Loading...
Stella ramola

நற்சீர் உண்டாகும்

Sis. Stella Dhinakaran
10 May
அன்பு நண்பரே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். இன்று, எசேக்கியேல் 36:11லிருந்து தேவன் அழகான ஒரு வாக்குத்தத்தத்தை நமக்கு தந்துள்ளார். “உங்கள்மேல் மனுஷரையும் மிருக ஜீவன்களையும் பெருகிப் பலுகும்படி வர்த்திக்கப்பண்ணுவேன்; பூர்வநாட்களில் நீங்கள் இருந்த நிலைமையில் நான் உங்களை ஸ்தாபித்து, உங்கள் முந்தின சீரைப்பார்க்கிலும் உங்களுக்கு நற்சீர் உண்டாகச்செய்வேன்; அதினால் நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.” உங்களை பெருகிப் பலுகும்படி செய்ய கர்த்தரிடத்தில் வல்லமை உண்டு. “கர்த்தர் நன்மையானதைத் தருவார்; நம்முடைய தேசமும் தன் பலனைக் கொடுக்கும்” (சங்கீதம் 85:12).

இவைகள் தேவன் உங்களுக்கு அளித்த வாக்குறுதிகள். கர்த்தர் தமது வாக்குறுதியிலிருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டார். ஆகவே, நீங்கள் வேத வசனங்களை வாசிக்கும்போது, வாக்குத்தத்தங்களை உரிமையாக்கி உங்கள் ஆசீர்வாதத்திற்காக ஜெபிக்க வேண்டும். சங்கீதம் 23:1ல் தாவீது, “கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன்” என்று எழுதுகிறார். அவரே தொடர்ந்து கர்த்தர் என் கன்மலையும், என் இரட்சகரும், என் மறைவிடமுமானவர் என்று எழுதுகிறார். சங்கீதம் 91:1 & 16ம் வசனத்தில், “உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான்” என்றும், கர்த்தர் “நீடித்த நாட்களால் அவனை திருப்தியாக்கி, என் இரட்சிப்பை அவனுக்குக் காண்பிப்பேன்” என்றும் கூறுகிறார்.
கர்த்தரே உங்களுக்கு ஆரோக்கியமும், ஆசீர்வாதமுமாய் இருப்பார். இயேசு உங்களோடிருக்கும்போது அவருடைய ஆசீர்வாதங்களும் உங்களோடிருக்கும். “கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான்” (சங்கீதம் 128:1). நீங்கள் கர்த்தருக்கு பயந்து நடந்தால் அவர் உங்கள்மீது பிரியமாயிருப்பார். அவர் உங்கள் வாழ்க்கையை கவனித்துக்கொள்வார்.  நீங்கள் நினைப்பதற்கும் வேண்டிக்கொள்வதற்கும் பல மடங்கு அதிகமாய் அவர் உங்களை ஆசீர்வதிப்பார் (எபேசியர் 3:20). ஆகவே, “அப்பா, பிதாவே, நீர் என்னை ஆசீர்வதித்து பெருகிப் பலுகும்படி வாத்திக்கப்பண்ணும். நான் உம்மை பின்பற்றி உமக்கு முன்பாக ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ விரும்புகிறேன். நீரே எனக்கு சகலமுமாயிருந்தருளும். இப்போதே என் வாழ்வை உமது பாதத்தில் அர்ப்பணிக்கிறேன் என்று இன்று கர்த்தரிடத்தில் கேளுங்கள்.” அவர் உங்களை ஆசீர்வதிப்பார். 
Prayer:
அன்பின் தகப்பனே,

உமது அன்பிற்கு நன்றி.  என்னை உமது பிள்ளையாக மாற்றும். உமது விலையேறப்பெற்ற இரத்தத்தினால் என்னை சுத்திகரித்தருளும் என் வாழ்க்கையை உமது கரத்தில் அர்ப்பணிக்கிறேன் என்னை ஆசீர்வதித்து உமக்காக உபயோகியும். உமது வாக்குறுதியின்படி என்னை உயர்த்தும். உமது பார்வைக்கு முன்பாக மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ எனக்கு உதவும். 
இயேசுவின் விலையேறப்பெற்ற நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000