Loading...
Stella ramola

அளவில்லாமல் ஆசிர்வதிக்கப்படுங்கள்

Sis. Stella Dhinakaran
15 Sep
அன்பு நண்பரே, நமது ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். இன்று, சங்கீதம் 4: 7 என்ற வாக்குத்தத்த வசனத்தைப் பற்றி தியானிப்போம், "அவர்களுக்குத் தானியமும் திராட்சரசமும் பெருகியிருக்கிறகாலத்தின் சந்தோஷத்தைப்பார்க்கிலும், அதிக சந்தோஷத்தை என் இருதயத்தில் தந்தீர்." இது தேவனிடமிருந்து நாம் பெறும் முழு ஆசீர்வாதத்தைக் குறிக்கிறது. எப்பக்கத்திலும் அளவற்ற செழிப்பை இது குறிக்கிறது.  “என் வாழ்க்கையில் அப்படி இல்லை. நான் சிக்கலில் இருக்கிறேன். என் வாழ்க்கையில் எதுவுமே எனக்கில்லை" என்று நீங்கள் சொல்லலாம்.

சங்கீதம் 4: 1ல், "என் நீதியின் தேவனே, நான் கூப்பிடுகையில் எனக்குச் செவிகொடும்" என்று வாசிக்கிறோம். என் துக்கத்திலிருந்து எனக்கு விடுதலை தாரும். என் மீது இரக்கம் வைத்து என் பிரார்த்தனையை கேளும். " பல நேரங்களில் நாம் துன்பத்தை அனுபவிக்கிறோம். நம் பிரச்சனைகளை தாங்க முடியாமல், "ஆண்டவரே, எனக்கு உதவும்" என்று அழுகிறோம். சங்கீதம் 34:19 -ல், "நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்" என்று வாசிக்கிறோம். ஆம், அன்பான நண்பரே, நீங்கள் நீதியான வாழ்க்கையை வாழ வேண்டும், அப்போது தேவன் உங்களைப் பார்த்து மகிழுவார். உங்கள் தேவைகளை பூர்த்தி செய்வார் மற்றும் அனைத்து  பிரச்சனைகளிலிருந்தும் உங்களை விடுவிப்பார். உங்கள் பிரச்சனைகளைப் பற்றி நீங்கள் இனி வருத்தப்படமாட்டீர்கள், ஏனென்றால் உங்கள் நீதியான வாழ்க்கையைப் பார்த்து கர்த்தரே உங்களை விடுவிப்பார்.
யோவான் 16:24 கூறுகிறது, “இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை; கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள்.” வசனம் சொல்வது போல் நீங்கள் உங்கள் ஆசீர்வாதங்களைக் கேட்க வேண்டும். சங்கீதம் 40:16ல், நீங்கள் கர்த்தரைத் தேட வேண்டும் என்று கூறுகிறது, “உம்மைத் தேடுகிற அனைவரும் உமக்குள் மகிழ்ந்து சந்தோஷப்படுவார்களாக; உம்முடைய இரட்சிப்பை விரும்புகிறவர்கள் கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக என்று எப்பொழுதும் சொல்வார்களாக." இன்றைய வாக்குறுதியின்படி தேவன் உங்களை ஆசீர்வதிப்பார். உங்கள் முழு இருதயத்தோடும் கர்த்தருக்கு  நன்றி செலுத்துங்கள், அவர் உங்கள் தேவையை பார்க்கிலும் அதிகமாய் உங்களை ஆசீர்வதிப்பவர். ஆகவே தேவனுடைய ஆசீர்வாதங்களை விசுவாசித்து பாக்கியம் பெறுங்கள்.
Prayer:
அன்பின் தகப்பனே,

இந்த அழகான வாக்குறுதிக்கு நன்றி. என் கஷ்டங்கள் அனைத்தையும் உமது கரத்தில்  அர்ப்பணிக்கிறேன். என் எல்லா பிரச்சனைகளிலிருந்தும் என்னை விடுவித்தருளும். உம்மைத் தேடுவதற்கு எனக்கு அருள் தாரும். நான் நினைப்பதற்கும் வேண்டிக்கொள்வற்கும் மிகவும் அதிகமாய் என்னை ஆசீர்வதித்து மகிழ்வித்தருளும்.

இயேசுவின் விலையேறப்பெற்ற நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே, 

ஆமென்.

For Prayer Help (24x7) - 044 45 999 000