Loading...
Dr. Paul Dhinakaran

இயேசுவின் இரத்தம்!

Dr. Paul Dhinakaran
15 Dec
பிரியமானவர்களே, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மீட்பின் வாசலாயிருக்கிறார். அந்த மீட்பின் வாசலுக்குள் நுழைகிறவர்கள் இரட்சிக்கப்படுவார்கள்.  “நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்” (யோவான் 10:9) என்று அவரே கூறியிருக்கிறார். “திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்” (யோவான் 10:10) என்று கூறுகிறார். “இயேசுவின் இரத்தம் சகல பாவங்களிலிருந்தும் நம்மை பரிசுத்தமாக்கும் (1 யோவான் 1:7) என்று வேதம் கூறுகிறது. கோயம்புத்தூரைச் சேர்ந்த திரு குணசேகரன் தனது குடிப்பழக்கத்திலிருந்து இயேசுவால் எவ்வாறு விடுவிக்கப்பட்டார் என்பதை கீழே வாசிப்போம். 

“ என் பெயர் குணசேகரன். திருப்பூர், பல்லடம் பகுதியில் வசித்து வருகிறேன். நான் 28 வருடங்களாக குடிப்பழக்கத்திற்கு அடிமைப்பட்டிருந்தேன். எனக்கு 1997-ம் வருடம் திருமணம் நடைபெற்றது. என் மனைவிதான், என்னுடைய விடுதலைக்காக அதிகமாக ஜெபித்தாள். நானோ, ஊழியர்களை குறித்து எப்போதும் கேலி செய்வேன். எனக்கு சிரங்கு போன்ற ஒரு வியாதி இருந்தது.  என் மனைவி பெதஸ்தா ஜெப மண்டபத்திற்கு என்னை அழைத்து சென்றாள். அங்கு எனக்காக அதிகமாக ஜெபித்தார்கள். ஆண்டவர் எங்கள் ஜெபத்தைக் கேட்டு அதிலிருந்து விடுதலை கொடுத்தார். என்னுடைய குடிப்பழக்கத்தினால், 17 வருடங்கள் ஒருவேளை சாப்பாட்டிற்குகூட வழியில்லாமல் இருந்தோம். 2017-ம் ஆண்டில் திருப்பூரில் ‘இயேசு அழைக்கிறார்’ கூட்டம் நடைபெற்றது. அப்பொழுது னுச.பால் தினகரன், “குடி என்னும் பிசாசே அப்பாலே போ,“ என்று கூறினார். உடனே நான் மயங்கி விழுந்தேன். ஏதோ ஒன்று என்னைவிட்டு வெளியேறியது. நான் மறுபடியும் எழுந்து ஜெபித்தபோது எனக்கு ஒரு பெரிய விடுதலை கிடைத்ததுபோல இருந்தது. “ஆண்டவர் உங்களுக்கு பிசாசுகளை அகற்றும் வல்லமையைத் தருவார்.” என்றும்,  னுச.பால் தினகரன் கூறினார். குடியிலிருந்து ஆண்டவர் படிப்படியாக எனக்கு விடுதலை கொடுத்தார். இயேசு என்னை தொட்டபின் என் வாழ்க்கை மாறினதுமல்லாமல், வாழ்க்கையில் பாடுகள், வியாதிகளினால் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பவர்களை பெதஸ்தா ஜெபமண்டபத்திற்கு அழைத்து வருகிறேன். குடியிலிருந்து விடுதலை பெற்றதுமல்லாமல், சகோதரர் பால் தினகரன் தீர்க்கதரிசனமாக கூறியதுபோன்றே, பிசாசினால் அலைக்கழிக்கப்பட்டவர்களுக்கு நான் ஜெபிக்கும்போது கர்த்தர் அவர்களை விடுதலையாக்குகிறார்.”
பிரியமானவர்களே, உங்கள் வாழ்க்கையை மாற்றுகிற இயேசுவே பரிசுத்தத்தின் வாசல். அவர் தமது நாமத்தையும், தமது இரத்தத்தையும், தமது வார்த்தையையும் உங்களுக்கு கொடுத்திருக்கிறார். தீமையிலிருந்து நம்மை காத்துக்கொள்வதற்கு இந்த ஆயுதங்கள் நமக்கு தேவையாயிருக்கிறது. ஏனென்றால், “நம்முடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்குத் தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது” (2 கொரிந்தியர் 10:4). ஆகவே சோர்ந்துபோகாதிருங்கள்! தேவனுடைய சுதந்திரத்தையும், உங்கள் அன்புக்குரியவர்களின் விடுதலையையும் அனுபவியுங்கள். 
Prayer:
பரலோக தகப்பனே,

நான் இவ்வளவு காலம் செய்த பாவத்தினால், பிசாசுக்கு இடங்கொடுத்ததற்காக வருந்துகிறேன். ஆண்டவரே, குமாரனாகிய இயேசு கிறிஸ்து தமது பரிசுத்த இரத்தத்தை சிலுவையில் சிந்தி, எனக்கு பாவமன்னிப்பை கொடுத்திருக்கிறார். தேவனுடைய மன்னிப்பையும், சுத்திகரிக்கும் வல்லமையையும் நான் நம்புகிறேன். என் பாவத்தை மன்னித்தருள வேண்டுமென்று ஜெபிக்கிறேன். பாவத்தை வெறுக்க எனக்கு உதவும். நான் உம்மீது கொண்டிருக்கும் அன்பு என் வாழ்நாள் முழுவதும் பெருகும்படி ஜெபிக்கிறேன். 

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000