Loading...
Stella dhinakaran

தேவனுடைய வாக்குறுதிகளை பற்றிக்கொள்!

Sis. Stella Dhinakaran
04 Sep
அன்பானவர்களே, நான் தலைவலியிலே கஷ்டப்படுகிறேனே, கொடிய வியாதியிலே வாடுகிறேனே என்று வேதனையோடிருக்கிறீர்களா? இந்த வேத வசனங்களை உங்களுக்கென்று எடுத்துக்கொள்ளுங்கள். வேதவசனங்களை கண்டுபிடிக்கிறவர்களுக்கு அவைகள் ஜீவனும், அவர்கள் உடலுக்கெல்லாம் ஆரோக்கியமுமாம் (நீதிமொழிகள் 4:20-22) என்று வேதம் கூறுகிறபடி, தேவனுடைய வார்த்தை உங்களை ஆரோக்கியப்படுத்துகிறது. “உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான். அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்; அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்; அவருடைய சத்தியம் உனக்கு பரிசையும் கேடகமுமுhகும். இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும், மத்தியானத்தில் பாழக்கும் சங்காரத்துக்கும் பயப்படாதிருப்பாய்” (சங்கீதம் 91:1,4,5). ஆம், உன்னதமானவரின் நிழல் உங்கள்மேல் தங்குகிறது. அவர் தமது சிறகுகளாலே உங்களை மூடுகிறார். அவருடைய செட்டைகளின் கீழே உங்களுக்கு அடைக்கலம் உண்டாகிறது. நீங்கள் எந்த நோய்க்கும் பயப்படாதிருக்க அருள்செய்கிறார். 

“....நாம் தைரியங்கொண்டு: கர்த்தர் எனக்கு சகாயர், நான் பயப்படேன்...” (சங்கீதம் 118:6) என்று நீங்களும் சொல்லலாமே! அப்படியாய் தாவீதைப்போல கர்த்தரை உறுதியாய் பற்றிக்கொள்ளும்போது, அவர் உங்கள் பயத்தையெல்லாம் எடுத்துப்போடுவார். உங்களுக்கு விடுதலை சுகம், ஆரோக்கியம் யாவற்றையும் சம்பூரணமாய் கொடுப்பார். பல வருடங்களுக்கு முன்பு ஒரு தேவ ஊழியரின் மனைவி உதிர ஊறல் என்ற வியாதியினால் மிகவும் கஷ்டப்பட்டார்கள். மருத்துவர் அவர்களை பரிசோதித்துவிட்டு, கர்ப்பப்பையை உடனே எடுத்து விட வேண்டும் என்றார்கள். வீட்டார் அனைவரும் மருத்துவரின் கூற்றுப்படி, கர்ப்பப்பையை எடுத்துவிடலாம். இல்லாவிட்டால் புற்றுநோய் வந்துவிடும் என்கிறார்களே என்று பயந்தார்கள். ஆனால், அந்த தேவனுடைய ஊழியக்காரரின் மனைவியோ, “நான் என் முழுநம்பிக்கையையும் எனக்கு தர வல்ல ஆண்டவர்மேலேயே வைத்திருக்கிறேன். இதைக் குறித்து நான் பயப்படேன். இந்த சரீர உபத்திரவத்திலிருந்து, அவர் நிச்சயம் என்னை முற்றிலும் விடுதலையாக்குவார். எனக்கு ஆரோக்கியம் தருவார்” என்று ஆண்டவர் இயேசுவின் அன்பினால்,  விசுவாசத்தினால் நிறைந்து கூறினார்கள். ஆண்டவர், அவர்கள் தம்மீது கொண்டிருந்த உறுதியான விசுவாசத்தின்படியே அவர்களை பரிபூரணமாய் சுகமாக்கினார். பல வருடங்களுக்கு பிறகு அதே மருத்துவர் அந்த தேவ ஊழியரின் மனைவி மிகுந்த ஆரோக்கியத்தோடு இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தனர்.
 “இதோ, நான் அவர்களுக்கு சவுக்கியமும் ஆரோக்கியமும் வரப்பண்ணி, அவ்hகளை குணமாக்கி, அவர்களுக்கு பரிபூரண சமாதானத்தையும் சத்தியத்தையும் வெளிப்படுத்துவேன்” (எரேமியா 33:6) என்ற ஆண்டவர் வாக்குதான் எத்தனை உண்மை! ஆம், ஆண்டவர் அவர்களை மருத்துவரே ஆச்சரியப்படும் வண்ணம் சுகமாக்கி, ஆரோக்கியம் நல்கினார். “நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னை பலப்படுத்தி உனக்கு சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலது கரத்தினால் உன்னைத் தாங்குவேன்” (ஏசாயா 41:10) என்று கர்த்தர் வாக்கருளியிருக்கிறார். அவரது வாக்கை மாத்திரம் நீங்கள் உறுதியாகப் பிடித்துக்கொள்ளுங்கள். நீங்கள் விடுதலையோடு, ஆரோக்கியத்தோடு வாழ்வீர்கள். “தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே (2 கொரிந்தியர் 1:20).
Prayer:
அன்பின் தேவனே,

உமது வாக்குறுதிகளை நான் விசுவாசிக்கிறேன். நான் உம்மையே நம்பியிருக்கிறேன். இந்த நோயிலிருந்து என்னை விடுவித்தருளும். எல்லா கஷ்டங்களிலிருந்தும் என்னை விடுவித்தருளும். எனக்கு பூரண ஆரோக்கியத்தை தந்து குணமாக்கும். என்னை பெலப்படுத்தி, நீர் எனக்கு தருவேன் என்று வாக்குறுதியளித்த நீண்ட ஆயுளை நான் பெற்று ஆசீர்வாதமாய் வாழ கிருபை செய்தருளும். நீர் என்னை கைவிடாதிரும். உமது வல்லமையுள்ள கரத்தால் என்னை உயர்த்தும். 

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000