Loading...
Paul Dhinakaran

இனிய சொற்கள்!

Dr. Paul Dhinakaran
10 Jun
பிரியமானவர்களே, மரணமும், ஜீவனும் நாவின் அதிகாரத்தில் உள்ளது. இதை நேசிப்பவர்கள் இதன் கனிகளைப் புசிப்பார்கள். பட்டயக்குத்துகள் போல் பேசுகிறவர்களும் உண்டு (நீதிமொழிகள் 12:18; 18:21) என்று வேதம் கூறுகிறது. ஞானமுள்ளவர்களுடைய நாவு ஒளஷதம் என்று வேதம் கூறுகிறது. நம்முடைய நாவு ஒரு கூர்மையுள்ள பட்டயமாயிருக்கிறது. பின் விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் பேசுகிற வார்த்தைகள் பட்டயத்தைப் போன்றது. இந்த பட்டயத்தின் மூலம் அநேகரை நாம் காயப்படுத்துகிறோம். நீங்கள் வசதி வாய்ப்புகளில், பதவியில், படிப்பில் மிகவும் உயர்ந்தவராக இருக்கலாம். ஆனால் நீங்கள் ஒருவரை கடினமாய் பேசும்போது, நீங்கள் இதுவரை செய்த நற்செயல்கள் யாவும் ஒன்றுமில்லாமல் பலனற்றதாகி விடும். மாறாக, நீங்கள் பொறுமையை கைக்கொண்டு, அமரிக்கையான வார்த்தைகளை பேசினால், அதை கேட்கிறவர்களுக்கு அந்த வார்த்தைகள் ஒளஷதமாயிருக்கும். “இனிய சொற்கள் தேன்கூடுபோல  ஆத்துமாவுக்கு மதுரமும், எலும்புகளுக்கு ஒளஷதமுமாகும்” (நீதிமொழிகள் 16:24).

என் தந்தை வளர்ந்த சிறிய பட்டணத்தில், அரசு மருத்துவமனை ஒன்று இருந்தது. அங்கு யாரும் எந்த மருத்துவ உதவியும் பெற்றதில்லை. யாராவது தலைவலிக்காக சென்றால், மருத்துவ உதவியாளர்கள், “இது ஆபத்தான நோய்: வேறு மருத்துவமனைக்குச் செல்லுங்கள்” என்று கூறி அனுப்பிவிடுவார்கள். சில காலம் கழித்து, அங்கு ஒரு புதிய மருத்துவர் வந்தார். அவர் மிகவும் சுறுசுறுப்பாகவும், கவனமாகவும் அவர்களது சுகவீனத்தைக் குறித்துக் கேட்டு, “இது ஒரு சாதாரண நோய் தான். எளிதில் குணமாகிவிடும்; கவலைப்படாதிருங்கள்” என்பார். அவரது மதுருக்கமும், பரிவும் நிறைந்த வார்த்தைகளே, அவர்களது நோயைக் குணமாக்கிவிடும். அவரது இனிய சொற்கள், ஜனங்களின் ஆத்துமாக்களுக்கு தேன் கூடுபோல் மதுரமும், ஒளஷதமாகி, அவர்களுக்கு நம்பிக்கையைக் கொடுத்தது.
ஆம் பிரியமானவர்களே, இனிய வார்த்தைகள் ஒருவரின் வாழ்க்கையில் சமாதானத்தையும் சந்தோஷத்தையும், நம்பிக்கையையும் கொண்டுவரும். அந்த வார்த்தைகளே அவர்களை குணமாக்கிவிடும். உங்கள் வார்த்தையில் நீங்கள் மிகவும் கவனமாய் இருக்க வேண்டும். உங்கள் வார்த்தையானது பொறுமையுள்ளதாயும், மற்றவர்களின் உணர்வை காயப்படுத்தாதபடிக்கும் காணப்பட வேண்டும். கூடுமானவரை உங்களுடைய வார்த்தைகள் நம்பிக்கையும், சந்தோஷமும் மற்றவர்களின் முகத்தில் புன்னகையையும் கொண்டுவரக்கூடியதாக இருக்க வேண்டும். நன்மையை காணும்படி அபேட்சிக்கிறவன் தங்கள் நாவையும், வார்த்தையையும் காத்துக்கொள்ள வேண்டும். “ஜீவனை விரும்பி, நல்ல நாட்களைக் காண வேண்டுமென்றிருக்கிறவன் பொல்லாப்புக்குத் தன் நாவையும், கபடத்துக்குத் தன் உதடுகளையும் விலக்கிக்காக்க வேண்டும்” (1 பேதுரு 3:10). ஒரு இனிய வார்த்தையானது, தேன் கூட்டைப் போன்றும், தேவனிடமிருந்து ஆத்துமாவுக்கு கிடைக்கிற இனிய வார்த்தைகளைப் போலவும் எலும்புகளுக்கு ஒளஷதமாகவும் இருக்கிறது. ஆகவே, தேவனிடத்தில் ஆரோக்கியமும், ஆறுதலும் நிறைந்த வார்த்தைகளால் உங்கள் வாயை நிரப்பும்படி மன்றாடுங்கள். 
Prayer:
அப்பா பிதாவே,

இந்த நாளிலும் நான் சந்திக்கிறவர்களிடம் ஆத்துமாவுக்கு மதுரமும், எலும்புகளுக்கு ஒளஷதமுமான இனிய வார்த்தைகளையே பேச தயவாக எனக்கு உதவி செய்யும். என் வாயிலிருந்து வருகிற சமாதானமும், மகிழ்ச்சியும் நிறைந்த வார்த்தைகள் உம்மை சந்தோஷப்படுத்துவதாக இருக்க கிருபை செய்தருளும். மதியீனமான வார்த்தைகளை நான் பேசாதபடி காத்தருளும்.
இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல  பிதாவே,
ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000