உன் வழியை கர்த்தருக்கு ஒப்புவி
Shilpa Dhinakaran
22 Jan
அன்பு நண்பரே, இன்றைய தேவனுடைய வாக்குறுதி, “உன் செய்கைகளைக் கர்த்தருக்கு ஒப்புவி; அப்பொழுது உன் யோசனைகள் உறுதிப்படும்” (நீதிமொழிகள் 16:3). ஆகவே, நீங்கள் இன்று வைத்திருக்கும் ஒவ்வொரு திட்டத்தையும் தேவனிடத்தில் அர்ப்பணித்துவிடுங்கள். உங்கள் வாழ்க்கையில் பெரிய விஷயமாக இருந்தாலும், சிறிய விஷயமாக இருந்தாலும், அதை தேவனுடைய பாதத்தில் சமர்ப்பித்துவிடுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். ஒவ்வொரு நாளும் வேதம் வாசித்து பிரார்த்தனை செய்வது மிகவும் முக்கியம். நாம் தேவனுடைய பாதத்தில் காத்திருந்து, அன்றாட நம்முடைய கவலைகளையும், திட்டங்களையும் அவரது கரத்தில் அர்ப்பணிக்கும்போது, நாம் சமாதானமாயிருக்க முடியும். “அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்” (1 பேதுரு 5:7) என்று வேதம் கூறுகிறது.
நம்மீது இவ்வளவு அக்கறை கொண்ட ஒரு தேவன் நம்மோடு இருக்கும்போது, நம்முடைய பிரச்சினைகளை அல்லது தேவைகளைப்பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? எல்லாவற்றையும் கர்த்தரிடத்தில் ஒப்புவித்துவிடுங்கள். உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு காரியத்தையும் அவர் கவனித்துக்கொள்வார். என் வீட்டில் நான் ஏதாவது விஷயங்களை செய்ய வேண்டியிருக்கும்போது, அது ஒரு புதிய விஷயமாகவோ அல்லது பல ஆண்டுகளாக செய்து வருகிற ஒரு விஷயங்களாகவோ இருந்தாலும், அதைச் செய்ய எனக்கு உதவும்படி நான் ஆண்டவரிடத்தில் கேட்பேன். குறிப்பாக நான் ஏதாவது சமைக்க முயற்சித்தால், “ஆண்டவரே, எனக்கு இதைப்பற்றி எதுவும் தெரியாததால் எனக்கு உதவும்” என்று பிரார்த்தனை செய்வேன். அப்போது கர்த்தர் என்னை ஆசீர்வதிப்பார்.

அதுபோல, உங்கள் தேர்வுகள் அல்லது நீங்கள் தினமும் செய்கின்ற காரியமாக இருந்தாலும், அதை தேவகரத்தில் ஒப்புக்கொடுங்கள். எனக்கு ஒரு தோழி இருக்கின்றார். நாங்கள் ஒவ்வொரு முறையும் தேர்வுகளை எதிர்கொள்ளும்போது, அவள் படிக்க எடுக்கின்ற புத்தகத்தில் வசனத்தை எழுதுவாள். படிப்புக்காக ஒவ்வொரு முறை புதிய புத்தகங்கள் வாங்கும்போதும், புத்தகத்தின் ஆரம்ப தாளில் ஒரு வசனத்தை எழுதுவாள். அவள் படிக்கத் தொடங்குவதற்கு முன்பு ஒவ்வொரு முறையும், “ஆண்டவரே நான் இந்த விஷயத்தை உம்மிடம் அர்பபணிக்கிறேன். இன்று இதை கற்றுக்கொள்ள எனக்கு உதவும்” என்று பிரார்த்தனை செய்வாள். கர்த்தர் அவளுக்கு உதவினார். அவள் தேர்வில் சிறந்து விளங்கினாள். அதேபோல், நீங்கள் வேலை தேடுகிறவரானால், அதை தேவகரத்தில் ஒப்புக்கொடுங்கள். கர்த்தர் உங்களையும் ஆசீர்வதிப்பார். தேவனுக்கு நன்றி சொல்லுங்கள். இன்றைய வாக்குறுதி வசனத்தை விசுவாசியுங்கள்.
Prayer:
கர்த்தராகிய இயேசுவே,
இந்த வாக்குறுதிக்கு நன்றி. நான் வாழ்க்கையில் பல விஷயங்களுக்காக காத்திருக்கிறேன். நான் எனது வழிகள் அனைத்தையும் உமது கரத்தில் அர்ப்பணிக்கிறேன். எல்லாவற்றையும் உமது பொற்பாதத்தில் வைக்கிறேன். இனி என் தேவைகளைக்குறித்து நான் கவலைப்பட போவதில்லை. நான் எடுக்கின்ற ஒவ்வொரு முயற்சிகளையும் ஆசீர்வதியும். நான் செய்கின்ற எல்லாவற்றிலும் உமது பிரசன்னத்தை உணர கிருபை செய்தருளும். எப்பொழுதும் என்னோடுகூடவே இருந்தருளும்.
இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,
ஆமென்.