...
Samuel Paul Dhinakaran

உடன்படிக்கையின் ஆசீர்வாதம்

Samuel Dhinakaran
25 May
என் நண்பரே, கர்த்தர் உங்களுக்காக ஒரு பெரிய வாக்குறுதியைக் கொண்டுள்ளார். இன்றைய வாக்குறுதி வசனம் “நான் உனக்கும் எனக்கும் நடுவாக என் உடன்படிக்கையை ஏற்படுத்தி, உன்னை மிகவும் திரளாய்ப் பெருகப்பண்ணுவேன் என்றார்” (ஆதியாகமம் 17:2). இது ஆபிரகாமுக்கு தேவன் கொடுத்த வாக்குத்தத்தமாகும். தேவன் வாக்குத்தத்தத்தை எவ்வாறு நிறைவேற்றினார், அவரை எவ்வாறு பெருகச்செய்தார் என்பதை நாம் நன்றாய் அறிந்திருக்கிறோம். இந்த வசனம் தேவனுடைய உடன்படிக்கையின் வல்லமையைப்பற்றி நமக்கு தெளிவாய் கூறுகிறது. தேவனுடைய மனத்தாழ்மையை பாருங்கள்! தேவன் உங்களுடன் உடன்படிக்கை செய்வார் என்று வேதம் கூறுகிறது. உங்கள் விண்ணப்பங்களை நிறைவேற்ற அவர் உங்களை பல ஆண்டுகளாக காத்திருக்கச் செய்யமாட்டார். அவர் உங்களைத் தேடி வந்து உங்களுடன் உடன்படிக்கை செய்வார். இன்றும் அவர் உங்கள் அருகில் இருக்கிறார். 

தேவன் என் தாத்தாவுடன் செய்த உடன்படிக்கையை இன்று வரை காத்து வருகிறார். அந்த உடன்படிக்கையிலிருந்து நாங்கள் விலகுவதற்கு அவர் ஒருபோதும் அனுமதிக்கவில்லை. தலைமுறை தலைமுறையாக நாங்கள் அவர் ஏற்படுத்திய உடன்படிக்கையில் நிலைத்திருக்கிறோம். ஏன் என்று தெரியுமா? தேவனே அதை ஏற்படுத்தி, அதில் எங்களை நிலைத்திருக்கச்செய்கிறார். இன்று எங்கள் குடும்பம் மிகவும் பெருகியிருக்கிறது. மிகப்பெரிய ஆசீர்வாதங்களை காண்கிறது. அதற்காக நான் தேவனுக்கு மிகவும் நன்றி கூறுகிறேன். 
இன்று, தேவன் உங்களுடனும் உடன்படிக்கை செய்வார். அவர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதித்து பெருகச்செய்ய விரும்புகிறார். எத்தனை மகிழ்ச்சி! இந்த ஆசீர்வாதத்தைப் பெற நீங்கள் ஆயத்தமா? உங்களுடன் அவர் உடன்படிக்கையை ஏற்படுத்துவதன் மூலம், கர்த்தர் உங்கள் வாழ்க்கையில் அழகான காரியங்களை செய்வார். இன்று முதல், நீங்கள் கர்த்தருடன் ஐக்கியமாயிருப்பீர்கள். அவருடைய மகிமைக்காக மகத்தான காரியங்களைச் செய்வீர்கள். இந்த உடன்படிக்கையின் ஆசீர்வாதத்தை அனுபவிப்பீர்கள். 
Prayer:
என் அன்பின் பரலோகத் தகப்பனே,

உமது உடன்படிக்கைக்கு நன்றி. உமக்கும் எனக்கும் இடையிலான வாக்குறுதி. உம்மோடு ஐக்கியமாய் என் முழு இருதயத்தோடும் உமக்கு சேவை செய்ய எனக்கு உதவும். ஆண்டவரே, நான் என் வாழ்வை முழுவதுமாக உமது கரத்தில் அர்ப்பணிக்கிறேன். இந்த நாளிலிருந்து நான் உம்மோடு நடக்க ஒப்புக்கொடுக்கிறேன். உமது திரளான பெருக்கத்தின் ஆசீர்வாதங்களை என் வாழ்வின் எல்லா காரியங்களிலிம் நான் அனுபவிக்க உதவும். உமது மகிமைக்காக என்னையும் என் குடும்பத்தினரையும் உபயோகியும். என் வாழ்வில் நீண்ட காலமாக எதிர்பார்க்கிற ஆசீர்வாதத்தை நீர் தரப்போவதற்காக நன்றி.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000