Loading...
Stella ramola

பரிபூரண விடுதலை

Sis. Stella Dhinakaran
26 Sep
அன்பு நண்பரே, நமது ஆண்டவரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். இன்று, தேவன்  உங்களுக்கு ஒரு அழகான வாக்குறுதியை அளித்துள்ளார், இது சங்கீதம் 60:12ல் உள்ளது. "தேவனாலே பராக்கிரமம் செய்வோம்; அவரே எங்கள் சத்துருக்களை மிதித்துப்போடுவார்." இது எவ்வளவு அழகான வாக்குறுதியாகும். உங்கள் வாழ்வின் ஒவ்வொரு  சூழ்நிலைகளிலும் இதைப் பெற நான் உங்களை உற்சாகப்படுத்துகிறேன். தேவன் உங்களோடு  இருக்கும்போது, உங்களுக்கு வேறன்ன வேண்டும்? அவர் நம்மோடிருக்கும்போது எல்லா ஆசீர்வாதங்களும் நம்மைத்  தேடி வரும்.

நாகூம் 1: 7, "கர்த்தர் நல்லவர், இக்கட்டுநாளிலே அரணான கோட்டை; தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார்" என்றும் சங்கீதம் 60:11ல்  "இக்கட்டில் எங்களுக்கு உதவி செய்யும்; மனுஷனுடைய உதவி விருதா" என்றும் தாவீது கூறுகிறார். "தேவனே, என் பிரச்சனையில் எனக்கு உதவும்" என்று அவர் எப்போதும் கர்த்தரிடத்தில் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தார். தாவீதின் நம்பிக்கை என்ன? அவர் பல கஷ்டங்களையும் பயங்கரமான சூழ்நிலைகளையும் கடந்து சென்றாலும் அவர் எப்போதும் கர்த்தரை தன் நம்பிக்கையாக கொண்டிருந்தார் .
சங்கீதம் 71: 5ல், கர்த்தராகிய ஆண்டவரே, நீரே என் நோக்கமும், என் சிறுவயதுதொடங்கி என் நம்பிக்கையுமாயிருக்கிறீர்"  என்றும், 2 சாமுவேல் 4: 9 ல்  "என் ஆத்துமாவை எல்லா இக்கட்டுக்கும் நீங்கலாக்கி மீட்டவர்" என்றும் தாவீது கூறுகிறான் . ஆம், அன்பான நண்பரே, கர்த்தரை நம்புங்கள், அவர் உங்களை எல்லா கஷ்டங்களிலிருந்தும் விடுவிப்பார். சங்கீதம் 34:19 கூறுகிறது, "நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்." அவரையே  உங்கள் நம்பிக்கையாக்குங்கள். அவர் மீது உங்கள் முழு நம்பிக்கையையும்  வைத்திடுங்கள். நீங்கள் பிரச்சனையில் இருக்கும்போது உங்கள் நண்பர்கள் அல்லது  மனிதர்களின் உதவியை நாடாமல், அங்கும் இங்குமாய் அலையாமல், கர்த்தரைத் தேடுங்கள், நீங்கள் ஆசீர்வதிக்கப்படுவீர்கள். அவரை நம்புங்கள். பரிபூரண விடுதலையை பெற்றிடுங்கள்.
Prayer:
அன்பின் தகப்பனே,
 
இந்த அழகான வாக்குறுதிக்கு நன்றி. ஆண்டவரே, எல்லா பிரச்சனைகளிலிருந்தும் நீர் என்னை விடுவிப்பதற்காக நன்றி. நான் உன்னை முழுமையாக நம்புகிறேன். உமது  மகிமைக்காக என்னை விடுவித்தருளும். தாவீதை  போல உம்மோடு  நெருங்கி ஜீவிக்க அருள் தாரும்.
 
இயேசுவின் விலையேறப்பெற்ற நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,
 
ஆமென்.

For Prayer Help (24x7) - 044 45 999 000