Loading...

கிறிஸ்துவே வழி

Stella Ramola
09 Apr
அன்பு நண்பரே, லேவியராகமம் 26:11லிருந்து தேவனுடைய வார்த்தையை பகிர்ந்துகொள்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. “உங்கள் நடுவில் என் வாசஸ்தலத்தை ஸ்தாபிப்பேன்” என்று கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களுக்கு கொடுத்த வாக்குறுதி இது. தேவன் தம் ஜனங்கள் மத்தியில் வாசம்பண்ணுவதால், அவர்களுக்காக போராடுவதால் அவர்களுக்கு எந்தவொரு தீங்கும் ஏற்படாது என்று தேவனிடமிருந்து அவர்கள் வாக்குறுதி பெற்றிருந்தார்கள். ஆம், பிரியமானவர்களே, இந்த வாக்குத்தத்தம் இஸ்ரவேலருக்கு மட்டுமல்ல, இந்த வாக்குறுதி இப்போது உங்களுக்கும் தேவன் தருகிறார். தேவன் உங்களோடு வாசம்பண்ணுகிறார். 2 கொரிந்தியர் 6:16ல் நாம் காண்கிறோம், “நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி, அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பாhகள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்கள்.” 

நாம் தேவனுடைய ஆலயம் என்பதால் மேற்கண்ட வசனத்தின்படி, அவர் நம்மோடு வாசம்பண்ணுகிறார். நம்முடைய இருதயத்திற்குள் ஜீவனுள்ள தேவனாகிய இயேசு வாழ்கிறார். இன்றும் ஒருவேளை “இந்த பிரபஞ்சத்தைப் படைத்த இவ்வளவு பெரிய தேவன் என்னை நினைவில் வைத்திருபபாரா?” “அவர் அநேக காரியங்களை செய்யும்போது, என் ஜெபத்iயும் கேட்பாரா?” என்று நீங்கள் சிந்திக்கலாம். ஆனால், என் நண்பரே, நீங்கள் இயேசுவை விசுவாசிக்கும்போது, தேவனுடைய ஆலயமாகிய உங்களுக்குள் இயேசு வாசம்பண்ணுகிறார். எபேசியர் 2:22ல் வேதம் கூறுகிறது, “அவர்மேல் நீங்களும் ஆவியினாலே தேவனுடைய வாசஸ்தலமாகக் கூட்டிக்கட்டப்பட்டு வருகிறீர்கள்.”
ஆகவே, தேவன் உங்களை தமது ஆலயமாக கட்டி எழுப்பியிருப்பதால், அவரிடத்திலிருந்து உங்களை எதுவும் பிரிக்க முடியாது. தேவ ஆவியும், உங்களுடைய ஆவியும் ஒன்றாக கட்டப்பட்டிருக்கிறது. ஆகவே, கவலைப்படாதிருங்கள். தேவன் உங்களுடைய பிரார்த்தனையை கேட்கிறார் என்று ஆச்சரியப்பட வேண்டாம். அவர் உங்களில் வாசம்பண்ணுகிறார். அதற்காகவே அவர் இந்த உலகத்திற்கு வந்தார். கர்த்தரே உங்கள் வழிகாட்டியாக இருப்பார். அவரே உங்களை போதித்து நடத்துவார். நீங்கள் நடக்க வேண்டிய பாதையை உங்களுக்கு காண்பிப்பார். அவர் உங்களில் வாழவும், உங்களோடு வாசம்பண்ணவும், உங்களோடு உலாவவும், ஐக்கியம் கொள்ளவுமே இந்த பூமிக்கு வந்தார். ஆகவே எதைக்குறித்தும் கலங்காமல், கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருங்கள். எந்தவொரு காரியமும் அவரிடத்திலிருந்து உங்களை பிரிக்க முடியாது. உற்சாகமாயிருங்கள்.
Prayer:
அன்பின் தேவனே,
 
நீர் எனக்குள் வந்து வாசம்பண்ணும். என் அச்சங்கள் யாவற்றையும் நீக்கியருளும். உம்முடன் நடக்கவும், பேசவும், எனக்குள் இருக்கும் உமது பிரசன்னத்தை உணரவும் உதவும். ஒவ்வொரு நாளில் சிறிய காரியங்களிலும்கூட உமது பிரசன்னம் என்னோடிருப்பதை நான் உணரட்டும். உமது சத்தத்தை கேட்டு உமக்கு கீழ்ப்படிந்து நடக்கிற கிருபையை எனக்குத் தந்தருளும். எதுவும் உம்மிடமிருந்து என்னை பிரிக்க முடியாது என்பதற்கு நன்றி.
 
இயேசுவின் விலையேறப்பெற்ற நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,
 
ஆமென்.

For Prayer Help (24x7) - 044 45 999 000