Loading...
Evangeline Paul Dhinakaran

இயேசுவை நோக்கி கூப்பிடு!

Sis. Evangeline Paul Dhinakaran
25 May
நாம் தேவனை தேட முடியாத இடத்தில் அவர் மறைந்திருக்கவில்லை. நாம் தொடர்பு கொள்ளமுடியாத இடத்தில் அவரில்லை. நம் நினைவுகளை பார்க்கிலும் அவர் நமக்கு மிக அருகில் இருக்கிறார். நீங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொள்ளும்போது, அவர் பரிசுத்த ஆவியானவராக உங்களுக்குள்ளே வாசம்பண்ணுவார். நாம் நினைப்பதற்கும் வேண்டிக்கொள்வதற்கும் முன்னமே நம் நினைவுகளை அவர் அறிந்திருக்கிறார். தேவன் நமக்கு அநுகூலமான துணையுமானவர் (சங்கீதம் 46:1). அவர் ஒருபோதும் தமது பிள்ளைகளை விட்டு விலகமாட்டார். தேவைகளின் மத்தியில் நாம் தேவனை நோக்கிப் கூப்பிட வேண்டும். அவர் நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்வார். தேவபிரசன்னத்தை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? அவர் உங்களோடு பேசுகிறாரா? இல்லையென்றால், இன்று அவரை நோக்கிக் கூப்பிடுங்கள். அவரது பிரசன்னம் உங்களோடு இருப்பதை வெளிப்படுத்தும்படி அவரிடத்தில் கேளுங்கள். அவர் நிச்சயமாக வெளிப்படுத்துவார். தம்மை நோக்கிக் கூப்பிடுகிற அனைவருக்கும் அவர் சமீபமாயிருக்கிறார் (சங்கீதம் 145:18).

சட்டீஸ்கர் மாநிலத்தில் அம்பிகாபூரில், “இயேசு அழைக்கிறார் பிரார்த்தனை கூட்டம்” நடைபெற்றது. அங்கு லீலாவதி என்ற சகோதரி கர்ப்பப்பையில் கட்டியோடு வந்திருந்தார்கள். ஜெபநேரத்தில் பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்பட்டபொழுது, “ஆண்டவரே, நீர் என்னை சுகமாக்கும்” என்று அவர்களும் ஜெபித்தார்கள். கர்த்தர் இரக்கமாக அவர்களை சுகமாக்கினார். அவர்கள் மறுநாள் சாட்சி சொல்ல வராமல் நன்றாக பரிசோதித்துப் பார்த்துவிட்டு மூன்றாவது நாள் ஸ்கேன் ரிப்போட்டுடன் வந்து, “என் வயிற்றில் “நார்த்திசு கட்டி” இருந்தது. அதினிமித்தம் அதிக வயிற்றுவலி இருந்தது. கூட்டத்தில் நான் இருந்தபொழுது, பரிசுத்த ஆவியானவர் என்மீது இறங்கினார். அப்பொழுது என் வயிற்றிலிருந்த அந்தக் கட்டி பலூன் போன்று பெரிதாகி, வெடித்துவிடுவது போன்ற உணர்வு ஏற்பட்டது. அவ்வளவுதான்! நாம் இறந்துவிடுவோம் என்று பயந்தேன். ஆனால், அந்தக் கட்டி உடைந்து மூக்கு வழியாக இரத்தம் வடிந்தது. அதற்குப்பின் வயிற்றுவலி சுகமானது. நம்பிக்கையோடு உடனே மருத்துவரிடம் ஓடினோம். அவர் திரும்ப பரிசோதித்துப் பார்த்தபொழுது, ‘நார்த்திசு கட்டிகள் எதுவும் இல்லை” என்று மருத்துவர் கூறினாரென்று சாட்சி கூறினார்கள். தேவனுக்கே மகிமை!
தேவனிடத்தில் அன்புகூருகிற நமக்கு அவர் ஆயத்தம்பண்ணிவைத்திருக்கிற நன்மைகளை கண்கள் கண்டதுமில்லை. காதுகள் கேட்டறிந்ததுமில்லை. ஒருவருடைய இருதயத்திலும் அது தோன்றவுமில்லை என்று வேதம் கூறுகிறது. (1 கொரிந்தியர் 2:9). ஆம், அவர் பெரிய அதிசயத்தை உங்கள் வாழ்வில் செய்வார். உங்கள் கண்களாலே அதை நம்ப முடியாது. “என்னை நோக்கி கூப்பிடு, அப்பொழுது நீ அறியாத பெரிய காரியங்களை உனக்கு நான் செய்வேன்”(எரேமியா 33:3) என்று கூறியிருக்கிற ஆண்டவரை நோக்கிக் கூப்பிடுங்கள். உங்கள் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்க்கும் (ஏசாயா 58:8). நீங்கள் தேவனை சந்திப்பதற்கு எவ்வித அனுமதியும் தேவையில்லை. நம் வாழ்வில் மிக முக்கியமான நபராகிய அவர் நம்முடைய மரியாதைக்கு மிகவும் தகுதியானவர் என்றாலும், அவர் ஒருபோதும் அவ்வாறு நடந்து கொண்டதில்லை. நாம் அவருக்கு எவ்வளவு சிறப்பு வாய்ந்தவர்களாயிருந்தால், அவர் தமது சிங்காசனத்தை விட்டு, மனிதனாக இந்த பூமிக்கு இறங்கி வந்திருப்பார். நீங்கள் அவரை நோக்கிக் கூப்பிடும்போது அவர் கேட்காமலிருப்பாரா? நிச்சயமாக பதில் கொடுப்பார். உங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவார். 
Prayer:
அன்பின் தேவனாகிய இயேசுவே,

நீர் என்னுடைய பிரார்த்தனைக்கு பதிலளிக்கிறவர் என்பதை நான் விசுவாசிக்கிறேன். என் மனவேதனைகள் யாவற்றையும் உம்மிடத்தில் ஒப்புவிக்கிறேன். என் தேவைகள் யாவையும் உமது மகிமையிலே நிறைவாக்கும். உம்மால் கூடாதது ஒன்றுமில்லை. நான் உம்மை தொடர்பு கொள்ள முடியாத தொலைவில் நீர் இல்லை. விசுவாசத்துடன் கேட்கிறேன், என் வாழ்வில் ஒரு அற்புதம் செய்தருளும். என் விண்ணப்பங்களை கேட்டு எனக்கு பதில்கொடுத்ததிற்காக உமக்கு நன்றி.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000